'உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல்,மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை தோராவில்(தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவரின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகி விடும்.'
-குர்ஆன் 5:45
உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண் என்றால் என்ன பொருள் கொள்வீர்கள்? கொலையுண்டவனின் வாரிசு கொலை செய்தவனை பழிக்கு பழி வாங்கலாம். அல்லது மன்னித்து விடலாம் என்ற பொருள் அதில் மறைந்துள்ளது. படிக்கும் யாவருமே இதை எளிதில் புரிந்து கொள்வர். குர்ஆனில் உள்ள சில விளங்காத வசனங்களுக்கு முகமது நபி தனது ஹதீதுகளில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அடைப்புக்குரிகளை மொழி பெயர்ப்பாளர் இடுகின்றனர்
உதாரணத்துக்கு என்னிடம் ஒரு அடிமை இருந்து அவனை ராஜா என்ற ஒருவன் கொன்று விட்டதாக வைத்துக் கொள்வோம் நான் பழி தீர்ப்பதற்காக ராஜாவின் அடிமையை கொன்று போட்டால் என்னை அந்த இறைவன் மன்னிப்பானா? ராஜா குற்றம் செய்ததற்க்காக அவன் அடிமை எப்படி தண்டனையை அனுபவிக்க முடியும்? இது அநியாயம் இல்லையா? ஒரு இறைவன் இப்படி சொல்லியிருக்க முடியுமா? அப்படிப்பட்டவன் ஒரு இறைவனாக இருக்க முடியுமா?
இந்த சிறிய விஷயத்தை விளங்கிக் கொள்ள இவ்வளவு விளக்கம் தேவையில்லை
'வறுமை காரணமாக உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்'
-குர்ஆன் 6:151
வறுகைக்காக குழந்தைகளை கொல்வதை தடை செய்கிறது குர்ஆன். நாமோ கள்ளிப் பாலையும், அரிசிகளையும் சேலம் ராமநாதபுரங்களில் கொடுத்து சமாதியாக்குகிறோம்.
'இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்: விபசாரம் செய்ய மாட்டார்கள்: இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.'
-குர்ஆன் 25:68.
தக்க காரணமின்றி ஒரு உயிரை கொல்வதை இந்த அளவு தடை செய்யும் குர்ஆன் எஜமானன் செய்த குற்றத்திற்காக அடிமையை கொலை செய்யச் சொல்லுமா?
2 comments:
இயற்பியல் பாடத்தில் மிக கடினமான ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் classical Mechanics Atomic structures .....etc போன்ற தியரிகளை மாணவர்களுக்கு மிக இலகுவாக பாடம் நடத்தி ஓய்வு பெற்ற எ ன்னால் குரான் அடிக்கும் கூத்துக்களை புரிந்து கொள்ள இயலவில்லை.
--------------------------------------------------------------------------
'நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவுனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன்: அடிமைக்காக கொலை செய்த அடிமை: பெண்ணுக்காக கொலை செய்த பெண்: என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப்
பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
Question: இதற்கு விளக்கம் என்ன ?
கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்லவிதமாக நடந்து அழகிய முறையில் நஷ்ட ஈடு அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளமாகும். இதன்பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.'
-குர்ஆன் 2:178
-----------------------------------------
ஆண், பெண், அடிமை,சுதந்திரமானவன் என்று யார் கொல்லப்பட்டாலும் அநியாயமாக கொல்லப்பட்டவனுக்காக கொன்றவனை அவனது இரத்த பந்தங்கள் கொல்வதற்கு குர்ஆன் அனுமதி அளிக்கிறது.
Question: இதற்கு விளக்கம் என்ன ?
விஜய“கேள்விக்கு அடிக்கடி பதில் கொடுக்கும் தாங்கள் இதற்கு பதில் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.
Post a Comment