Followers

Monday, November 11, 2019

கல்விப் பேரரசு மவ்லானா அபுல் கலாம் ஆசாத் !

கல்விப் பேரரசு மவ்லானா அபுல் கலாம் ஆசாத் !
* இந்தியத் தந்தைக்கும் அரபுத் தாய்க்கும் பிறந்தவர்
* புனித நகரமான மக்காவில் மார்க்க கல்வி பயின்றவர்
* திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர்
* காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிக இளம் வயதில் (35) தலைவரானவர்
* இந்திய துணைக்கண்ட வரலாற்றில் மிக முக்கிய காலமான 1940-1949 வரை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர்
* சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் 1947-1958
* இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியான IIT– யை 1951 ல் துவங்கியவர்
* UGC என்ற பல்கலைக் கழக மானியக் குழுவை 1953 ல் வடிவமைத்தவர்
* IIS என்ற இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியவர்
* சாகித்ய அகடாமியை உருவாக்க வழியமைத்தவர்
* இந்தியாவின் மிக உயர்வான பாரத ரத்னா விருது அவருக்கு 1992 ல் நீண்ட கால தாமத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
ஆசாத் கல்வி கனவு நனவானது :
சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்கு பிறகு கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் எழுத்தறிவு இல்லாத ஒரு குடிமகன் கூட இல்லை என்ற நிலையை எட்டவும், நாம் இந்தியர் என்று தலைநிமிர்ந்து நிற்கவும், நம் நாடு 2020ல் வல்லரசாக உயரவும் நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.கல்வி உரிமை சட்டத்தில் சில முக்கிய ஷரத்துகள் வரவேற்கத்தக்கதாக உள்ளன. கல்வி பயிலும் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது. மாணவர்களுடன் அன்புடன் பழக வேண்டும். பெண் குழந்தைகள் என்றும், பிற்பட்ட வகுப்பினர் என்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்றும் பாகுபாடு காட்டக் கூடாது. பள்ளியை சரியான நேரத்திற்கு திறக்க வேண்டும். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும். எந்தக்குழந்தையையும் பள்ளியில் சேர்க்காமல் நிராகரிக்க கூடாது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவேண்டும். இப்படி பல ஷரத்துகள் உள்ளன.இதனால் மட்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உரிமை கிடைத்து விடும் என கருதக் கூடாது. நம் வேலை, உரிமை, கனவுகள் இன்றும் முடிவடையவில்லை. இச்சட்டம் இன்னும் அதிகம் அர்த்தமுள்ளதாக ஆக்கப்பட வேண்டும்.
(முனைவர் எம்.டி.பூர்ணாச்சாரி,வக்கீல்,மதுரை மற்றும் இனிய இளவல் என்பவர்களின் கட்டுரைகளிலிருந்து ...)


1 comment:

Dr.Anburaj said...


மகாத்மா காந்தியின் வற்புருத்தல் காரணமாக

பிரதமா் பதவிக்கு பட்டேலை ஆதரிக்காமல்
நேருவை ஆதரித்து
பெறும் தவறைச் செய்து விட்டேன்.

இந்த தவறுக்கு என்னை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன் என்று தனது சுயசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
--- கவனிக்கவும்.