தலித்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதித்து பூட்டு போட்ட வர்ணாசிரமம்!
செந்துரை பக்கம் உள்ள சொக்க நாதபுரம் கிராமம் வரதராஜ பெருமாள் கோவிலில் அருள், திவ்யா தம்பதிக்கு திருமணம் நவம்பர் 7ந் தேதி யன்று 11 மணிக்கு நடைபெறும் என்று பத்திரிக்கை அடித்துள்ளனர். திருமண நாளன்று கோவிலுக்கு வந்த மணமக்களும் உறவினர்களும் கோவில் பூட்டு போட்டு பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகுதான் விபரம் அவர்களுக்கு புரிந்தது. அதாவது மணமக்கள் தலித்களாம். கோவிலில் அவர்களின் திருமணம் நடந்தால் தீட்டு பட்டு சாமி கோபித்து கொள்வாராம். எனவே உயர் சாதி இந்துக்கள் கோவிலுக்கு பூட்டு போட்டுள்ளனர்.
பிறகு மணமக்கள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே தாசில்தார் தேன் மொழி சம்பவ இடத்துக்கு வந்து 100 போலீஸார் முன்னிலையில் கோவிலின் பூட்டை உடைத்து தம்பதிகளை மதியம் 1:30 மணிக்கு உள்ளே அனுமதித்துள்ளனர். பிறகு திருமணம் நடந்துள்ளது.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
11-11-2019
இந்தியன் எக்ஸ்பிரஸ்
11-11-2019
பாபர் மசூதி இடிப்புக்கு தலித்கள் வேண்டும்: கலவரம் செய்து முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாட தலித்கள் வேண்டும். ஆனால் கோவிலுக்கு மட்டும் தலித்கள் வேண்டாம். என்ன ஒரு சூழ்ச்சி.
அட மானங்கெட்ட வர்ணாசிர கொடுமையே! உலகில் எங்காவது 21 ம் நூற்றாண்டில் இப்படி ஒரு கூத்து நடக்குமா?
1 comment:
பிறகு மணமக்கள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே தாசில்தார் தேன் மொழி சம்பவ இடத்துக்கு வந்து 100 போலீஸார் முன்னிலையில் கோவிலின் பூட்டை உடைத்து தம்பதிகளை மதியம் 1:30 மணிக்கு உள்ளே அனுமதித்துள்ளனர். பிறகு திருமணம் நடந்துள்ளது.
---------------2-2-2-2-2-2-2-2-2-2--4-4-4-4---5----
படிப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இப்படித்தான் சாதிக்க வேண்டும். ஆம் முறையாக சமய கல்வியை அளித்தால் இந்த பிரச்சனை வராது. அதை கொடுக்க மறுப்பது யாா் ? பிறாமணர்கள் அல்ல.தடுத்தாலும் எதிர்த்து சாதிக்க வேண்டும்.
வீரத்துடன் விவேகத்துடன் உரிமைக்குரல் எழுப்பிய தம்பதியினரை பாராட்டுகின்றேன்.
Post a Comment