Followers

Saturday, November 30, 2019

ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு...

ஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரசு....
அப்துல் கஃப்பார் வயது 42. சீனாவின் உய்குர் மாகாணத்தை சேர்ந்தவர். நான்கு குழந்தைகளுக்கு தந்தை. 14.4 மில்லியன் டாலர்கள் இவரது சொத்து மதிப்பு. பல பள்ளி வாசல்களை கட்டியுள்ளார். பல தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று உடையவர். கம்யுனிஷ அரசுக்கு இவரது முன்னேற்றம் பெரும் பிரச்னையாக இருந்தது. எனவே இவரை பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.
சென்ற வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் அப்துல் கஃப்பார். அரசு அனுமதித்த குழுவில் செல்லாமல் இவர் தனியாக தனது ஹஜ் பயணத்தை முடித்துள்ளார். இதனை காரணமாக காட்டி கம்யூனிஷ அரசு இவரை கைது செய்துள்ளது. இவர் மட்டுமல்லாது இவரது மனைவி, இவரது பிள்ளைகள் மற்றும் இவரது நண்பர்கள் மொத்தம் 50 பேரையும் கைது செய்துள்ளது சீன அரசு. தற்போது இவருக்கு மரண தண்டனை என்று நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவரது மனைவி விசாரணைக் காலத்தில் சிறைச் சாலையிலேயே மரணத்தை தழுவியுள்ளார்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது மரண தண்டனைக்கு உரிய குற்றமா? இவரது சொத்துக்கள் அனைத்தையும் கம்யூனிஷ அரசு பிடுங்கிக் கொண்டது. இது ஒரு பகல் கொள்ளை. இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.
தங்கள் உயிரையும் இழக்க முஸ்லிம்கள் துணிவார்களேயொழிய சீனா, ரஷ்யாவிலேயே துடைத்தெறியப்பட்ட கம்யூனிஷ சித்தாங்களை தங்கள் வாழ்வியலாக எடுக்க மாட்டார்கள் என்பதை மட்டும் சீன அரசுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
தகவல் உதவி
rfa.org/english/news/
ஆக்கம்: சுவனப்பிரியன்
ஒரு வருடம் முன்பு எழுதிய பதிவு


1 comment:

Dr.Anburaj said...

இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.
------------

காஷ்மிரில் இருந்து 4.5 இந்துக்களள் பலவந்தமாக வெளியெற்றப்பட்ட போதும் இதுதான் நிலைமை.இந்திய அரேபிய முஸ்லீம்கள் யாரும் இந்துக்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு குரல் கொடுககவில்லை.சுவனப்பிரியன் இதுவரை இந்த பிரச்சனை குறித்து பதிவுகள் செய்யவில்லை.

அரேபிய மத குடியரசாக தன்னை அறவித்துக் கொண்ட பங்களாதேஷ் நாட்டில் இந்துக்கள் இனபடுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள். அதுகுறித்து இதைப் பற்றி உலக மீடியாக்களோ நமது இந்திய மீடியாக்களோ வாயைத் திறக்கவில்லை.சுவனப்பரியன் வாய்திறக்கவில்லை.
விதைத்தது முளைக்கும்.