
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வின் மனைவி சாரா தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்காக இஸ்ரேலிய மக்களிடமிருந்து பொது நிதி திரட்டியுள்ளனர். அதிலிருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை சாரா தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேலின் தினப்பத்திரிக்கைக்கு நெதன்யாஹூவின் விடு;டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெனி நேஃபாளி இந்த குற்றச் சாட்டை வைத்துள்ளார்.
சாரா நெதன்யாஹூ 4000 டாலர் பொது மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதாக இவரது குற்றச்சாட்டு உள்ளது. (இந்திய அரசியல்வாதிகளைப்போல் 100 கோடி 200 கோடி என்று சுருட்டாமல் மிக குறைந்த தொகையாக உள்ளதே. :-) ) நஃப்தாலி 20 மாதங்கள் நெதன்யாஹூவின் வீட்டில் வேலை செய்துள்ளார். நெதன்யாஹூவின் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும் இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். மார்க்கரெட் தாட்சர் இரங்கல் விழாவில் செலவழிக்கப்பட்ட தொகையிலும் கணிசமான தொகையை அம்மணி சுருட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அம்மணி ப்யூட்டி பார்லருக்கு அதிகம் செலவழிப்பதாக நினைக்கிறேன். :-) இது அனைத்தும் இஸ்ரேலிய தினப் பத்திரிக்கை யூதியோத் ஆரோனாத் Yedioth Ahronoth தில் வந்துள்ளது. ஐஸ்கிரீம் சப்ளை செய்வது சம்பந்தமாக பட்ஜெட் தாக்கல் செய்ததில் நெதன்யாஹூ ஊழல் செய்துள்ளதாக முன்பு செய்தி வந்து இவருக்கு அரசியல் அரங்கில் பின்னடைவையும் ஏற்படுத்தியது. வரும் மார்ச்சில் இஸ்ரேலில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளெல்லாம் நெதன்யாஹூவின் அரசியல் வாழ்வை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. பொறுத்திருந்து நல்ல செய்தியை எதிர்பார்போம்.
தகவல் உதவி
By Inna Lazareva, Tel Aviv
telegraph.co.uk
30 Jan 2015
http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/israel/11379902/Israeli-PMs-wife-obsessively-recycled-bottles-for-cash.html
2 comments:
இஸ்ரவேல் நாட்டின் பிரதமாின் மனைவி ஊழலில் ஈடுபடக் கூடாது என்பது மிக முக்கியம்.தவறு நடந்து விட்டது என்றே வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் அதை மூடிமறைக்க இயராது.பண்பாடுநிறைந்த நாடு.அடிமைத்தனம் இல்லாத நாடு எனவேதான் தவறைத் தட்டி்க் கேட்டுவிட்டாா்கள்.இதுவே அரபு நாடு என்றால் தட்டிக் கேட்டவன் கதி அதோகதிதான். இசுலாமிய நாடுகளில் ஊழல்தான் பெரும் கலவரங்களுக்கு காரணம்.
இதுவே அரபு நாடு என்றால் தட்டிக் கேட்டவன் கதி அதோகதிதான். இசுலாமிய நாடுகளில் ஊழல்தான் பெரும் கலவரங்களுக்கு காரணம்.காரணம் ஜனநாயகம் இல்லை.வாள் மனப்பான்மைதான்.ஜனநாயகம் அரேபயிய மண்ணில் ஒரு போதும் வளராது. படுகொலைகள் நிற்காது.அழிவு தொடரும்.தொடரும்.இஸ்ரவேல் ஜனநாயகப்பண்பால் முன்னேறிச் செல்லும்.
Post a Comment