

ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் (dannyblum) தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் பெகிடா என்ற அமைப்பு இஸ்லாத்துக்கு எதிரான வியூகங்களை அமைத்து அங்கிருந்து இஸ்லாத்தை முற்றாக துடைக்க அரும்பாடு பட்டு வருகிறது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக அந்த மண்ணின் மைந்தர்களே இன்று இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி வாசல்களும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
தனது மன மாற்றத்தைப் பற்றி டேன்னி ப்ளம் கூறும் போது ' இந்த உலகில் அனைத்து செல்வங்களும் நம்மை விட்டு சென்று விடும். பணம், பெண், வாகனம், வீடு இவை எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு சென்று விடும். இந்த செல்வங்கள் அனைத்தும் இருந்தும் மன அமைதி மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. மன உளைச்சலில் இருந்த எனக்கு இஸ்லாமில் தீர்வு கிடைத்தது. நமது வாழ்வின் அனைத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைக்கும் வழி ஒன்று உண்டென்றால் அது நம்மை படைத்த இறைவனிடம் முழுமையாக விழுந்து விடுவதுதான். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்' என்கிறார்.
எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மன ஓட்டமும் ஜெர்மனியில் உள்ள டேன்னி ப்ளம்மின் மன ஓட்டமும் எங்கு சென்று முடிகிறது என்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆம்... இந்த இருவரின் உள்ளங்களையும் புரட்டியது நம்மை படைத்த இறைவன்தான்.
'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
'மனிதனின் உள்ளங்கள் இறைவனின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
"All the wealth of this world possess, money, women, cars, villas, but I could never find inner peace and happiness, with Islam I solve this problem that haunted me. I was looking for happiness in all sorts of things, but nothing could make you happy as it is falling prostrate to God Almighty, it is something indescribably" said Blum.
தகவல் உதவி
brotherhoodislam
https://www.facebook.com/BrotherhoodInIslam/posts/10153131740419124
6 comments:
குடும்ப கலாச்சாரங்களை தொலைத்த மக்கள் குடும்ப கலாச்சாரங்களை பின்பற்றி வரும் குழுக்களோடு இணக்கமாக வாழ விரும்புகின்றனா்.எனவே குடும்பமாக வாழும் இந்து அரேபிய குழுக்களோடு மேல் நாட்டு மக்கள் இணக்கம் காட்டி வருகின்றனா். ஆனால் அரேபிய மாா்க்கத்தை விட இந்து பண்பாடு முன்னணியில் உள்ளது. ஜரோப்பிய நாடுகளில் இந்து பண்பாட்டிற்பொிய அளவில் வரவேற்பு உள்ளது.அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு அது கண்ணில் படாது.
குடும்ப கலாச்சாரங்களை தொலைத்த மக்கள் குடும்ப கலாச்சாரங்களை பின்பற்றி வரும் குழுக்களோடு இணக்கமாக வாழ விரும்புகின்றனா்.எனவே குடும்பமாக வாழும் இந்து அரேபிய குழுக்களோடு மேல் நாட்டு மக்கள் இணக்கம் காட்டி வருகின்றனா். ஆனால் அரேபிய மாா்க்கத்தை விட இந்து பண்பாடு முன்னணியில் உள்ளது. ஜரோப்பிய நாடுகளில் இந்து பண்பாட்டிற்பொிய அளவில் வரவேற்பு உள்ளது.அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு அது கண்ணில் படாது.
.
Click >>>இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். to read
.
இஸ்லாத்தில் உடலில் பச்சை குத்துவது ஏற்றுக்கொள்ளப்படுமா?
சகோ அன்புராஜ் இஸ்லாம் குடும்ப உறவுகளை பேணிகாக்க சொல்கின்றது போல இந்து மதமும் குடும்ப உறவுகளை பேண சொல்கிறது என்று சொல்லுங்கள் அதைவிடுத்து இஸ்லாமை விமா்சனம் செய்ய வழித் தேடுவது ஏன்?
இஸ்லாமிர்களான எங்களின் நம்பிக்கை படி அனைத்து மத வேதங்களும் இறைவனிடம் இருந்தே வந்துள்ளது
இந்துமத வேதங்கள் கிறுஸதுவ மத வேதங்கள் கிரேக்க மத வேதங்கள் அணைத்தும் இறைவன் ஒருவன் என்றும் இறுதி தூதா் முஹம்மத் என்றும் தான் சொல்கின்றன
நான் ஒரு உண்மையான இந்துவாக இருந்தால் இந்து வேதங்களின் படி இறுதி தூதரான முஹம்மத் நபியை தான் பின்பற்ற வேண்டும்
ஒரு அரேபியன் போல் உடை அணிந்து திருமணம் செய்து அரேபியன் போல் பெயா் வைத்து அரேபியன் போல் வீடு கட்டி அரேபியன் போல் உணவு உண்டு அரேபியன் போல் திருமணம் செய்து அரேபியன் போல் தாலி அறுத்து தலாக் செய்து, அரேபியன் போல் யுத்தத்தில் பெண்களை கைப்பற்றி குமுஸ் பெண் என்று பட்டம் கட்டி வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு, அரேபியன் போல் பிற இன மக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தி கொன்றுகுவித்தால் சொா்க்கம் கிடைக்கும் என்று முட்டாள்தனமாக நம்பி வாழும் வாழ்வு எனக்கு வேண்டாம். இந்தியனாக வாழ இந்துவாக வாழ்வேன்.சொா்க்கம் எனக்குதான்.
Post a Comment