பாகிஸ்தானில் சீக்கிய பெண் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டாரா?
கடந்த மூன்று நாட்களாக ஒரு செய்தியை பார்த்திருப்பீர்கள். பாகிஸ்தானில் சீக்கிய பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் முடிக்கப்பட்டதாக செய்திகள் வருகிறது. அதனை இந்திய மீடியாக்கள் திரும்ப திரும்ப ஒலிபரப்பி அனைத்து மக்களையும் சென்றடையச் செய்கிறது. இதன் உண்மை தன்மை என்ன என்பதை கடத்தப்பட்டதாக கூறும் சீக்கிய பெண் தரும் வாக்கு மூலத்தைப் பார்ப்போம்.
"I am an independent individual. I am 19 years old. I contracted marriage with one Muhammad Hassaan on August 28, 2019, of my own free will and consent. My Sikh name was Jagjit Kaur and it was mentioned in an FIR as well whereas after the conversion to Islam, I adopted the new name Ayesha."
"Neither anybody abducted me nor committed zina [Islamic legal term meaning illicit sexual relations] with me. I left my parent's house with three pairs of clothes, without any gold ornaments or cash. The accused persons in the FIR are innocent. The story narrated in the FIR is false, frivolous and baseless."
India today
30-08-2019
"Neither anybody abducted me nor committed zina [Islamic legal term meaning illicit sexual relations] with me. I left my parent's house with three pairs of clothes, without any gold ornaments or cash. The accused persons in the FIR are innocent. The story narrated in the FIR is false, frivolous and baseless."
India today
30-08-2019
'எனது வயது 19. முஹம்மது ஹஸன் என்பவரோடு நான் திருமண ஒப்பந்தம் முடித்துள்ளேன். ஆகஸ்டு 28ந்தேதி எனது முழு சம்மதத்தோடு எங்களின் திருமணம் நடந்தேறியது. எனது சீக்கிய பெயர் ஜிக்ஜித் கவுர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு எனது பெயரை ஆயிஷா என்று மாற்றியுள்ளேன். எனது முழு சம்மதத்தோடுதான் இஸ்லாத்தை ஏற்றுள்ளேன்.
என்னை யாரும் கடத்தவில்லை. என்னை யாரும் விபசாரத்திலும் தள்ளவில்லை. முறையாக திருமணம் முடித்துள்ளேன். மூன்று ஜோடி மாற்று உடைகளை மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் போது எடுத்து வந்தேன். எந்த தங்க ஆபரணங்களையும் எடுத்து வரவில்லை. என்னை மிரட்டி முஸ்லிமாக்கியதாக கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள்.'
என்று கூறுகிறார்.
ஜக்ஜித் கவுர் என்ற இந்த சீக்கிய பெண் லாகூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது இவரது சீக்கிய பெற்றோர் இஸ்லாத்துக்கு மாறினால் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார். நமது நாட்டில் சாதி மாறி திருமணம் முடித்தால் பெற்றோரே தனது பிள்ளைகளை கொல்கிறார்களே... அது போல பாகிஸ்தானிலும் உள்ளது போல...
நிலைமை இவ்வாறு இருக்க நமது ஊடகங்களோ சீக்கியபெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக செய்திகளை தொடர்ந்து ஒலிபரப்புகின்றனர். கட்டாய மத மாற்றம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. விரும்பி வருபவர்களை இருகரம் நீட்டி அரவணைப்போம். கட்டாயமாக மதமாற்றம் செய்யும் அவசியம் இஸ்லாமியருக்கு இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறோம். 'கட்டாய மத மாற்றம் ' என்று செய்தி வெளியிட்ட நமது ஊடகங்கள் பிறகு வந்த உண்மை செய்தியை சாமர்த்தியமாக இருட்டடிப்பு செய்து விட்டனர். வலைத்தளங்கள் இல்லை என்றால் இந்த செய்தியும் மறைக்கப்பட்டிருக்கும்.
தகவல் உதவி
India today
30-08-2019
India today
30-08-2019
ஆக்கம்: சுவனப்பிரியன்
1 comment:
பாக்கிஸ்தானில் சிறுபான்மை மக்களாக வாழும் இந்து சீக்கிய கிறிஸ்தவ மக்களை பலவகைகளில் அவமானப்படுதுவது முஸ்லீம்களின் பண்பாடு.அரேபிய மத பண்பாடு.
வீட்டிற்கு 6 பேர்கள் வந்து மகளை தூக்கி சென்றார்கள். என்ற பெற்றோர்களின் அறிவிப்பை வெளியிடாதது ஏன் ? பாக்கிஸ்தான்காரனுக்கு அடிமையாக வாழும் சுவனப்பிரியனுக்கு பிடித்தவன் சமய சகோதரன் பாக்கிஸ்காரன்தான். ஆக சுவனப்பிரியன் நியாயம் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
Post a Comment