Followers

Tuesday, November 19, 2019

முஸ்லிம் என்பதால் சமஸ்கிரத பாடம் எடுக்கக் கூடாதாம்!

முஸ்லிம் என்பதால் சமஸ்கிரத பாடம் எடுக்கக் கூடாதாம்!
ஜெய்ப்பூர் நகரில் உள்ள பக்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபெரோஸ் கான். சிறு வயது முதலே சமஸ்கிரத மொழி கற்பதில் ஆர்வமாக இருந்தார். பள்ளி படிப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை சமஸ்கிரதத்தையே எடுத்தார். பிஎச்டி ஆய்வு படிப்பையும் சமஸ்கிரதத்தில் முடித்துள்ளார். சில தினங்கள் முன்பு இவருக்கு பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி நியமனம் கிடைத்தது.
ஆனால் ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, பஜ்ரங்தள் போன்ற இந்து அடிப்படைவாத அமைப்புகள் இவர் பாடம் எடுப்பதற்கு தடை விதித்துள்ளன. கிருஷண குமார் என்ற மாணவர் 'எங்களின் பழக்க வழக்கங்களை அறியாத எங்களின் கலாசாரத்தை பின்பற்றாத ஒருவரால் எங்களின் வேத நூலை உணர்வு பூர்வமாக எவ்வாறு பாடம் எடுக்க முடியும்?' என்று கேட்கிறார். அங்கு பாடம் பயிலும் பல கல்லூரி மாணவர்கள் இதே கருத்திலேயே உள்ளனர். ஒரு வாரமாக இவர் கல்லூரியில் பாடம் எதுவும் எடுக்கவில்லை.
'நான் சிறு வயதிலிருந்தே சமஸ்கிரதம் படித்து வருகிறேன். 30 சதவீதம் இஸ்லாமியர் உள்ள எனது கிராமத்தில் ஒரு மவுலவி கூட கிடையாது. எனவே அரபியை விடுத்து சமஸ்கிரதத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்தேன். இன்று கடினமாக உழைத்து வேலையில் சேர்ந்தும் எனது பெயர் என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறது என்று வேதனை படுகிறார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
19-11-2019
தமிழாக்கம்
சுவனப்பிரியன்
இவரது தந்தையும் சமஸ்கிரத பேராசியராக வேலை பார்த்தவர். அவரது காலங்களில் இந்த வெறுப்புணர்வு இல்லாமல் பணி செய்து வந்துள்ளார். மோடியும், அமீத்சாவும் தாங்கள் பதவிகளில் சுகமாக இருக்க இஸ்லாமிய வெறுப்புணர்வை சிறிது சிறிதாக விதைத்து வந்துள்ளனர். அதன் தாக்கம் இப்போது வெளிப்படுகிறது.
30 சதவீதம் இஸ்லாமியர் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மவுலவி இல்லையாம். அப்படி என்றால் பள்ளி வாசலும் இருந்திருக்காது. அங்கு வாழும் இஸ்லாமியர்களும் இது போன்ற சூழலுக்கு காரணமென்றால் மிகையாகாது. பார்பனர் அல்லாத மற்றவர் வேதத்தை படித்தால் அவர்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று சொல்லும் ஒரு மதத்தின் தேவ மொழியை தனது விருப்ப பாடமாக எடுத்தது ஃபெரோஸ்கானின் தவறு. வருங்கால இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால்தான் பயமாக உள்ளது.


1 comment:

Dr.Anburaj said...

மாணவர்கள் அவரை சமஸ்கருதத்தில் வேத பாடம் கற்பிக்கும் துறையில் இருந்து மாற்றிட வேண்டும்என்றுதான் கோருகின்றார்கள்.

இந்த கோரிக்கை நியாயமானதே.சமஸகிருத மொழி கற்பிக்கும் பிரிவிற்கு இவரை மாற்றலாம்.