Followers

Tuesday, April 12, 2016

சாமியாரின் சர்ச்சைக் கருத்துக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்



"சனி பகவான் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்ததால், பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும்" என்று கருத்துக்காக சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா மன்னிப்பு கேட்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் பல வலியுறுத்தியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் சிங்கணாப்பூர் சனி பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் இருந்தது.

இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றனர். இதையடுத்து கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஏராளமான பெண்கள் கடந்த சில நாட்களாக கோயில் கருவறை வரை சென்று பூஜைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், துவாரகா பீடத்தின் தலைவர் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா "சனிக் கிரகம் பெண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. சனி கோயில் கருவறைக்கு செல்லாமல் தவிர்ப்பது அவர்ளுக்கு நல்லது. ஆனால், சனி பகவான் கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு மகளிர் அமைப்புகள் பல கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மகளிர் உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர் ரஞ்சனா குமாரி கூறும்போது, "சாமியார் ஸ்வரூபானந்தாவின் கருத்து மூர்க்கத்தனமானது.

இந்தியாவில் பலாத்காரம் கிரிமினல் குற்றமாக இருக்கிறது. பலாத்காரத்தையும், பெண்களின் கோயில் வழிப்பாட்டையும் ஒப்பிட்டு பேசுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

பெண்களை இழிவுபடுத்தும் அந்தக் கருத்தை அவர் திரும்பப் பெறாவிட்டால் அவரது மடத்தின் முன் திரண்டு போராட்டங்கள் நடத்துவோம்." என எச்சரித்துள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-04-2016

5 comments:

Dr.Anburaj said...


முதலில் வேதங்களை முறையாக ஆய்வு செய்து பாா்த்தால் சனி பகவான் என்ற கோவில் தேவையற்றது. வயிற்றுப் பிழைப்புக்காக உருவானது. இந்த கோவிலில் அனைவரும் வழிபாடு செய்யலாம். ஆண் பெண் பேதம் இல்லை.பெண்கள் வழிபட போதிய வசதிகள் இருப்பின் அனுமதிக்க வேண்டும்.

பொதுவாக இந்த சங்கராச்சாாியா்களே மிகவும் பிற்போக்கான கோமாளிகள்.

இவர்கள் ஏதோ மகராஜாக்களைப் போலவும் சமஸ்தானத்து ராஜாக்கள் போலவும் ஒரு விதமான மயக்கத்தில் இருக்கின்றாா்கள்.
பாா்பனங்களின் வக்கிரக குணங்களை கணடிக்காதவா்கள். பிற சமூக மக்களின் ஆன்மீக நலன்குறித்து எந்தவித அக்கறையும் இல்லாதவா்கள். பாா்ப்பனா் அல்லாத பிற சாதி மக்களிடையே முறையான சமய கல்வி பயிற்சி அளிக்க இவர்களுக்கு எந்த திட்டமு்ம் கிடையாது.

நாய்கள் குரைத்தால் கூட ஏன் என்று பாா்க்கலாம். சங்கராச்சாாியாா்களுக்கு அந்த யோக்கியதை கிடையாது.

Dr.Anburaj said...


ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனைச் சோ்ந்த துறவிகள் ஒரு போதும் இத்தகைய விமா்சனங்களைச் செய்ய மாட்டாா்கள்.
01. விதவைப் பெண்கள் மொட்டை போடும் பழக்கத்தை ஸ்ரீராமகிருஷ்ணா் தடுத்தாா்.அவரது மனைவியாா் பரமஹம்சாின் இறப்புக்குப் பிறகு மொட்டை போடவில்லை. நீண்ட கூந்தலை அப்படியே வைத்திருந்தாா்.

02.மஹம்மது தனது மனைவிமாா்கள் மட்டும் ஜமாத்தின் தாய் என்று அவர்களுக்கு மட்டும் சந்நியாசம் வழங்கினாா். இது மஹம்மதின் போதனைக்கு முரணானது.

03.தாய் என்ற எண்ணம் ஓங்கி வளா்ந்து விட்டால் தாய்மை பண்பு வந்து விட்டால் மனதில் வேரூன்றி விட்டால் துறவு நிலையும் இயல்பானதுதான். இன்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஒரு பிாிவாக ஸ்ரீ சாரதா மடம் உள்ளது.சேலத்தில் ஸ்ரீசாரதா சமிதி உள்ளது. உளுந்தூா் பேட்டையில் சாரதா ஆஸரமம் உள்ளது.இவர்கள் ஸ்ரீசாரதாதேவியை தாயாகக் கொண்டு மிகச்சிறந்ததொண்டை செய்து வருகின்றாா்கள்.
இவர்“களைப் பற்றி சிந்திக்க சிந்திக்க நன்மை பெருகும்.

Dr.Anburaj said...


இந்து சமய அமைப்பு எதுபற்றியாவது குறை சொல்ல வாய்ப்பு கிடைத்தால் வாிந்து கட்டிக் கொண்டு பதிவு செய்து விடுவாா் அரேபிய அடிமை சுவனப்பிாியன்.

Dr.Anburaj said...


மலருங்கள் மடாதிபதிகளே…April 8, 2011 `

மஹாகவி பாரதியார்

christian_pontiffஇந்தியா முழுவதிலுமுள்ள ஹிந்துக்களின் அனுகூலத்திற்குப் பாடுபட்டு வரும் ‘அகண்ட பாரத ஹிந்து சபை’யின் காரியதரிசியான ஸ்ரீ ரத்னசாமு என்பவர் தேராதூன் பட்டணத்தில் இருந்து ‘ஹிந்து’ பத்திரிக்கைக்கு எழுதியிருக்கும் லிகிதமொன்றில் பின்வருமாறு சொல்லுகிறார்:

‘இந்த மாதம் முதல் தேதி, சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஏறக்குறைய முந்நூறு பேரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகிறது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.’

ஆம்; ஹிந்துக்கள் வருத்தப்படத்தக்க செய்திதான் அது. ஹிந்துக்களுடைய ஜனத்தொகை நாளுக்கு நாள் குறைவு பட்டு வருகிறது.

கவிதையிலுள்ள மலைப்பாம்பு போல, வாலில் நெருப்புப் பிடித்தெரியும் போது தூங்கும் வழக்கம் இனி ஹிந்துக்களுக்கு வேண்டாம். விழியுங்கள். ஜனத்தொகை குறையும்போதே பார்த்துக் கொண்டே சும்மா இருப்போர் விழித்திருக்கும்போதே தூங்குகிறார்கள். அவர்கள் கண்ணிருந்தும் குருடர்.

பஞ்சமர்களின் விஷயமாக அகண்ட பாரத ஹிந்து சபையின் காரியதரிசி ஸ்ரீ ரத்னசாமு என்பவருக்கு ஸ்ரீ காசி ஹிந்து சபையின் தலைவராகிய வைதிகமணி ஸ்ரீமான் பகவான் தாஸர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஒரு நல்ல யோஜனை சொல்லுகிறார்:

“பறையர்களுடைய தீண்டாமையை உடனே நீக்கிவிட வேண்டும். காசி, நவத்வீபம், பிருந்தாவனம் என்ற ஸ்தலங்களில் உள்ள பண்டிதர்களும் இவ்விஷயமாக உடனே உத்தரவு கொடுக்க வேண்டும்”.

separated_diningபஞ்சமருடன் பந்தி போஜனம் செய்ய வேண்டும் என்றாவது, சம்பந்தங்கள் செய்ய வேண்டுமென்றாவது மேற்படி ரத்ன சாமு முதலிய தர்மிஷ்டர்கள் விரும்பவில்லை. ஹிந்துக்களுக்கு இதர வகுப்பினர் பந்தி போஜனம், சம்பந்தங்கள் இல்லாதிருக்கும் வரை பஞ்சமரும் அப்படியே இருக்கலாமென்று ஸ்ரீ ரத்னசாமு சொல்லுகிறார்.

ஆனால், பஞ்சமரின் சேரிகளிலே கிறிஸ்துவப் பாதிரிமார்கள் பள்ளிக் கூடங்கள் முதலியன வைப்பது போல் நமது குருக்கள் ஏன் செய்யவில்லை?


அவர்களுக்கு ஹிந்து மதோபதேசம் செய்யும் கடமை யாரைச் சேர்ந்தது?
அதற்கு மேற்படி மடாதிபதிகள் ஏன் ஆளனுப்பவில்லை?


ஹிந்து தர்மத்தின் மஹிமையை நன்றாக அறிந்தோர் இஹலோக வாழ்க்கையில் எத்தனை கொடூரமான கஷ்ட நிஷ்டூரங்கள் நேரிட்டாலும் இந்து தர்மத்தைக் கைவிட மாட்டார்கள்.

உலகத்தில் நிகரற்றதாகிய வறுமையானது நமது தேசத்தை வந்து பிடித்துக் கொண்ட கால முதலாக நமது நாட்டார் பசியாலும், அதனாலேற்படும் நோய்களாலும் லக்‌ஷக்கணக்காக அகால மரணத்துக்கு இரையாகி வருகிறார்கள். பசித் துன்பம் எல்லாருக்கும் பொதுவாக இருந்தாலும் கீழ் வகுப்பினருள் அதிகமாகப் பாதிக்கிறது. நாட்டில் பஞ்சம் நேரிட்டால் பஞ்சமர் முதலிய தாழ்ந்த வகுப்பினர் அதிகமாகச் சாகிறார்கள்.

caste___rig_veda___krsna_dvaipayana_vyasadevaபறையரும், புலையரும், பள்ளரும், சக்கிலியரும் நம்மைப் போல ஹிந்துக்களென்பதையும், விபூதி நாமம் போட்டுக் கொண்டு நமது தெய்வங்களையே வணங்குவோரென்பதையும், மடாதிபதி, புரோஹிதர், குருக்கள் முதலியவர்கள் சற்று மறந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது.

“அங்கமெலாங் குறைந்தழுகு தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் யாம்வணங்குங் கடவுளாரே”

என்ற வாக்கைத் தமிழ் வேதமாகக் கொண்டாடுவோர் அதன் பொருளை தெரிந்து கொள்ளவில்லை.

“ஒக்கத் தொழுகிற்றி ராயின் கலியுகம் ஒன்றுமில்லை” என்ற திருவாய்மொழிக் கருத்தை அநேகர் அறியாதிருக்கிறார்கள். ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரியதில்லை. அதனால் நாம் தொல்லைப் படுவோமேயன்றி அழிந்து போய் விட மாட்டோம்.

ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப் பட்டாலும் பெரியதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும்; இருந்தாலும், நமக்கு ஸர்வ நாசம் ஏற்படாது.

ஆனால், ஹிந்து தர்மத்தைக் கவனிக்காமல் அசிரத்தையாக இருப்போமானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும்; அதில் சந்தேகமில்லை.

caste_sankaracharya_ஹிந்து மதம் ஒன்று. சைவம் வைஷ்ணவம் முதலிய ஆறு சமயங்களும் அதன் உட்பிரிவுகள். இதை தேசத்து ஜனங்களில் பெரும்பாலோர் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், குருக்கள், மடாதிகாரிகள் முதலிய சிலர் மறந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

“திரமென்று தந்தம் மதத்தையே தம் மதச்
செய்கை கொடுமுறை அறிவாரார்?
ஆறு சமயங்கள் தொறும் வேறு வேறாகி
விளையாடும் உனை யாவரறிவார்?”

என்று தாயுமானவர் சொல்லியது பாரத தேசத்து மஹாஜனங்களுக்கன்று. மஹாஜனங்கள் இவ்வுண்மையை நன்றாகத் தெரிந்து நடக்கிறார்கள்.

Dr.Anburaj said...


காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரா் சொற்பொழிவுகள் புத்தகமாக வந்துள்ளது.அதில் இனிமேல் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் போல் தாமும் செயல்பட வேண்டும்.அதுதான் சாி என்பது காலத்தின் கட்டாயம்.
ஸ்ரீ ஜெயேந்திரா் பிற சாதி மக்களோடு நெருங்கி பழகி வருகின்றாா். அவரது அணுகுமுறை சிறந்தது.

காலத்தின் பாடம் அவரை திருத்தியிருக்கின்றது. வாழ்க ஸ்ரீ ஜெயேந்திரா்.