Followers

Sunday, November 24, 2019

அழகிய பதிலளித்த நார்வே மக்கள்!

அழகிய பதிலளித்த நார்வே மக்கள்!
நார்வேயில் சில நாட்களுக்கு முன்பு குர்ஆனின் பிரதியை பாசிசவாதிகள் பொது வெளியில் எரித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் முகமாக அதே பொது வெளியில் குர்ஆனின் வசனங்களை சப்தமிட்டு ஓதி அவர்களுக்கு சிறந்த பதிலை கொடுத்துள்ளனர் நார்வே மக்கள்.


1 comment:

Dr.Anburaj said...


Post No. 7246

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t
use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000

by ச.நாகராஜன்

அவன் ஒரு பிராமணன்.வேதம் படித்தவன்.உபநிஷதம் படித்தவன்.

இதிஹாஸ புராணம் படித்தவன்.கை நிறையக் காசுள்ளவன்.

தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கை நிறையப்புரண்டன.

ஆனால் அவன் வேதத்தை மதித்தானில்லை.ஓம்கார நாதத்தை ஓதினானில்லை.

சங்கீதத்தை ரசித்தானில்லை.மனைவி மீது எரிந்து விழுந்தான்.

மகன் மகளைத் திட்டினான்.அண்டை அயலாரை விரட்டினான்.

எதிர்ப்பட்டவரிடம் சண்டை போட்டான்.அனைவரும் அயர்ந்து போயினர்.

அவனிடம் வெறுப்பு. காழ்ப்பு.எரிச்சல்.இந்த சூழ்நிலையில் அவன் கைப்பணம் கரைந்தது.

வெள்ளியும் தங்கமும் போன இடம் தெரியவில்லை.சாப்பாட்டுக்கு வழியில்லை.

சண்டையிட ஆளில்லை.மனைவி மக்கள் ஒதுங்கினர்.

பசி, தாகம்!அந்த அந்தணன் நடந்தான்.

மலைப் பாதை ஆரம்பம்.

அதுவரை நடந்தான்.

களைப்போ களைப்பு.

அங்கிருந்த வழிகாட்டிக் கல்லைப் பார்த்தான்.

மேலே போக
வழி என்பது போல

அம்புக்குறி ஒன்று அதில் பொறித்திருந்தது.

பொறி தட்டியது அவனுக்கு.

அந்தக் கல் சுமைதாங்கிக் கல் போலத் தோன்ற

அதன் மீது அவன் அமர்ந்தான்.

இளைப்பாறினான்.

களைப்பாறினான்.

மெல்ல எழுந்தான்.

மேலே போகும் பாதை.

வனாந்தரம் தான்.

பறவைகள் கீச்சிட்டன.

அதன் ஒலி அமர கானமாக இருந்தது.

அவன் உற்றுக் கேட்டான்.

என்ன அருமையான கீத ஒலி.

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அடடா,என்ன அழகு!

என்ன ஒரு பசுமை!

அருகில் இருந்த வனத்தோட்டம்

அருகில் சென்றான்.

மாம்பழங்கள்.

பழுத்த வாழைப்பழங்கள்.

வா வா என்று அழைத்தன.

உண்டான், மகிழ்ந்தான்.

அட என்ன ஒரு ருசி!

அருகில் ஒரு தடாகம்.

மானச சரோவர் போலத் தோற்றம்.

பளிங்கு போன்ற நீர்.

கையால் அள்ளிக் குடித்தான்.

அமிர்தமும் தோற்றது.

மேலே நடந்தான்.

யோசித்தான்.

என்ன காரணம், இதற்கெல்லாம்?

கர்மா? ஊஹூம்!

தர்மம் ? ஊஹூம்!

அவனே தான் இவன்!

இவனே தான் அவன்!

என்ன மாற்றம்?

ஆஹா! ஞானம் உதித்தது.

உபநிடதம் கை கொடுத்தது!

மனம்! மனமாற்றம்!

ஏமாற்றம் போனது.

பார்வையில் மாற்றம்!

பழுதெலாம் போச்சு!

ஆனந்தம் உதித்தாச்சு!

பல நாட்கள் சுற்றினான்.

அங்கு புத்துணர்வு கொண்டான்.

புதிய உறவு கொண்டான்.

மலை, அணில், குயில், தோட்டம்,

துரவு, தடாகம், தாமரை .. ஆனந்தம்.

ஒரு நாள் ஊர் நோக்கி நடந்தான்.

அனைவரும் பயந்தனர்.

வந்துட்டான்...டா!!

ஆனால் அவன் சிரித்தான்.

அவனை நோக்கி எள்ளி நகையாடினர்.

அவன் அவர்களைப் பார்த்து நகைத்தான்.

அவனை ஏசினர். அவன் சிரித்தான். ரசித்தான்.

மனைவி உறுமினாள். மக்கள் பொருமினர்.

அவன் இலேசாகச் சிரித்தான்.

மனம்... மனம்.. இலேசாக இருந்தது.

மன ஏவ மனுஷ்யானாம்!

காரணம் பந்த மோக்ஷயோ:

மனமே மனிதன்! அவனது உறவுக்கும்

துறவுக்கும் அதுவே காரணம்!

உண்டென்றால் உண்டு!

இல்லையென்றால் இல்லை!

உறவென்றால் உறவு!

துறவென்றால் துறவு!

ஆனந்தம் பரமானந்தம்.

பிரம்மானந்தம்!

அனைவரும் அவனைப் பார்த்தனர்.

அதிசயம் கொண்டனர்.

அந்த அந்தணனா இவன்?

இவனா அவன்!

எப்படி இப்படி ஒரு மாற்றம்?

உங்களிடம் நல்ல ஒரு தோற்றம்!

சொல்லுங்கள்!

அவன் சிரித்தான்; மெல்லச் சொன்னான்.

மனமே எல்லாம்! மனமே மார்க்கம்!

மனமே சொர்க்கம்; மனமே நரகம்!