Followers

Thursday, February 12, 2015

'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்!' - வாதம் வெற்றியைக் கொடுக்குமா?



'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்!' - வாதம் வெற்றியைக் கொடுக்குமா?

திரு ஆனந்தன்!

//தமிழர் வழிபாட்டு முறையில் பார்ப்பனியத்தைப் புகுத்தினான் ஆரியன்... தமிழர் வழிபாட்டு முறையோடு சேர்ந்து தமிழர் கட்டடக் கலை., சிற்பக் கலை., கட்டடக் கலையின் தமிழின் அறிவியல் போன்ற பலவற்றை இருட்டடிப்பு செய்தது திராவிடம்...

புகுத்தப்பட்ட பார்ப்பனீய வழிபாட்டு முறையை பிரித்து தமிழர் வாழிபாட்டு உரிமையை மீட்டெடுக்கும் செயலா பார்க்கக் கூடாதா...?

குறிஞ்சி நில மக்களின் தெய்வமான முருகனை சுப்பிரமணிய சாமியாக்கி., வலப்பக்கம் தெய்வானை என்ற மனைவியைச் செருகி., சிவனை அப்பனாக்கி., பிள்ளையாரை அண்ணனாக்கிய வரலாற்றுப் புரட்டை உடைத்தெரியும் செயலாகக் கருதக்கூடாதா...?//

நீங்களும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்பனர்களிடமிருந்து தமிழ் கடவுள்களை மீட்கப் போகிறேன் என்று கிளம்பியுள்ளீர்கள். நோக்கம் நல்லதாக இருக்கிறது. ஆனால் இதில் வெற்றி கிடைக்குமா என்றால் கிடைக்காது என்பது தான் பதிலாக இருக்கும். ஏனெனில் ஆதியிலிருந்து அந்தம் வரை கடந்த 3000 வருடங்களாக சிறுக சிறுக தமிழர்களின் கலாசாரம், பழக்க வழக்கங்கள், தெய்வ வழிபாடுகள் அனைத்தையும் பார்பனியம் விழுங்கி விட்டது. அனைத்து கோவில்களிலும் அவர்களின் மொழியான சமஸ்கிரதம் புகுந்து விட்டது. தமிழர்களின் வேத கால நூல்கள் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டு பார்பனர்களின் நூல்களே புனிதம் என்ற பொது புத்திக்கு பெரும்பாலான தமிழர்கள் வந்து விட்டனர். ராமாயணமும் மகாபாரதமும் மனு ஸ்ருமதியும் தமிழனின் வேதங்களாக உருமாறி இன்று எழுதப்படாத விதியாகவும் மாறிவிட்டது. வள்ளுவரும், வள்ளலாரும், திருமூலரும் இன்று தமிழனுக்கு அந்நியமாக்கப்பட்டு பல வருடங்களாகிறது.

ஆட்சி அதிகாரம் என்று தமிழகத்திலிருந்து டெல்லி வரை அவர்களின் அதிகாரமே செல்லுபடியாகிறது. சிதம்பரத்தில் தமிழில் பாட அனுமதி கேட்ட ஆறுமுகசாமிக்கு என்ன நிகழ்ந்தது என்பதை நீங்களும் அறிவீர்கள். இன்றும் சிதம்பரத்தில் ஒரு வாசல் பூட்டப்பட்டே உள்ளது. சிதம்பர ரகசியம் என்பதுதான் அதுவா? :-) என்றும் தெரியவில்லை. ஸ்ரீரங்கம் கொவிலிலும் உங்களின் போராட்டம் எந்த அளவு பிசுபிசுத்துப் போனது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. தமிழக கோவில்கள் அனைத்தும் பார்பனர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது. நீங்கள் என்னதான் போராட்டங்களை எடுத்துச் சென்றாலும் அது வன்முறையில்தான் முடியும். இது பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்.

சட்டத்தைப் பாதுகாக்கும் காவல்துறை உயரதிகாரிகளும் நீதி துறையில் தலைமை நீதிபதிகளாக சட்டம் இயற்றும் இடத்தில் அமர்ந்திருப்பதும் பெரும்பாலும் பார்பனர்களே! எம்எல்ஏ, எம்பிக்கள் வேண்டுமானால் எண்ணிக்கையை கணக்கில் வைத்து உங்கள் சாதியை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் அந்த எம்பிக்களும் எம்எல்ஏக்களும் மந்திரிகளும் போடும் உத்தரவுகளை செயல்படுத்தும் உயரதிகாரிகள் பெரும்பாலும் பார்பனர்களே!

வறுமையில் வாடும் சிறுபான்மையினருக்கு முந்தய காங்கிரஸ் அரசு படிப்பு உதவி தொகையாக பல கோடிகளை தமிழகத்துக்கு தந்தது. ஆனால் அதிகார வர்க்கம் இங்கு யாரும் அந்த நிலையில் இல்லை என்று காரணம் காட்டி வழங்கப்பட்ட உதவித் தொகையை டில்லிக்கே திருப்பி அனுப்பியுள்ளது. சிறுபான்மை மக்கள் கல்வி வேலை வாய்ப்பு பெற்று விடக் கூடாது என்பதில் அவர்கள் எந்த அளவு கண்ணும் கருத்துமாக உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல. தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அவர்கள் பார்வையில் அந்நியர்களே.

பிறகு இதற்கு என்னதான் வழி என்று கேட்கலாம். வர்ணாசிரமத்தோடு மல்லு கட்டாமல் கத்தியின்றி ரத்தமின்றி உங்கள் முன் உள்ள ஒரே வழி இஸ்லாத்தை ஏற்பதுதான். கிறித்தவம் பவுத்தத்திலும் இதே சாதிப் பேய் குடி கொண்டு பல நாட்களாகிறது.

கலெக்டர் உமா சங்கர் கூட 'நான் ஐஏஎஸ் ஆக பதவியில் இருந்தாலும் கிருத்தவர்கள் பார்வையில் நான் தாழ்த்தப்பட்டவன்தான். உயர் சாதி கிருத்தவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் கிடைப்பதில்லை' என்று பரிதாபமாக தொலைக்காட்சி பேட்டியில் கூறியதை மறந்து விட முடியாது. ஒரு கலெக்டருக்கே அங்கு இந்த நிலைமை.

இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். நமது முன்னோர்கள் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையின் அடிப்படையில்தான் வாழ்ந்துள்ளார்கள். இஸ்லாத்தை ஏற்பதால் நமது மொழியான தமிழுக்கு எந்த இழுக்கும் வந்து விடாது. ஏனெனில் தேவ மொழி என்று குர்ஆனில் எந்த மொழியையும் குறிப்பிடவில்லை. நமது தாய் மொழி கலாசாரம் போன்றவை பாதுகாக்கப்படுவதோடு முக்கியமாக சூத்திரன் என்ற இழிச் சொல்லும் எடுக்கப்படுகிறது. சுய மரியாதை கிடைக்கிறது. பல தலைமுறைகளாக இஸ்லாமியர்களாகிய நாங்கள் அந்த சுய மரியாதையை ஒவ்வொரு நாளும் பெற்று வருகிறோம். எனவே எங்கள் தொப்புள் கொடி உறவான உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்.

சித்திரச் சோலைகளே - உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே......

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியதை இங்கு நினைவு கூறுகிறேன். இஸ்லாமியருக்காக பாடியதாகவே இதனை நான் எடுத்துக் கொள்கிறேன். எங்களின் முன்னோர்கள் இந்த அடிமை சங்கிலியை உடைக்க ரத்தம் சிந்தினர். தமிழகம் என்ற இந்த வேரிலே எனது முன்னோர்கள் முன்பு எந்த அளவு கொடுமைபடுத்தப் பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பார்கிறேன். இந்த கணிணி யுகத்திலேயே சாதி வெறி இந்த அளவு தாண்டவமாடுகிறதே.... ஒரு 1000 வருடங்கள் பின்னோக்கி சென்று அன்று இந்த தமிழகம் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன். அன்று எனது முன்னோர்கள் சிந்திய ரத்தம் இன்று நாங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். சுய மரியாதையை பெற்று வருகிறோம்.

'யாம் பெற்ற சுகம் பெறுக இவ்வையகம்' என்று அன்போடு உங்களை உரிமையோடு அழைக்கின்றேன்! கட்டாயம் இல்லை! சிந்தித்து முடிவெடு எனது தொப்புள் கொடி உறவே.......!



2 comments:

Anonymous said...

//நீங்களும் உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்பனர்களிடமிருந்து தமிழ் கடவுள்களை மீட்கப் போகிறேன் என்று கிளம்பியுள்ளீர்கள். நோக்கம் நல்லதாக இருக்கிறது. ஆனால் இதில் வெற்றி கிடைக்குமா என்றால் கிடைக்காது என்பது தான் பதிலாக இருக்கும்.//

வெற்றி கிடைக்க கூடாது என்பது தான் முஸ்லிம்களின் எண்ணமுமாக இருக்கும். அப்படி ஒருவேளை வெற்றி கிடைத்தால் துலுக்கர்களின் அரபு மத வியாபாரம் இங்கே படுத்து விடும். துலுக்க கும்பல் தங்கள் அரபு மத வியாபாரத்திற்காக மட்டுமே 'தமிழ் பண்பாடு, வழிபாடு' என்று மூளை சலவை செய்து மக்களை திசை திருப்புவார்கள். ஆனால் அரபு குப்பையை தூக்கி எறிந்துவிட்டு தமிழ் கலாச்சாரத்தை மீட்போம் என்று கூறினால் முகத்தை திருப்பி கொள்வார்கள்.

திரு சுவனம் உனது ஊத்தை வாதம் ரொம்ப கேவலமாக இருக்கிறது. அரபு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றால் எனது நாட்டை விட்டு வெளியேற வேண்டியது தானே ஈன துலுக்க பிறவியே. கோடிக்கணக்கில் துரோகிகளை நாட்டுக்குள் வைத்து அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களை செய்து கொடுத்து சுகமாக வாழ வைத்திருக்கும் நாடு ஓன்று உண்டென்றால் அது இந்தியா மட்டும் தான்.

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

//யாம் பெற்ற சுகம் பெறுக இவ்வையகம்' என்று அன்போடு உங்களை உரிமையோடு அழைக்கின்றேன்! கட்டாயம் இல்லை! சிந்தித்து முடிவெடு எனது தொப்புள் கொடி உறவே.......! //

உனது அழைப்பை கொண்டு சாக்கடையில் போடு,

//அன்று எனது முன்னோர்கள் சிந்திய ரத்தம் இன்று நாங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். சுய மரியாதையை பெற்று வருகிறோம்.//
ஆமாம், அரபியனுக்கு அடிமையாக வாழ்வது என்ன ஒரு சுய மரியாதை தெரியுமா. சுயமாக சிந்திக்க முடிந்தவன் தான் சுய மரியாதை உள்ளவன்.
உன்னால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியுமா? எல்லாமே மத கட்டளைப்படி ஒரு புத்தகத்தின் படி செயல்படும் கிணற்று தவளை கும்பலுக்கு எங்கிருந்து சுய மரியாதை வந்தது.

Anandan Krishnan
Kanyakumari