Followers

Saturday, January 17, 2015

தெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது!

தெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது!



சல்மான் வயது 32. இன்ஜினீயர். அமெரிக்காவில் 2010ல் எம் எஸ் பட்டப்படிப்பை முடித்தார். இவரது சகோதரனும், சகோதரியும் பொறியாளர்களே! இவர்களது தந்தை ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அமெரிக்காவில் விஷா நீட்டிப்பு கிடைக்காததால் 2014ல் இந்தியா திரும்புகிறார் சல்மான். சல்மானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உண்டு. குடும்பத்தைக் காப்பாற்ற துபாய்க்கு விசிட்டிங் விஷாவில் செல்லும் போதுதான் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ததற்கு போலீஸார் சொன்ன காரணம் ஃபேஸ் புக்கில் ஒரு புதிய பக்கம் திறந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு செய்திகளை அப்டேட் செய்து வந்ததும் மேலும் நிக்கி ஜோஸப் என்பவரோடு சிரியா சென்று போரிட தயாராக இருந்ததாகவும் குற்றம் சுமத்துகிறது. 'எனது மகன் நேர்மையானவன். இப்படி ஒரு தவறை செய்யவே மாட்டான்' என்று கண்ணீர் விடுகிறார் சல்மானின் தந்தை. மேலே உள்ள படத்தில் உள்ளது சல்மானின் தந்தை

நிக்கி ஜோஸப் சில நாட்களுக்கு முன்பு தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். இஸ்லாமிய இளைஞர்களை இவ்வாறு சிக்கலில் மாட்டி விட இஸ்லாத்தில் இணைந்ததாக நடித்துள்ளாரரா என்றும் விசாரிக்க வேண்டும். புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் ஐரோப்பியர் பலர் ஜிஹாதில் விழுவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஐரோப்பாவில் இஸ்லாமிய வளர்ச்சியை கட்டுப் படுத்த இது போன்ற தீவிரவாத செயல்களை மொஸாத் ஊக்குவிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. படித்த இஸ்லாமிய இளைஞர்களாக பார்த்து குற்ற செயலில் சம்பந்தப்படுத்தி மாற்றார் மத்தியில் படித்த இஸ்லாமியர்கள் இப்படித்தான் என்ற பொது பிம்பத்தை உண்டாக்க இந்துத்வாவாதிகள் மொஸாத்தோடு சேர்ந்து செய்யும் செயல்களா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.

ஃப்ரான்ஸில் நடந்த துப்பாக்கி சூட்டில் அந்த இளைஞன் தனது ஐடெண்டி கார்டை தவற விட்டு சென்றுள்ளான். ஓடும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று கத்திக் கொண்டு ஓடி மறைந்துள்ளான். தீவிரவாத செயலை செய்பவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்வானா! 'அல்லாஹூ அக்பர்' என்று கத்த வேண்டிய அவசியம் என்ன? அதன் பிறகு அந்த கார்டை வைத்து ஒரு இளைஞனை தேடி சுட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகவே மேலும் ஊர்ஜிதமாகிறது.

ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், போன்ற அமைப்புகள் இஸ்லாமியர்களே அல்ல என்று சவுதியும் ஒதுக்கி விட்டது. சதாமையும் கடாபியையும் ஒரு வாரத்தில் துவம்சம் செய்த அமெரிக்கா இன்று வரை ஐஎஸ்ஐஎஸையும், போகோ ஹராமையும் எதுவும் செய்யாது விட்டு வைத்திருப்பதே இதற்கு சாட்சி. ஒரு நாட்டின் தலைவர்களையே தூக்கிய அமெரிக்காவுக்கு இந்த தீவிரவாத கும்பலை அழிக்க எவ்வளவு நேரமாகும்? ஆனால் அழிக்க மாட்டார்கள். இவர்களை வைத்து எவ்வாறு அரசியல் செய்யலாம்: இன்னும் எத்தனை நாள் ஒப்பந்தத்தை நீடிக்கலாம்: இன்னும் எத்தனை காலம் வளைகுடா பணத்தை கறக்கலாம் என்றுதான் சிந்திப்பார்கள்.

சல்மான் போன்ற அப்பாவி இளைஞர்கள் அமெரிக்க இஸ்ரேலிய அரசியல் விளையாட்டில் பகடைக் காய்களாக பயன்படுத்தப் படுகிறார்கள். இதற்கு முன் பெங்களூரு ஐடி இஸ்லாமிய இளைஞரும் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். சல்மானும் அதே போல் இன்னும் ஒரு வாரத்தில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுவார். அதற்குள் படித்த முஸ்லிம்களும் இப்படித்தான் என்ற தப்பான எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்ற நமது ஊடகங்களும் 'மானே.... தேனே' என்று போட்டு தங்களின் விசுவாசத்தையும் காட்டிக் கொள்ளும்.

தாலிபான்களை உருவாக்கி பிறகு அமெரிக்காவும் யூதர்களும் சேர்ந்து அவர்களுக்கு எதிரிகளானார்கள்: உசாமா பின் லாடனையும் உருவாக்கினார்கள்: பிறகு தங்கள் வேலை முடிந்தவுடன் அவரை அழித்தார்கள்: ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற அமைப்புகளையும் உருவாக்கினார்கள். தங்கள் கொள்ளையிடல் முழுவதுமாக முடிந்தவுடன் இவர்களையும் அமெரிக்காவும் யூதர்களும் சேர்ந்து இன்னும் ஓரிரு மாதங்களில் அழிக்கத் தொடங்குவார்கள். இது ஒரு தொடர்கதை. இவர்களின் நாடகம் இன்னும் எத்தனை காலம்தான் அரங்கேற்றப்படுகிறது என்று பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி
என்டிடிவி
17-01-2015

No comments: