Followers

Saturday, January 24, 2015

பெல்ஜியம் நாட்டு புகழ் பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்கி.....







2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார். மொராக்கோ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தனது பெயரை ஆயிஷா என்றும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். முன்பு அரை குறை ஆடையோடு பல ஃபேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டார். இஸ்லாத்தை ஏற்றதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் முழு உடம்பையும் மறைக்கும் வண்ணம் உடைகளை தேர்வு செய்து கலந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தற்குள்ளாக்குகிறது. முன்பு மது அருந்தியவர் இன்று வெறும் சோடாக்களை மட்டுமே குடிக்கிறாராம். பன்றி மாமிசம் சாப்பிடுவதையும் விட்டு விட்டாராம்.

பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர் மொமுத்து டயா வை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு முன்பு தனது கணவர் இஸ்லாமிய பெயர் மட்டும் போதாது அதன்படி வாழவும் வேண்டும் என்று கட்டளையிட்டார். அதையே நானும் பின்பற்றுகிறேன் என்கிறார் ஆயிஷா.

கல்லூரியில் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட் படிப்பை மேலும் தொடர்கிறார். 2016ல் இவரது படிப்பு முடிவுறும். இவரது மன மாற்றத்துக்கு வழக்கம் போல் பெல்ஜிய நிற வெறியர்கள் இவரை தூற்ற ஆரம்பித்துள்ளனர். 'உனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு கண்களின் மஞ்சள் நிறம் மாறிவிடும், முடியின் நிறமும் தோலின் நிறமும் மாறும். இனி ஐரோப்பியன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள உன்னால் முடியாது. நீ ஒரு பிசாசு' என்றெல்லாம் அர்ச்சனைகள் தொடங்கி விட்டன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் தனக்கு கிடைத்த அழகிய வாழ்வு முறைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறார் ஆயிஷா. இவரது அழகுக்கு வெள்ளை நிறத்து ஐரோப்பியர்கள் எத்தனையோ பேர் கிடைப்பர். கருப்பராக இருந்தாலும் அவலட்சணமாக இருந்தாலும் இஸ்லாத்தை வாழ்வியலாகக் கொண்ட ஒருவரே தனக்கு சரிப்பட்டு வருவார் என்று முடிவெடுத்து இன்று இந்த ஆப்ரிக்கரை கைப்பிடித்துள்ளார் இந்த அழகி.

கருப்பும் வெள்ளையும் இன்று இஸ்லாத்தால் ஒன்றாகியுள்ளது. நிற வெறி, மொழி வெறி, கலாசார வெறி அனைத்தும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. இனி இந்த இருவரின் கலாசாரம் முகமது நபி காட்டித் தந்த வழிமுறையாக இருக்கும். இந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்.



1 comment:

Dr.Anburaj said...

லவ் ஜிகாத் தான் நடக்கின்றது.முஸ்லீம் ஆண்மகனொடு அம்மணிக்கு காதல் தீவிரமாகிவிட்டது. எனவே வாழ்க்கை முறை மாறியாக வேண்டும்.இதில் இசுலாம்-அரேபிய மதம்தான் சிறந்தது என்று புளங்காகிதம் அடைவது அறிவீனம். வாழ்க மணமக்கள்.மணமக்கள் இராமாயாணம் படிக்க வேண்டும்.