சவுதி மக்களின் மற்றும் உலக முஸ்லிம்களின் அன்பிற்கு பாத்திரமான மன்னர் அப்துல்லா இறைவனடி சேர்ந்து விட்டார். சில காலமாகவே நோய் வாய்பட்டிருந்த அவர் முதுமை காரணமாக நிரந்தர உலகத்துக்கு பயணித்து விட்டார். அன்னாரின் பாவங்களை பொறுத்து அவருக்கு இறைவன் சொர்க்கத்தைக் கொடுக்க நாமும் பிரார்த்திப்போமாக.
சவுதியின் மன்னராக மட்டும் அல்லாது மக்கா மதினா என்ற இரண்டு புண்ணிய ஸ்தலங்களின் நிர்வாகியாகவும் செயல்படுவதால் உலக முஸ்லிம்களின் கவனத்தையும் இவர் பெறுவார். தனது வாழ்நாளில் பல முன்னேற்ற பணிகளை முடுக்கி விட்டு சவுதி மிகச் சிறந்த இடத்தை உலக அளவில் பெறுவதற்கு இவரின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது.
தற்போது இவரது இடத்தைப் பெற்றிருக்கும் இளவரசர் சல்மானும் சிறந்த நிர்வாகி. எந்த தொய்வும் இல்லாமல் வழமையோல் அமைதியாக சவுதியின் ஆட்சி நடைபெற நாமும் பிரார்த்திப்போம்.
இவ்வளவு புகழ் வாய்ந்த ஒரு தலைவர் இறந்துள்ளார். ஆனால் சவுதியில் அன்றாட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நம் ஊரைப் போல் கடைகள் அடைக்க நிர்பந்திக்கப்படவில்லை. சாலைகளில் வாகனங்கள் எந்த பயமும் இன்றி வழமைபோல் செல்கின்றன. மொத்தத்தில் இவரது இழப்பு சவுதியின் அன்றாட வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
எல்லோருக்கும் எங்கு இறப்புக்கான தொழுகை நடைபெறுமோ அந்த இடத்தில் இவருக்கும் தொழுகை நடத்தப்படும். எல்லோரையும் புதைக்கக் கூடிய பொது மைய வாடியில் இவரது உடலும் அடக்கம் செய்யப்படும். அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெரினா பீச்சில் நாம் பார்ப்பது போல் எந்த கட்டிடங்களும் கட்டப்படாது. வெறும் மண்ணைக் கொண்டு இவரது உடல் மூடப்படும். இறப்புக்கு முன்னால் தான் அவர் சவுதியின் மன்னர். இறப்புக்கு பின்னால் அவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன்தான். அதனை செயலில் காட்டி வருகின்றனர் சவுதி ஆட்சியாளர்கள்.
5 comments:

நான் விசாாித்த வகையில் தாங்கள் கூறுவது உண்மைதான். முறையான வாழ்ககை பயிற்சி பெற்ற சமூகம்.சா்வாதிகார சமூதாயம். பிற மதத்தவா்களை நிா்மூலமாக்கிவிட்ட சமூகம். பரவாயில்லை.பாராட்டுக்கள்.
உலகில் அமோிக்கா பிாிடடிஜ அரசுகள் ஏராளமான நற்பணிகளை பிற நாடுகளில் செய்து வருகின்றன.மனிதாபிமானப்பணிகளில் முந்தி நிற்கின்றன.ஆனால் மிக மிக அதிக உபாி வருவாய் உள்ள நாடு சவுதிதான். ஆனால் சுனாமி வந்தபோது சவுதியின் பங்கு என்ன ? முஸ்லீம்களுக்க மட்டுமே உதவ வேண்டும் என்ற வக்கிர புத்தி உள்ளவா்கள். குறுகிய மனப்பான்மை கொண்டவா்கள். விஞ்ஞான ஆய்வு மனப்பான்மையில்லாதவா்கள். இந்துக்களக்கு பங்காதேஷ போன்ற அரேபிய மத பெரும்பான்மை கொண்ட நாடுகளை பெரும் கொடுமை செய்தாலும் அதை கண்டு கொள்ளாது இசுலாமிய அரசு என்று பங்களா தேஸ் தன்னை அறிவித்துக் கொணடதற்கு பல ஆயிரம் கோடி மானியம் அளித்து வரும் நாடு.பாக்கிஸ்தானுக்கு 25 அமொிக்காவின் மிகச்சிறந்த போா் விமானம்ான F-16 விமானத்தை நன்கொடையாக அளித்தது பகிரைன்.
கப்ரு வேதனை அப்பதுல்லாவுக்கு உண்டா ?சூரிய வெப்பம் கடுமையாகிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி வந்தார்கள். அப்பொழுது ஒரு சப்தத்தை அவர்கள் செவி தாழ்த்திவிட்டு, யூதர்கள் (சிலர்) தமது கப்ருகளின் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிக்கிறார்கள் (அதுதான் இந்த சப்தம்) என்று கூறினார்கள். (புகாரி: அய்யூப் (ரலி)
ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது கப்ருடைய வேதனைபற்றிக் கூறிவிட்டு ‘அல்லாஹ் உம்மைக் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பானாக!’ என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நபியவர்களிடம் கப்ருடைய வேதனைப்பற்றி வினவினார்கள். அதற்கு நபியவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள்.
புதைக்கப்பட்ட உயிர் அழுகிய நாறி சிதைந்து உருக்குலைந்து போய்விடுமே-அதற்கு யாரால் எதைக் கொண்டு வேதனை அளிக்க முடியும் ? சரி எரிக்கப்பட்ட உடலுக்கு கப்ரு வேதனை உண்டா ?
அதற்கு நபியவர்கள் ‘ஆம் கப்ருடைய வேதனை உண்டு’ என்று பதிலளித்தார்கள்.
கப்ரூ வேதனை உண்டா ? விளக்கமுடியுமா ?
சவுதி அரேபியாவின் மீது மதத்தின் அடிப்படையில் காதல் உள்ளது.அனால் அச்சமூகம் மிகவும் பிற்போக்கானது. மன்னா்கள் குடும்பம் என்ற ஒரு பட்டணமே உள்ளது.குடும்பதை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தையே உருவாக்கித் தந்தாா் எங்க அப்பா என்ற பாடலை ” ஒரு பட்டணத்தையே உருவாக்கி வைத்தாா் சவுதி மன்னா்.மன்னா்குடும்பத்தினா் உழைக்க வேண்டாம்.மாதம் பலகோடி அரசு வருவாய் பணம் அவர்களக்கு சம்பளமாக வழங்கப்பட்டு வருகின்றது.தெண்டச் செலவு.மிதமிஞ்சிய வருவாய்.உபாி வருவாய்.ஆனால்குறுகிய அலப புத்தி.இதுதான் சவுதி.
Post a Comment