Followers

Monday, January 19, 2015

இளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை!

இளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை!நிருபர்: உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

இளையராஜா: நான் என்னையே சில நேரம் வெறுக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பிறப்பை நான் விரும்பவில்லை. இதற்கு முன்னால் உள்ள பிறவியில் நான் செய்த தவறுகளுக்கு தண்டனையாகத்தான் இந்த பிறவியில் இவ்வாறான வாழ்க்கை எனக்கு கிடைத்துள்ளது. இதனை எவ்வாறு சரி செய்வது என்பதுதான் தற்போதய சிந்தனை. முற் பிறவியில் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகத்தான் இந்த பிறவியில் எனது தவறுகளை சரி செய்து வருகிறேன்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-01-2015

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இளையராஜா நேற்று கொடுத்த பேட்டியில் ஒரு பகுதியைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். மனிதர் ரொம்பவும் குழம்பிப் போயுள்ளார். ஏழு பிறவி என்ற நம்பிக்கையானது நிரூபிக்க முடியாத ஒன்று. இந்த உலகில் உள்ள மனிதர்கள் தொடர்ந்து பல பிறவிகள் எடுத்தால் உலகின் மக்கள் தொகையானது கூடக் கூடாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் பாரதி 'முப்பது கோடி முகமுடையாள்' என்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற மூன்று நாடுகளையும் இணைத்து பாடினார். ஆனால் இன்று இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 100 கோடிக்கு மேல் ஆகி விட்டது. அன்றைய 30 கோடி இன்று 100 கோடியாகியுள்ளது. மறு பிறவி சாத்தியம் என்றால் தற்போது புதிதாக உருவாகியுள்ள 70 கோடி மக்களின் முந்தய பிறவி எது?

ஆடு, மாடு, நாய்களாகவும் பிறவி எடுக்கலாமே என்று நீங்கள் கெட்டால் அந்த உயிரினங்களின் வளர்ச்சியும் தாறுமாறாகவல்லவா பெருகியிருக்கிறது? முதலில் உலகம் முழுக்க அனைத்து உயிரினங்களும் 500 கோடியாக இருந்ததாக கணக்கிட்டால் இன்றைய கணக்குப் படி அதே ஐநூறு கோடிதான் இருக்க வேண்டும். அவற்றுக்குள்தான் மறுபிறவி நடந்திருக்க வேண்டும். எல்லா உயிரினங்களிலும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மறு பிறவி என்பது இல்லாத ஒன்று என்ற முடிவுக்கு வருகிறோம். இந்து மதத்தில் மறு உலக வாழ்வு சொல்லப்பட்டுள்ளது. அதனைத்தான் திரித்து மறு பிறவி என்று மக்களுக்கு போதித்து விட்டார்கள். இந்து மத வேதங்கள் எதிலும் மறு பிறவிப் பற்றியும் சொல்லப்படவில்லை.

அடுத்து ஒரு பிறவியில் தவறிழைத்தால் அதற்கு பரிகாரமாக மறு பிறவியில் இழிவானவனாக பிறக்க வைக்கப்படுவான் என்று மறு பிறவிக்கு விளக்கம் சொல்கின்றனர். முதலில் முற்பிறவியில் நான் எந்த பாவம் செய்தேன் என்று எனக்கு தெரிந்திருக்க வேண்டும். அடுத்து இந்த பிறவியில் எதனால் இழி பிறவியானேன் என்ற விளக்கமும் எனக்கு கிடைத்திருக்க வெண்டும். அப்போதுதான் என்னை திருத்திக் கொண்டு இனி வரும் பிறவியில் நல்லவனாக பிறக்க முயற்சி செய்வேன். எல்லாம் மூடு மந்திரமாக எதுவும் விளங்காமல் நான் இந்த பிறவியில் பிறந்திருந்தால் அதனால் எனக்கு என்ன நன்மை? எவ்வாறு என்னை நான் திருத்திக் கொள்வது? இப்படி குழப்பமான ஒரு தத்துவத்தை இறைவன் நமக்கு கொடுத்திருப்பானா?

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்

மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

மேலே நான் கொடுத்துள்ள இந்து மத வேத ஆதாரங்களும் இஸ்லாமிய வேத ஆதாரங்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இந்து மதமும் மறு உலக வாழ்க்கையை வலியுறுத்துகிறது. மறு பிறவி என்பது இந்து மத கோட்பாடு அல்ல. அது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒன்று என்று விளங்கிக் கொள்ளலாம்.

எனவே இளையராஜா அவர்களே! நீங்கள் இசை அமைப்பதில் பெரும் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் கடவுளை தேடும் விஷயத்தில் உங்களை விட உங்கள் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா மிக உயரத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள தமிழ் குர்ஆனை வாங்கி தினம் ஒரு பக்கமாக பொறுமையாக படித்து வாருங்கள். உங்கள் மகனைப் பொலவே உங்களுக்கும் ஆன்மீகத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.

அவ்வாறு தெளிவு கிடைத்து விட்டால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' போன்ற நமது முன்னோர்களின் வழியை குர்ஆன் உங்களுக்கு காண்பிக்கும். பிறவிப் பயனை உங்கள் மகனைப் போன்று நீங்களும் அடைந்து கொள்வீர்கள். உங்களை சகோதரனாக அரவணைக்க 200 கோடிக்கு மேல் உலகமெங்கும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

டிஸ்கி: நான் படிக்கும் காலங்களில் சலங்கை ஒலி, சங்கரா பரணம், அழகே உன்னை ஆராதரிக்கிறேன் போன்ற படங்களின் பாடல்களில் லயித்து பள்ளியை கட்டடித்து விட்டு எங்கள் ஊர் தியேட்டரில் பல முறை சினிமா பார்த்துள்ளேன். இதனால் எனது தாயாரிடம் நிறைய அடி வாங்கியதுண்டு. அந்த அளவு உங்கள் இசையின் மேல் ஒரு காலத்தில் ஈர்ப்பு இருந்தது. :-)


3 comments:

சுவனப் பிரியன் said...

How do you feel when people treat you like God?

Ilayaraja: I am not very serious about these things. People call Sachin Tendulkar as God. Like that, for them I am God also, what's the difference. I don't give importance to that. We are bringing down God and making him very cheap.

Dr.Anburaj said...

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.
திருவாசகம் கூறுகின்து
புல்லாகி புடாய் புழுவாய் மரமாகி பலவிருகமாகி பற்வையாய் பாம்பாகி கல்லாய் மனிதனாய் பேயாய் கணங்களாய் வல்அசுரராகி முனவராய் தேவராய் செல்லாதிற்த தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமாள் மெய்யே நின் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
இதற்கு என்ன ஐயா அா்த்தம் ??????

Dr.Anburaj said...

சொா்க்கம் நரகம் என்பது மனிதனின் முடிவான வாழ்க்கை நிலை அல்ல.இந்த உலகம் போல் அது ஒரு உலகம் அவவளவுதான். புமியில் உயா்கள் பிறந்து கா்மவினைகளை பெற்று செலவு செய்து வாழ்வது போல் அங்கும் வாழலாம்.சமய கோட்பாடுகளின் ஆரம்பப்பபாடம்தான் சொா்க்கம் நகரம் என்பது.Phd பட்டம் பெற்றவா்களின் பாடம் மறுபிறவி என்பது.