
'நீங்கள் ஏன் அதிகார வர்கத்தோடு மோதல் போக்கை கடைபிடிக்காமல் சமரசமாக போய் விடக் கூடாது? என்னதான் இதற்கு முடிவு?' என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.
இவ்வாறு கேட்பவர்களைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு நான் சென்று விடுவேன். ஏனென்றால் சிலரின் சுய ரூபம் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் மாறாது என்பது அவர்களுக்கு புரியப் போவதில்லை. புரிந்தது போல் சிலரால் நடிக்க வைக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு என்றுமே புரியப் போவதில்லை நேரான வழிக்கு என்றுமே தோல்வி இல்லை என்பதை. சில நாட்கள் தாமதம் ஆனாலும் உண்மைக்கு அழிவில்லை என்று நம்புபவன். அது அப்படியே செல்லட்டும். காலத்தின் போக்கிலேயே நாம் விட்டு விடுவோம்.
- sanjiv bhatt
குஜராத்தில் கலவரம் நடந்த அன்று உயர் அதிகாரியாக இருந்த இவர் சிலரின் கட்டளைகளை செயல்படுத்தாததாலும் பத்திரிக்கைக்கு சில தகவல்களை கொடுத்ததாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உண்மை என்றாவது வெளி வரும் என்று பொறுமையோடு இருக்கிறார். அவ்வப்போது தனது மனதில் எழும் எண்ணங்களை முகநூலில் தனது பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றே நாம் மேலே பார்த்தது.
இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து இன்று வரை யாருக்கும் தலை வணங்காமல் பயமின்றி வாழ்ந்து வரும் முன்னால் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை பாராட்ட வார்த்தைகள் இல்லை. என்னைக் கேட்டால் பாரத ரத்னா விருதுக்கு முழுதும் தகுதியானவர் என்பேன்.
No comments:
Post a Comment