மொழி வெறியை தவிருங்கள் தோழர்களே!
//கீழே உள்ள படத்தில் இருப்பது , வேலூர் மாவட்டம் பேர்னாம்பேட்டை என்ற ஊரில் , பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றும் உருது முஸ்லீம்கள்.
நிச்சயமாக இவர்கள் , தமிழ் முஸ்லீம்கள் இல்லை .
தமிழன் என்றைக்குமே, ஆரிய கைக்கூலியாக மாற மாட்டான் .
அவன் இந்து தமிழனாக இருந்தாலும் சரி, இஸ்லாமியத்தமிழனாக இருந்தாலும் சரி . கிறித்தவ தமிழனாக இருந்தாலும் சரி .
இன்றுதான், அந்த வரிகளின் பொருள் உணர்ந்து படித்தேன். அந்த வரிகள் இதோ!
"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"//
- @இமாம் உசேன் சம்சுதீன்
ஒருவன் தவறான பாதையில் செல்ல மொழி ஒரு காரணமே அல்ல. தனக்குள் ஏற்படும் சுயநலம்தான். தமிழ் முஸ்லிம்களிலும் எத்தனையோ வழிகெட்ட கூட்டங்கள் உண்டு. எனவே மொழி என்பது ஒரு மனிதன் மற்றவர்களோடு உரையாட உபயோகிக்கும் ஒருசாதனமே. தாய் மொழிக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுப்பது மனித இயல்பு. ஆனால் அது வெறியாக மாறி விடக் கூடாது. எனது தாய் மொழியான தமிழில் நான் எழுதும் போது கிடைக்கும் இன்பம் மற்ற மொழிகளை படிக்கும் போதோ எழுதும் போதோ எனக்கு கிடைப்பதில்லை. அவரவர் தாய் மொழி அவரவர்க்கு சற்று உயர்வே. எவரையும் நாம் கட்டாயப்படுத்தக் கூடாது. மொழி வெறியை நபிகள் நாயகம் கண்டித்துள்ளார்கள்.
'மொழி வெறியையும், குலப் பெருமையையும் எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்ன நபிகள் நாயகத்தை பின் பற்றும் எவரும் உருது முஸ்லிம், தமிழ் முஸ்லிம் என்று பிரித்து பார்க்க மாட்டார். அனைவரும் ஆதமுடைய மக்கள் என்ற பரந்த மனப்பான்மைக்கு வாருங்கள்.
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதுதான் நமது தமிழ் முன்னோர்களின் வாக்கு. அதையும் மறந்து விட வேண்டாம்.
1 comment:
குலப்பெருமையை ஒழிப்பேன் என்றெல்லாம் சப்பட்டை வசனம் பேசிய முகம்மது அன்சாாிகளை ஒதுக்கி விட்டு-துரோகம் செய்து விட்டு குரைஷி மக்களை முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில்நியமித்தது ஏன் ?
Post a Comment