
பெயரிலேயே குள்ள நரித் தனத்தைக் கொண்டுள்ள அமெரிக்க செய்தி ஸ்தாபனம் ஃபாக்ஸ் நியூஸ் சில நாட்களுக்கு முன்பு பாரிஸிலும் இங்கிலாந்திலும் சில ஏரியாக்கள் 'முஸ்லிம்களுக்கான ஏரியாக்களாக சொந்தமாக்கப்பட்டு விட்டது' என்று கூறியது. பாரிஸிலும் இங்கிலாந்திலும் குறிப்பிட்ட சில ஏரியாக்களில் முஸ்லிம் அல்லாதவர்களோ, காவல் துறையினரோ நுழைய முடியாத படி அறிவிக்கப்படாத ஒரு தடை உள்ளது என்று தனது செய்தியில் குறிப்பிட்டது. சில பகுதிகள் ஆப்கானிஸானிலும் ஈராக்கிலும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்றும் ஆதங்கப்பட்டிருந்தது.
செக்யூரிடி அனலைஸ் ஸ்டீவன் எமர்ஸன் சில நாட்களுக்கு முன்பு சொன்னதாவது 'இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் முஸ்லிம் அல்லாதவர்கள் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. அறிவிக்கப்படாத தடை ஒன்று அந்த ஏரியாக்களில் உள்ளது' என்ற விஷக் கருத்தை விதைத்தார். இதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர் 'எமர்ஸன் கருத்து முற்றிலுமாக முட்டாள்தனமானது' என்று காட்டமாக விமரிசித்தார். இங்கிலாந்து பிரதமரின் இந்த பேச்சானது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. உண்மையை உரத்துச் சொன்ன பிரதமரை பாராட்டுவோம்.
உலகின் பல இடங்களிலும் இந்த செய்திக்கு எதிர்ப்பு கிளம்புவதைக் கண்ட ஃபாக்ஸ் நியூஸ் 'செய்தி சேகரிப்பில் சில இடங்களில் தவறு நடந்து விட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம்' என்று பல முறை இந்த மன்னிப்பை வெளியிட்டது.
தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள எங்கள் ஊரிலும் மாற்று மதத்தவர்கள் அதிகம் வருவதில்லை. காவல் துறையினரும் எங்கள் ஊருக்கு வந்ததில்லை. காய்கறி விற்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும்தான் மாற்று மதத்தவர்களாக எங்கள் கிராமங்களில் பார்க்க முடியும். இதற்கு காரணம் பெரும்பாலும் எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் வசிப்பதே. அடுத்து இந்து மத கிறித்தவ மத கலாசாரங்களுக்கும் இஸ்லாமிய காலசாரங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளதும் காரணம். மற்றபடி திருமணம் இறப்பு போன்ற சுக துக்கங்களில் அனைத்து மதத்தவரும் கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தியே வருகிறார்கள். சில நேரங்களில் இந்துத்வாவாதிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு பல கிராமங்கள் இஸ்லாமிய மயமாகி வருகின்றன என்ற அச்சத்தை வெளியிடுகின்றனர். அதே போன்ற தவறான ஒரு செய்தியை வெளியிட்டு ஃபாக்ஸ் நியூஸூம் தனது மன்னிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
குற்றம் நடக்கும் இடத்தில் தானே காவலருக்கு வேலை இருக்கும்? பொதுவாக இஸ்லாமிய கிராமங்களில் எழும் சிறு பூசல்களை எல்லாம் ஜமாத்துகளே கண்டித்து சரி செய்து விடுவார்கள். எனவே வெகு அரிதாகத்தான் இஸ்லாமிய கிராமங்களுக்கு காவல் துறையினர் வருவதை தமிழகத்திலும் நாம் பார்க்க முடியும். இதே போன்றுதான் ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் நகரங்களில் காவலர்களுக்கு வேலையில்லாமல் இருக்கிறது. குற்ற செயல்களும் அதிகம் நடைபெறுவதில்லை. மேற்கத்திய கலாசாரத்தில் ஊறிப் போன அந்த நகரங்கள் இன்று இஸ்லாமியர்களால் புனிதமடைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.
இந்துத்வாவாதிகளின் எண்ணமும் யூதர்களின் எண்ணமும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை இங்கும் நாம் பார்க்கிறோம். :-)
No comments:
Post a Comment