
(இறந்தவரின் பிரார்த்தனை தொழுகைக்காக உடல் பள்ளி வாசலுக்கு எடுத்து வரப்படுகிறது).
(தொழுகை முடிந்தவுடன் அடக்கம் செய்ய உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.)

உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான மன்னர் அப்துல்லாவின் உடல் ரியாத் மன்ஃபுஹா என்ற இடத்தில் உள்ள பொது மையவாடியில் வெறும் கூழாங் கற்களைக் கொண்டும் மண்ணைக் கொண்டும் உடல் மூடப்படுகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் மழை காற்றால் இவையும் சென்று விடும். இதுதான் இஸ்லாம் காட்டிய வழிமுறை. இதே நேரத்தில் நமது மெரீனா பீச்சையும், டெல்லி ராஜ்காட்டையும் தலைவர்களின் சமாதிகளால் நிரம்பி வழிவதை நினைத்துப் பார்த்தேன்.
மன்னர் இறந்ததற்கான எந்த துக்க ஊர்வலங்களும் இல்லை. கொடிக் கம்பம் துக்கத்தால் அரைக் கம்பத்தில் பறக்கவில்லை. தொழிற் கூடங்கள் துக்கத்தால் மூடச் சொல்லி அரசால் நிர்பந்திக்கப்படவில்லை. வழக்கம் போல் எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.
மன்னர் அப்துல்லா தனது வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை மன்னித்து இறைவன் அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!
நாகூர் தர்ஹாவும் ஏர்வாடி தர்ஹாவும் கதி என்று அதுதான் இஸ்லாம் என்று பாவங்களை சுமந்து வரும் நமது சகோதரர்கள் இது போன்ற சவ அடக்கங்களை பார்த்து தங்களை திருத்திக் கொள்வார்களாக!
படங்கள் உதவி:
அல்ஜஜீரா
23-01-2015
3 comments:
எரியூட்டுவதால் இந்த அடையாளங்களும் இருக்காது. எரியூட்டினால் இந்த 5 அடி நிலம் பயன்பாட்டுக்கு உதவும்.
எரியூட்டினால் இந்த அடையாளங்களும் இருக்காது. எரியூட்டினால் இந்த 5 அடி நிலம் பயன்பாட்டுக்கு கிடைக்கும். இந்திய பிரதமர்களுக்கு அவ்வாறே செய்யப்பட்டன.
பிணங்களை புதைப்பது எல்லாவிதத்திலும் சிறந்தது.நகரங்களில் நிலங்களின் விலை மிகவும் அதிகமாகி வரும் வேளையில் எாிப்து சிறந்தது. தினத்தந்தி அதிபாின் உடல் பெசன்ட் நகல் சுடுகாட்டில் எரியுட்டப்பட்டபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிணங்களுக்கு கப்ரு வாழ்க்கை உண்டு என்று அறிவுகெட்ட பாடம் நடத்தும் அரேபிய இலக்கியங்கள் அதிக எண்ணிக்கையில் முட்டாள்களை உருவாக்கி வருகின்றன. கப்ரு அடக்கம் செய்யப்பட்டுள்ள உடலிடம் இரண்டு தேவதைகள் வருவாா்களாம்.முகம்மதுவை அறிவாயா கலிமா தொியுமா என்று கேள்வி கேட்பாா்களாம் தொியும் என்றால் மணமகன் மணமகள் போல் கப்ருக்குள் நியாய தீா்ப்பு நாள் வரும் வரை இருப்பாா்கள். தொியாது என்றால் இரு சுவர்களாலும் நெருக்கப்பட்டும் மற்றும் பல கொடுமைகளுக்கு ஆளாவாா்களாம். கருணை மிகுந்த அல்லாவின் கட்டளை படி. என்ன பயித்தியக்காரத்தனம். முஸ்லீம்களே பிணங்களை எாியுட்டினால் என்ன குறைந்து விடும். இந்தியாவில் மத பேதமின்றி பிணங்களை எாிக்க வேண்டும் என்று தனிநபா் மசோதா தாக்கல் செய்ய சாக்ளா என்ற நீதியரசாின் திட்டம் தோல்வியில் முடிந்தது. என்ன முட்டாள்கள்.
Post a Comment