Followers

Tuesday, January 06, 2015

யுவன் சங்கர் ராஜா திருமணம் சம்பந்தமாக எழும் சர்ச்சைகள்!



யுவன் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து இன்று வரை அவரை படாதபாடு படுத்தி வருகின்றனர் பலரும். அவரது பதிவுக்கு போய் அநாகரிகமான கமெண்டுகளை இடுவது. மூன்றாம் கல்யாணம் பண்ணுவதற்காக மாறி விட்டாய் என்று குதர்க்க வாதம் பேசுவது என்று இன்று வரை அவரை விடாமல் தொந்தரவு செய்கின்றனர் இந்துத்வாவாதியினர்.

'எதுக்குடா இந்த பொய் வேஷம்?" - saran

"dai poruki odi poiru..unalam role model ah vachathuku ena serupala adichikanum....i hate u...." - aniruth joy

"பூனை குட்டி வெளியே வந்து விட்டது. எதற்காக மதம் மாறினார் என்ற உண்மையும் தான்"- சுரேஷ்

இது போன்று நாள்தோறும் அவதூறுகளை பரப்புபவர்களுக்கு யுவனின் குடும்பத்திலிருந்தே பதில் வந்துள்ளது.

யுவனின் தங்கை பவதாரிணி தனது ட்விட்டர் தளத்தில் என்ன சொல்கிறார்?

'ஆம் என் அண்ணன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். எங்களது குடும்பம் அவரது முடிவை பரிபூரணமாக ஆதரிக்கிறது. எங்கள் தந்தையும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டு விட்டார். சிறு வயதிலிருந்தே மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வளர்ந்தவர் என் அண்ணன். தனது கடின உழைப்பால் 100 படங்களுக்கு மேல் இசை அமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர் என் அண்ணன். இப்படிப் பட்ட நல்லொழுக்கம் உள்ள ஒருவரை பலரும் வார்த்தைகளால் காயப்படுத்துகின்றனர். அவரின் குடும்பத்தவரான எங்களுக்கு இது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. எந்த முடிவை எடுத்தாலும் ஒரு சிறந்த மனிதனாக வாழுவதில்தான் உள்ளது. எனது அண்ணன் அதில் கண்டிப்பாக வெற்றி பெற்று பலருக்கு பாடம் புகட்டுவார்' என்று பொரிந்து தள்ளியுள்ளார்.

"Yes.. My brother yuvan converted to islam nd myself , Karthik Raja and dad have started accepting his decision.. All that matters in our family is his happiness.. And yes.. He willl get married for the third time cos his first and second marriage dint work out cos of personal reasons.. He dint have kids or he dint cheat anybody.. He dosent drink or smoke.. From the age of 15 he has been doing music and he dint follow my dad's way of music.. He created his own style and he is doing music now for more than 100 movies and still he is being successful for his hard work.. It's hard to see even his own family people teasing and criticising him.. He has proved, he will prove and he willl keep proving... All that matters is wether u r a good human being??? Nd yuvan is.." in twitter. bhavadharini sister of yuvan shankar raja

யுவனின் மூன்றாம் திருமணத்துக்குப் பிறகு அவரின் தங்கை பவதாரிணி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்....

. "Yuvan wanted to get married to a girl from a Muslim family. He had asked his friends to find a suitable match for him. His friends in Malaysia looked for a suitable alliance and arranged this wedding. Yuvan's happiness has always been the family's first priority. He looked happy at his wedding, and that's all we want," says Bhavatharini.

'யுவன் இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடிக்க ஆசைப்பட்டார். அவரது நண்பர்களிடம் தனக்கு தோதான ஒரு முஸ்லிம் குடும்பத்தை தேர்ந்தெடுக்க சொல்லிக் கேட்டுக் கொண்டார். இவரது நண்பர்கள் மலேசியாவில் பொருத்தமான இஸ்லாமிய பெண்ணை தேர்ந்தெடுத்து யுவனிடம் ஆலோசனையைக் கேட்டனர். அந்த பெண்ணை யுவனுக்கும் பிடித்துப் போகவே இன்று திருமணம் இனிதே நிறைவேறியுள்ளது. எப்போதுமே யுவனின் சந்தோஷத்துக்கு நாங்கள் குறுக்கே நின்றதில்லை. இந்த திருமணத்தால் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அதுதான் நமக்கு வேண்டியது' என்று மிக அழகிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இதன் மூலம் இது காதல் திருமணம் அல்ல. இஸ்லாத்தை ஏற்றதற்கு பிறகு அவரது நண்பர்கள் மூலமாக கிடைத்த சம்பந்தம் என்பது தெளிவாகிறது. ஆனால் இணையத்திலும், பத்திரிக்கைகளிலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் இஸ்லாத்தை ஏற்றார் என்று நெஞ்சறிந்து பொய் சொல்கிறார்கள்.

இந்துத்வாவாதியினர் யுவனின் மேல் கோபப்படுவதில் அர்த்தம் உள்ளது. பார்பனர்களான தங்களுக்கு அடிமை சேவகம் புரிந்த ஒருவன் விடுதலையாகி இஸ்லாத்தில் ஐக்கியமாகி விட்டானே? இனி நமது மதிப்பு என்னாவது? என்று அவரது மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களைப் பொருத்த வரை அது அவர்களுக்கு நியாயமாகவும் படலாம்.

ஆனால் விபரம் புரியாமல் பல பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும் இவரது மன மாற்றத்தைக் கண்டு கோபமடைவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு பல சிரமங்கள் இருக்கலாம். பல தேவைகள் இருக்கலாம். இஸ்லாத்தை ஏற்றால் பல பாதிப்புகள் உங்களுக்கு வரலாம். எனவே உண்மையை விளங்கியும் மனதுக்குள் புளுங்கிக் கொண்டு இந்து மதத்திலேயே காலம் கடத்தும் பல இந்து நண்பர்களை நான் அறிவேன்.

நீங்கள் அனைவரும் யுவனை விமரிசிப்பதற்கு முன் அதற்கான காரணம் என்ன என்று தேடி அதைக் களைய முயற்சி செய்யுங்கள். சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு இப்படி தனி ஆளாக திருமணம் முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவரைத் தள்ளியது அவர் பிறந்த மதத்தில் உள்ள வர்ணாசிரம கோட்பாடுகள் அல்லவா? அதை அல்லவா முதலில் களைய நீங்கள் முயற்சித்திருக்க வேண்டும்?

இந்து மத ஆன்மீகத்தில் கரை கண்ட இவரது தந்தை இளையராஜா திருவையாறு தியாகராஜ சன்னதியில் பாட அனுமதிக்கப்படுவாரா? அதற்கு ஆகம விதிகள்தான் ஒத்துக் கொள்ளுமா? இப்படி நிறைய இருக்கிறது.

இசைக்கு இஸ்லாத்தில் இந்து மதத்தைப் போன்ற மரியாதை இல்லை: பெரும்பான்மை இந்து சமூகத்தில் மதம் மாறினால் தனது இசைத் தொழிலுக்கு பாதிப்பு: தந்தையின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும்: பலரும் பெண்ணுக்காக மாறியதாக கதை கட்டுவர்: என்று பல பின்னடைவுகள் இருந்தும் இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழி என்று தடைகளை உடைத்து வெளி வந்திருக்கும் யுவனை பாராட்டா விட்டாலும் தயவு செய்து தூற்றாமல் இருங்கள்! ஒரு மனிதனின் மனதை கீறி காயப்படுத்திப் பார்க்கும் மனோ நிலையானது மனிதத் தன்மையற்றது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

“இன்னும் இத்தகையோர் இத்தூதர் மீது இறக்கப்பட்ட குர்ஆனை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். ‘எங்கள் இறைவனே! நாங்கள் இவ் வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டோம் எனவே, இவ்வேதம் சத்தியமானது என்று, சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:83)

'ஆம் இந்த குர்ஆனை படித்தவுடன் எனது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. இரவு முழுவதும் அழுது கொண்டே தூங்கிப் போனேன். காலையில் எழுந்தவுடன் எனது உள்ளம் தூய்மையானது. இஸ்லாத்தை உடன் ஏற்றுக் கொண்டேன்'

-யுவன் தனது நண்பரிடம் தனக்கு நிகழ்ந்த மாற்றம் பற்றி சொன்னது....


3 comments:

Anonymous said...

நானும் இணைய தளத்தில் குரானை படிக்கதான் செய்கிறேன், கண்ணீர் ஒன்னும் வரல. படிக்க படிக்க கடுப்பு தான் வருது சினிமால பயன்படுத்தும் தரமான க்ளிசரின் எங்கே கிடைக்கும்

suvanappiriyan said...

//நானும் இணைய தளத்தில் குரானை படிக்கதான் செய்கிறேன், கண்ணீர் ஒன்னும் வரல. படிக்க படிக்க கடுப்பு தான் வருது சினிமால பயன்படுத்தும் தரமான க்ளிசரின் எங்கே கிடைக்கும்//

உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வர யுவனைப் போலவோ ஏ ஆர் ரஹ்மானைப் போலவோ அழுக்கற்ற வெள்ளை உள்ளத்தவராக நீங்கள் மாற வேண்டும். மனது முழுக்க ஓராயிரம் அழுக்குகளை வைத்துக் கொண்டு பாவ காரியங்களை செய்து கொண்டு குர்ஆனை அணுகினால் கண் எரிச்சலும் கடுப்பும்தான் வரும். கிளிசரின் போட்டாலும் கண்ணீர் வராது :-)

Anonymous said...

//மனது முழுக்க ஓராயிரம் அழுக்குகளை வைத்துக் கொண்டு பாவ காரியங்களை செய்து கொண்டு குர்ஆனை அணுகினால் கண் எரிச்சலும் கடுப்பும்தான் வரும்//



ஆமாங்க , உங்கள மாதிரி புண்ணிய காரியங்கள் எல்லாம் எங்களுக்கு செய்ய தெரியாதுங்க. . ஸ்கூல் குழந்தைகளை கொல்றது, பத்திரிக்கைகாரர்களை கொல்றது. பிழைக்க போகும் நாட்டுக்கே குண்டு வைக்கிறது, 'அல்லாஹு அக்பர் என்று முழங்கிக்கொண்டே ஹலால் முறையில் கழுத்தை அறுத்து மனிதர்களை அல்லாவிற்கு நரபலி கொடுப்பது, அதை படம் பிடித்து உலகிற்கே போட்டு காட்டி உங்கள் இனத்தின் பெருமையை பரப்புவது, அடுத்த மதத்தவன் காபிர் என்று குரானில் படித்துவிட்டு மனதிலும் அந்த எண்ணத்தை வைத்துக்கொண்டு "மாற்று மத சகோதரர்கள்" என்று வெளியில் பிலிம் காட்டுவது., ஊருக்கு ஊர் மத மாற்ற கூடாரங்களை அமைத்து வைத்து கொண்டு "நாங்க இந்த நாடு மதசார்பற்ற நாடா இருக்கத்தான் விரும்புறோம் " என்று நாடகம் ஆடுவது. கொலை செய்தே மதத்தை பரப்பியது, இன்னும் உலகம் எல்லாம் தீவிரமாக தீவிரவாத செயல்களை செய்து கொலைகார கும்பல் என்று புகழ் பெற்று வருவது, கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் செய்வதை செய்துவிட்டு யூதன் செய்தான், என்று அடுத்தவன் மீது பழி போடுவது ... இன்னும் நிறைய சொல்லலாம்.



இது போன்ற சிறந்த புண்ணிய காரியங்களை செய்து வரும் உங்கள் கும்பலுக்கு அந்த புத்தகம் இனிக்கத்தான் செய்யும். உங்கள் செயல்களுக்கு எல்லாம் காரணமே அந்த புத்தகம் தானே. சுய சிந்தனையை அடகு வைத்து படித்தால் நன்றாக இருக்கும். நாங்கள் சுய புத்தியுடன் படிப்பதால் அது ஒரு குப்பை என்று தெரிந்து எரிச்சல் வருகிறது.



எங்கள் முன்னோர் செய்த பெரிய பாவ காரியம் என்ன தெரியுமா? துலுக்க கும்பலை இந்த நாட்டில் வளர விட்டது தான். அந்த பாவ காரியத்தை அவர்கள் செய்யாமல் சவுதியை போல் துலுக்கத்தை அடக்கி வைத்திருந்தால் இன்று கண்டவனும் இந்த நாட்டில் இந்துக்களை கேவலப்படுத்தும் நிலை வந்திருக்காது