'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, January 19, 2015
ஆங்கிலேயனை வியக்க வைத்த துபாய்!
கேண்டிட் கேமரா என்ற நிகழ்ச்சியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மறைவான கேமராவை வைத்து பலரையும் சிரிக்க வைக்க நடத்தப்படும் நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சியை துபாயில் இங்கிலாந்தைச் சேர்ந்த படக் குழுவினர் சமீபத்தில் நடத்தி ஆய்வு செய்தனர். பணத்தோடு கூடிய தனது மணி பர்ஸை வேண்டுமென்றே தவற விட்டு அதற்கு மக்களின் ரியாக்ஷன் எவ்வாறு இருக்கிறது என்று நோட்டமிட்டனர்.
ஆச்சரியமாக.... பர்ஸை பார்த்த அனைவரும் அந்த நபரை கூப்பிட்டு ஒப்படைத்தததை இந்த யுட்யூபில் பார்த்து மகிழுங்கள். இஸ்லாமிய சட்டங்களினால் என்ன நன்மை என்று கேட்பவர்களுக்கு மிக அழகாக இந்த ஆவணப் படம் பதிலளிக்கிறது.
பணக்கார துபாய் ஷேக்குகள் பர்ஸை திருப்பி கொடுப்பது ஆச்சரியமில்லைதான். ஆனால் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வரும் பாகிஸ்தானிய கூலிகளும் வழியில் கிடந்த மணி பர்ஸை உரியவரை அழைத்து திருப்பி கொடுத்ததை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆச்சரியத்தோடு பார்க்கிறார். பர்ஸை எடுத்துக் கொடுத்ததற்காக அன்பளிப்பாக பணம் கொடுக்கிறார். அதனையும் 'நன்றி' என்று சொல்லி விட்டு வாங்காமல் சென்று விடுகின்றனர் ஏழை முஸ்லிம்கள்.
துபாயில் டிரேட் சென்டர் பகுதி, பர் துபாய், டவுன் டவுன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 முறை பர்சை தவற விட்டு சோதனை செய்யப்பட்டு அத்தனை முறையும் அதனை எடுத்தவர்கள் திருப்பி அளித்தனர்.
இது குறித்து பர்சை தவற விடுவதாக நடித்த டேனியல் ஜர்விஸ் கூறியதாவது, எடுத்த பொருளை நேர்மையாக திருப்பி தருவது என்பது அருமையான தருணமாகும். பர்சை எடுத்த அனைவரும் நேர்மையாக நடந்து கொண்டனர். அரபு நாடுகளில் உள்ள மக்களின் நேர்மையை எடுத்துகாட்டுவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.
பணத்துக்கு ஆசைப் படாதவன் எவனுமே இல்லை. எந்த வழியில் வந்தாலும் ஓகே என்று சொல்பவர்கள் தான் உலகில் அதிகம். நமது இறப்புக்குப் பிறகு இந்த பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினோம் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்ற பயம் ஒருவனுக்கு இருந்தால் எத்தனை லட்சம் தவறான வழியில் கிடைத்தாலும் அதனை ஒரு உண்மை முஸ்லிம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இதனையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
இவ்வளவு கடுமையான சட்டங்கள் போட்டும் திருடியே வாழ்க்கையை ஓட்டுபவர்கள் இந்நாடுகளில் ஒரு சிலர் இருக்கவும் செய்கிறார்கள். ஆனால் இவ்வாறு உள்ளவர்கள் மிக சொற்பமே.
இதற்கு வந்த சில பின்னூட்டங்களைப் பார்போம். அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்களே....
Nick Ronaldo
1 week ago
In Muslim Religion, if they caught you stealing they cut your hands. Allah Akbar!
-----------------------------
dzY_Scorpio
1 week ago
I'm a white english male and I have been exposed to the medias misconceptions of Muslims and I would like to say Islam and Muslims are the most kind hearted people in the world.
-----------------------------
Alex
1 week ago (edited)
Dubai has one of the lowest crime rates anywhere in the world.
You can leave your keys in the ignition and go away for like an hour, and no-one would steal your car.
Then you get all these retarded racist English scumbags who claim 'Islam is bad'. Yet, I guarantee you if he had have dropped his wallet in front of one of those racist cunts they would have stolen it.
----------------------------
·
sasoattia
1 week ago
And people say arabs/muslims are terrorists.....
------------------------------
·
Jo C
1 week ago
The same people that claim all muslims are "terrorist" are the same people that label all blacks as crooks and thieves. They let the media paint an image for them and follow it blindly. Judging their fellow man simply by how they look. How pathetic.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment