
நிருபர்: உங்களை கடவுளாக சிலர் சித்தரிக்கும் போது என்ன நினைப்பீர்கள்?
இளையராஜா: இதை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மக்களில் சிலர் சச்சின் டெண்டுல்கரையும் கடவுளாக நினைக்கின்றனர். அதைப் போல அவர்கள் பார்வையில் நானும் ஒரு கடவுள். இதில் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை. இது போன்ற விஷயங்களுக்கு நான் அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. கடவுளை வானிலிருந்து கீழே இறக்கி அவரை அற்ப பொருளாக மாற்றி விட்டோம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-01-2015
உங்களை யாரும் கடவுளாக சித்தரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்று சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. கடவுளை வானிலிருந்து கீழிறக்கி அற்ப பொருளாக்கி விட்டனர் என்று சொன்னதும் அருமையான வாசகம். ஆனால் உங்களை வார்த்தைகளால் கடவுளாக்குபவர்களை கண்டிக்க வேண்டும். பொது மேடைகளில் உங்களை வைத்துக் கொண்டு 'என் கடவுள் இளையராஜா: நான் வணங்கும் தெய்வம்' என்றெல்லாம் சொல்லும் போது அந்த மேடையிலேயே அவர்களின் அறியாமையை சுட்டிக் காட்டி தடுக்க வேண்டும். உங்களின் மவுனமானது அதனை அங்கீகரிப்பது போல் உள்ளது. நீங்கள் அதுவும் ஒரு ஆங்கில தினசரிக்கு கொடுக்கும் இந்த பேட்டியை எத்தனை தமிழர்கள் பார்பார்கள்? மிக சொற்பமான நபர்களுக்கே உங்கள் செய்தி சென்றடைந்திருக்கும். எனவே வருங்காலங்களில் பொது மேடையிலேயே உங்களை கடவுளாக்குபவர்களை கண்டியுங்கள். ஏ ஆர் ரஹ்மானும் ஒரு முறை நிகழ்ச்சி தொகுப்பாளினியை தன்னை கடவுள் என்று சொன்னதற்காக கண்டித்தார்.
---------------------------------------------------
இனி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை சற்று பார்போம்....
'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'
-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.
'படைக்கப்பட்டவற்றிற்கு சிரம் தாழ்த்தி வணங்காதீர்கள். படைத்தவனை மாத்திரமே சிரம தாழ்த்தி வணங்க நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.'-முகமது நபி, அரபி 45.
ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.
ஆதாரம்: தப்ரானி.
தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.
இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.
-குர்ஆன்: 53: 62
No comments:
Post a Comment