நாகப்பட்டினம் நங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிராஜூதீன். சவுதியின் அல்கசீம் மாநிலத்தில் உனைஸா மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 30 வருடங்களாக பணி செய்து வருகிறார். இவரது வேலை அங்குள்ள அலுவலர்களுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடுவது. தனது நன் நடத்தையாலும் அழகிய உபசரிப்புகளாலும் அங்கு வேலை செய்யும் சவுதி நாட்டு மக்களின் அன்பை பெற்றுக் கொண்டார். தற்போது விருப்ப ஓய்வில் தமிழகம் திரும்ப முடிவு செய்தார். அவரை வழியனுப்ப அங்குள்ள சவுதிகள் ஒரு பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விழாவினையும் மிக சிறப்பாகவும் நடத்திக் காட்டினர்.
ஒரு சமையல்காரர்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அவரை கட்டித் தழுவி தங்களின் அன்பை வெளிக்காட்டினர். இந்த அன்பை நமது தமிழகத்தில் காண முடியுமா? சமையல் வேலை செய்பவர்களை ஒரு சாதியாகவே ஒதுக்கி அவர்களை நாம் தொடக் கூட மாட்டோம். 50 சதவீதமான இந்திய மக்கள் சமையல் அறையில் சாதி வித்தியாசம் பார்பதாக சமீபத்திய ஒரு அறிக்கை உண்மையை வெளிக் கொண்டு வந்தது.
இஸ்லாம் வருவதற்கு முன் அரபு மொழி பேசுபவர்கள் தங்களை உயர் சாதியாக எண்ணிக் கொண்டு மற்றவர்களை ஊமை பாஷை பேசுபவர்கள் என்று எள்ளி நகையாடினர். இஸ்லாம் வந்ததற்கு பிறகு 'அந்த மக்களின் குல வெறி சாதி வெறி இன வெறி அனைத்தையும் எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று நபிகள் நாயகம் கட்டளையாக இட்டார்கள். அன்று முதல் அங்கு ஒழிந்தது சாதி வெறி: மொழி வெறி. அது இன்று வரை தொடர்கதையாக சகோதரர் சிராஜூதீன் வரை நீள்கிறது.
No comments:
Post a Comment