Followers

Monday, November 18, 2019

குர்ஆனை ரஸ்ய மொழியில் முதன் முதலாக மொழிபெயர்த்தவர்!

குர்ஆனை ரஸ்ய மொழியில் முதன் முதலாக மொழிபெயர்த்தவர்!
வெலேரியா புரோகோவா குர்ஆனை ஆழ்ந்து படித்ததால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்கிறார். இவர் முன்னால் ஆரதடக்ஸ் கிறிஸ்டியன். பிறகு சிரிய நாட்டவரை மணக்கிறார். 1985 ஆம் ஆண்டு டமாஸ்கஸூக்கு குடி பெயர்கிறார். காலித் அல் ருஸ்து என்ற மகனுக்கு தாயாகிறார்.
அதன் பிறகு ரஸ்ய மொழியில் 1995 ஆம் ஆண்டு முதன் முதலாக குர்ஆனை மொழி பெயர்க்கிறார்.
'நான் குர்ஆனை வாசிக்க ஆரம்பித்த போது அது என்னை ஆட் கொண்டு விட்டது. நான் இஸ்லாத்தை ஏற்பதற்கும் அதனை மொழி பெயர்ப்பதற்கும் உந்துதலாய் இருந்தது குர்ஆனின் ஆழ்ந்த கருத்துக்களே!' என்கிறார்.
தற்போது இவர் நம்மோடு இல்லை. இறைவன் இவரின் பணியை ஏற்றுக் கொண்டு சிறந்த இடத்தை மறு உலகில் தந்தருள்வானாக!



1 comment:

Dr.Anburaj said...

பகவத்கீதையை அரேபிய மொழியியல் பெயா்த்தனவா் ஒரு பாலஸ்தீனா்.

இவர் பாலஸ்தின விடுதலை இயக்கத்திின் ராணுவபிரிவில் பணியாற்றியவா்.

பகவத்கீதையை படித்து மனம் மாறி ஜெர்மனியில் உள்ள அரே ராமா ஹரே கிருஷ்ணா

இயக்கத்தில் சோ்ந்து பணியாற்றி இந்துவாகவே வாழ்ந்தாா்.