Followers

Saturday, January 31, 2015

மெக்ஸிகோவில் காணாமல் போன 43 மாணவர்கள் இறந்திருக்கலாம்?



சுற்றுலா பயணம் சென்ற 43 மாணவர்களை சில நாட்களாக காணவில்லை. அவர்களை மெக்ஸிகோவின் போதை மருந்து கடத்தும் கும்பல் கடத்தியுள்ளதாக முன்பு செய்தி வந்தது. இது பற்றி உயர் அதிகாரி ஜீஸஸ் முரில்லோ சொல்லும் போது 'கடத்தப்பட்ட 43 மாணவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களை கொன்று உடலை எரித்து ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றோரங்களில் டீசல், துணிகள், எரிந்த உடலின் அடையாளங்கள் போன்றவற்றை நாங்கள் சேகரித்துள்ளோம். இதனை செய்தது போதை மருந்து கடத்தும் கும்பல் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது' என்கிறார்.

இந்த செய்தி உலக மீடியாக்களிலும், நமது நாட்டு மீடியாக்களிலும் எந்த முக்கியத்தையும் பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இஸ்லாமிய பெயர் தாங்கி எவனாவது ஒரு காரியத்தை செய்தால் அதனை ஊதி பெரிதாக்கி ஒட்டு மொத்த மீடியாக்களும் ஒத்த குரலில் இஸ்லாத்தை நோக்கி கையை நீட்டுவதை பார்க்கிறோம். இதுதான் இன்றைய ஒட்டு மொத்த உலக மீடியாக்களின் நிலை.

தகவல் உதவி
presstv
28-01-2015

No comments: