Followers

Monday, November 25, 2019

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!

நிறுத்தல் அளவைகளில் மறைந்திருக்கும் சூட்சுமம்!
இன்று நாம் உலகம் முழுக்க நிறுத்தல் அளவைகளை அளவிடுகிறோம். முன்பெல்லாம் பொருள்களை அளவிடுவதற்கு ராத்தல்(பவுண்டு) எனும் அளவை பரவலாக பயன்படுத்தினோம். 7680 கோதுமை மணிகளின் எடை ஒரு பவுண்டு என்று முன்பு கணக்கிடப்பட்டது. தற்போது நாம் கிலோ கிராம் என்ற அளவையை பரவலாக பயன்படுத்துகிறோம். இதை வைத்து ஒரு சோதனையை தற்போது செய்து பார்ப்போம்.
ஒரே அளவுடைய இரண்டு கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜாடியில் உப்பை நிரப்பிக் கொள்வோம். மற்றொரு ஜாடியில் சிறு சிறு இரும்பு துண்டுகளை போட்டு நிரப்புவோம். தற்போது சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஒரு தராசை எடுத்து இரண்டு ஜாடிகளையும் ஒரு சேர எடை போடுவோம். என்ன நடக்கும்? இரும்பு உள்ள ஜாடி கீழேயும் உப்பு உள்ள ஜாடி மேலேயும் காட்டும். ஏனெனில் உப்பை விட இரும்பின் பொருண்மை அல்லது அடர்த்தி அதிகமானதால் இரும்பு வைத்த ஜாடி கீழே இறங்கியுள்ளது என்று சொல்வோம். ஒரு வகையில் இந்த பதில் சரியானாலும் மற்றொரு வகையில் தவறாகும். ஏனெனில் பொருண்மையும் எடையும் ஒன்று எனும் தவறான பொருள் இந்த பதிலில் அடங்கியுள்ளது. ஆனால் எடையும் பொருண்மையும் வேறு வேறு ஆகும்.
இதனை நாம் நன்கு விளங்கிக் கொள்ள மற்றொரு சோதனையை செய்து பார்ப்போம். நாம் முன்பு எடை போட்ட உப்பையும், இரும்பையும் அதே தராசோடு விண்வெளிக்கு எடுத்துச் செல்வதாகக் கொள்வோம்.. பூமியில் நாம் பார்த்தது போன்று இரண்டு ஜாடிகளையும் தராசில் வைத்து முன்பு பார்த்தது போல் எடை பார்க்க முயற்சிப்போம். தற்போது தராசில் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம். உப்பு உள்ள பகுதியின் தட்டில் நாம் கை வைத்து கீழே அழுத்துகிறோம். இப்போது கையை எடுத்தாலும் உப்பு உள்ள பகுதி மேலே வராது. என்ன ஆனது நமது தராசுக்கு? உப்பின் பொருண்மை இங்கு இரும்பை விட கூடி விட்டதா? அதுவும் இல்லை.
இங்கு எடை பார்க்கும் கருவியில் எந்த பிரச்னையும் இல்லை. பொருண்மையும் எடையும் ஒன்று என்று முன்பு நாம் நினைத்தது தவறு என்று இந்த சோதனை நிரூபிக்கிறது. எடை என்பது இடத்திற்கு இடம் மாறுவதைப் போன்று பொருண்மை மாறுவது இல்லை. பொருண்மைதான் ஒரு பொருளின் எடைக்கு முக்கிய காரணம் என்று சொன்னால் பூமியில் காட்டிய அதே எடையை விண்வெளியிலும் காட்ட வேண்டும். ஆனால் காட்டவில்லை. இதிலிருந்து ஒரு பொருளின் எடைக்கு அதன் பொருண்மை காரணமல்ல என்பதை விளங்கிக் கொண்டோம்.
அப்படி என்றால் எடை என்பதற்கான வரை விலக்கணம் என்ன என்று இனி பார்ப்போம். அறிவியல் எடைக்கு கூறும் இலக்கணமாவது 'ஈர்ப்பாற்றலின் இழு விசை' (weight is the pull of Gravitation) என்கிறது. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையின் அடிப்படையிலேயே எடை தீர்மானிக்கப்படுவதாக அறிவியல் கூறுகிறது.
மேற்கண்ட விளக்கத்திலிருந்து பூமியில் ஒரு பொருளை நாம் எடை போடும் போது அப்பொருளின் மீது செயல்படும் பூமியின் ஈர்ப்பு விசையையே நாம் எடை போடுகிறோம் என்பது தெளிவாகும். இந்த புவியீர்ப்பு விசை இல்லை என்றால் நாம் சாதாரணமாக ஒரு தராசில் ஒரு பொருளை எடை போட முடியாது என்று விளங்குகிறோம்.
இது பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இனி பார்ப்போம்.
'அவன் வானத்தை உயர்த்தினான்: நீங்கள் நீதி தவறி விடக் கூடாது என்பதற்காக தராசை நிலை நாட்டினான். நிச்சயமாக எடையை நிலை நாட்டுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.'
-குர்ஆன் 55:7-9
இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக ஒரு செய்தியை சொல்லுகிறது. அதாவது மனித குலம் தங்களின் எடைகளை சரியாக நிறுப்பதற்காக இறைவனால் பூமியில் இந்த ஈர்ப்பு விசை ஏற்படுத்தப் பட்டுள்ளது. பூமியின் சுழற்சியில் இருந்து இந்த பூமி பாதுகாப்பாக இருப்பது வரை இந்த ஈர்ப்பு விசையானது மனித குலத்துக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.புவி ஈர்ப்பு விசையின் பயன்களில் இதுவும் ஒன்று. நம்மை படைத்த இறைவனின் பெருங் கருணைகளில் நமக்காக இந்த ஈர்ப்பு சக்தியை இந்த பூமிக்கு வழங்கியதும் ஒன்று. இறைவனை மறுக்கும் நாத்திகர்களுக்கு இந்த வசனமும் பூமியில் தராசு நிலை நிறுத்தப் பட்டிருப்பதும் சிறந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.


1 comment:

Dr.Anburaj said...

குரானில் விஞ்ஞானம் ஏதும்யில்லை.குரான் அறிவியல் புத்தகம் அல்ல.

மொட்டை தலையுடன் எதையும் முடிச்சி போட முடியாது.குரான் வசனத்திற்கும் அதற்கு முன் பின் பதிவிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் சம்பந்தம் இல்லை.நான் ஒரு இயற்பியல் பேராசிரியா்.