Followers

Wednesday, January 28, 2015

'திருப்பித் தரும் வானம்' - சில அரிய செய்திகள் நாம் அறிய!

'திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல'
-குர்ஆன் 86:11,12,13,14


இந்த வசனத்தில் "இது இறைவனிடம் இருந்து வந்ததுதான் இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம்" என்று உலக மக்களுக்கு இறைவன் அறிவுறுத்துகிறான். எவ்வாறு வானம் மனிதனுக்கு உதவியாக பல பொருட்களை திருப்பித் தருவது உண்மையோ, எவ்வாறு பூமி பூகம்பத்தால் பிளந்து விடுவது உண்மையோ அதுபோல் இந்த குர்ஆனும் இறைவனிடம் இருந்து வந்துள்ளது என்பதும் உண்மையாகும். எனவே இதன் மீது நம்பிக்கை வைத்து வாழ்வை சீராக்கிக் கொள்ளுங்கள் என்கிறான் இறைவன்.

இனி இந்த வசனத்தையொட்டிய அறிவியல் கருத்துக்களில் நுழைவோம்.

படம் 1: ட்ராபோஸ்பியர்(troposphere) என்ற வளிமண்டல இடமானது பூமியிலிருந்து 6 முதல் 10 கிலோ மீட்டர் வரை பரந்துள்ளதாக அறிவியலார் கணிக்கின்றனர். இந்த பகுதிதான் பூமியின் நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டு பின்னர் அதனை மழையாக நமக்குத் தருகிறது.



படம் 2:அயனோஸ்பியர் (ionosphere) என்ற வளிமண்டலமானது பூமியிலிருந்து 80 முதல் 1000 கிலோ மீட்டர் வரை பரந்து விரிந்துள்ளது. இந்த வளி மண்டலத்திலுள்ள காந்த கதிர்கள் பூமியிலிருந்து ரேடியோ, டிவி, செல்பேசி போன்றவை வெளியிடும் அலைகளை உள்வாங்கிக் கொண்டு திரும்ப பூமிக்கு கொடுத்துக் கொண்டுள்ளது.

இன்று நாம் சாடலைட் யுகத்தில் வாழ்வதால் இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்வது நமக்கு சிரமமாக இருக்காது. அந்த காலத்திய மக்கள் 'திருப்பித் தரும் வானம் வானம்' என்றால் மழையை மட்டுமே குர்ஆன் சொல்வதாக புரிந்து கொண்டிருப்பர். மழை நீர் கூட வானத்திலிருந்து நேரிடையாக பொழிவதாகத்தான் பல காலம் மக்கள் நம்பியிருந்தனர். மழை நீர் மட்டும் அல்ல பின்னால் வரக் கூடிய பல அறிவியல் கண்டு பிடிப்புகளையும் வானத்தை நோக்கி செலுத்தி அதிலிருந்து நாம் நன்மைகளை பெற்றுக் கொள்வோம் என்ற உண்மையை 'திருப்பித் தரும் வானம்' என்ற வசனத்தின் மூலம் மனிதர்களுக்கு இறைவன் அறிவுறுத்துகிறான்.



படம் 3: ஓஜோனோஸ்பியர் (ozonosphere - ஓசோன் அடுக்குகள்) நமது வளி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு அடுக்குகளும் மற்றவற்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் தங்களின் பணியை மனித குலத்திற்கு செய்து கொண்டிருக்கின்றன. மழை வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட அடுக்கு அதற்குரிய வேலையை செய்கிறது. இணையம், ரேடியோ, தொலைக்காட்சி, செல்போன் போன்றவை தடையின்றி செயல்பட அதற்கென ஏற்படுத்தப்பட்ட வளி மண்டல அடுக்குகள் தங்கள் பணியை எந்த இடையூறும் இல்லாமல் செய்கிறது.. இவ்வாறு காரியங்கள் தடையின்றி நடைபெற ஓசோன் அடுக்குகளும் தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.



இவை எல்லாம் நம்மை படைத்த இறைவன் என்ற ஒருவன் இருந்து அவற்றிற்கான கட்டளைகளை பிறப்பிப்பதால்தான் தடையின்றி செயல்பட முடியும் என்ற முடிவுக்கு ஒரு அறிவுள்ள மனிதன் வந்தே தீருவான். இனி வசனத்தை மீண்டும் பார்போம்.

'திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல'
-குர்ஆன் 86:11,12,13,14


தகவல் உதவி:
ஹாருன் யஹ்யா இணைய தளம்
HARUN YAHYA

No comments: