Followers

Saturday, November 16, 2019

#போராடி_செத்துப்போ....

தற்கொலை தீர்வல்ல நிரந்தர நரகம் என சொல்லுங்கள் உங்கள் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லி வளருங்கள்
கண்ணெதிரே கணவர் கொல்லப்பட்டார் மகனும் வதைக்கப்பட்டான் எனினும் சிறிதும் அஞ்சாமல் தனது ஈமானை உறுதியை இழக்காத வீரமங்கை சுமைய்யா (ரலி...) அவர்களின் வீர வரலாற்றைச் சொல்லி வளருங்கள்.
நிராயுதபாணியாக தொழுது கொண்டிருந்த தனது தந்தையின் கழுத்திலே ஒட்டகக்குடலை வைத்து தந்தையை எழமுடியாமல் செய்து எதிரிகள் கை கொட்டி சிரித்தபோது தைரியமாக அந்தக் குடலை தூக்கி எறிந்துவிட்டு எதிரிகளை நோக்கி வசைபாடிய வீரமகள் பாத்திமா (ரலி...) அவர்களைப்பற்றி சொல்லுங்கள்.
அநீதி என பட்டதால் படைதிரட்டி யுத்தம் கண்ட வீரத்தாய் ஒட்டகப் போரின் தளபதி அன்னை ஆயிஷா (ரலி.....) அவர்களின் வீரத்தைச் சொல்லி வளருங்கள்.
கொடுங்கோலனான அரசன் நானே இறைவன் என்று சொன்ன பிர்அவ்னின் மனைவியாக இருந்து கொண்டே ஓரிறையை மட்டுமே வணங்கிய வீரத்தாய் ஆஸியா அவர்களின் வரலாற்றைச் சொல்லுங்கள்.
பல ஆண் மண்ணர்களுக்கும் எதிரிகளுக்கும் சிம்ம சொப்பணமாக விளங்கிய டெல்லியை ஆண்ட பெண்புலி ரஸியாபேகத்தின் வீர வரலாற்றைச் சொல்லி வளருங்கள்.
வரதட்சணை கோழைகளாக பெண்களை பார்கும் இஸ்லாமிய சமுதாயமே
பெண்பிள்ளைகள் கோழைகளாகிப் போவதற்கு உனது வரதட்சணை எனும் வன் கொடுமையும் ஒரு காரணம் என்பதை உணர்வாயா!?
தற்கொலையை இஸ்லாம் ஒருபோதும் அங்கிகரிக்க வில்லை காரணங்கள் ஆயிரம் சொல்லப்பட்டாலும் எந்த நிலையிலும் தற்கொலை என்பது முஸ்லிமான ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகல்ல.
துணிந்து நில் போராடு செத்தே போவதென்றாலும் உன் உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும்வரை உனது உரிமைக்காவும் உரிமையைக் காக்கவும் போராடியே செத்துப்போ.....
உனது வீர வரலாறு உனக்குப்பின் வருவோருக்குப் பாடமாக இருக்கட்டும்.


6 comments:

vara vijay said...

Razia bagum cant be taken as an example for mjmin ladies because female are incapable for ruling, adminstration and running a country according to rasool. Do you agree?

suvanappiriyan said...

Vijay....

//Razia bagum cant be taken as an example for mjmin ladies because female are incapable for ruling, adminstration and running a country according to rasool. Do you agree?//

ஒருமுறை அயல் மகரந்த சேர்க்கை அன்றைய அரபிகள் செய்து வந்தனர். நபிகள் நாயகம் 'ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள் 'இதில் மகசூல் அதிகம் கிடைக்கும்' என்று பதிலுரைத்தனர். 'இது அவசியமில்லை. இயற்கையாக அதன் போக்கில் விட்டு விடுங்கள்' என்கின்றனர் நபிகள் நாயகம். நபிகள் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அந்த வருடம் அவர்கள் அயல் மகரந்த சேர்க்கையை விட்டு விட்டனர். இது பற்றி நபிகள் நாயகம் 'உங்கள் பயிர்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டனர். 'நீங்கள் சொன்னதால் அயல் மகரந்த சேர்க்கையை விட்டு விட்டோம். விளைச்சல் குறைந்து விட்டது' என்கின்றனர் அரபு விவசாயிகள்.

அப்போது நபிகள் நாயகம் 'உலக விஷயங்களில் என்னை விட அதிகம் தெரிந்து வைத்துள்ளீர்கள். நான் மார்க்கம் என்று சொல்வதில் மட்டும் எனது கட்டளைக்கு கட்டுப்படுங்கள். உலக விஷயங்களில் நீங்கள் விரும்பியவாறு நடந்து கொள்ளுங்கள்' என்கின்றனர். எனவே ஆட்சியதிகாரம் பற்றி நபிகள் நாயகம் சொல்லியிருந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாமாக முடிவெடுக்க அதே நபிகள் அதிகாரம் கொடுத்துள்ளனர்.

Dr.Anburaj said...

முஹம்மது பெண்கள் ஆட்சியாளராக இருக்கக் கூடாது என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளாா்.இதைநா்ன் படித்ததாக நினைவில் உள்ளது.

சுவனப்பிரியன் முக்காடு போட்டு வைக்கும் பெண்கள் எப்படி வீரமாக இருப்பார்கள் ?

சதா இநதுக்கள் மோசம் முஸ்லீம்களின் விரோதிகள் முஸ்லீம்களை வெறுப்பவர்கள் ......என்று இந்துக்கள் குறித்து பொய்யான தகவல்களை....மட்டும் பரப்பிக்கொண்டிருக்கும் சமய சொற்பொழிவாளர்கள் இனணயம் நடத்துபவர்கள் அரபி வாத்தியார்கள் முஸ்லீம் லீக் போன்ற அரசியில் கட்சித் தலைவார்கள் அனைவரும் பரப்பி வருகின்றார்கள்.முஸ்லீம் மக்களுக்கு ந்ல்ல புத்தி எப்படி வரும ?

இன்று கூட தொலைக்காட்சியில் பாத்திமாவுக்காக ஆதரவு கூட்டம் ஊர்வலம் நடைபெற்றதை பார்த்தேன்.

முஸ்லீம்களுக்கு கல்வி கூடாதா ?
என்ற போஸ்டா் அதில் இடம் பெற்றிருந்தது.

வேடிக்கையாக இருந்தது. சிறுபான்மை கல்வித் தொகை என்று அள்ளிக் கொடுத்து வருகின்றது. ஆராய்ச்சி படிப்ப வரை கல்வி உத்வித்தொகையை சிறுபான்மையினர்களுக்கு அள்ளிக் கொடுத்து வருகின்றது அரசு.பாரதிய ஜனதா அரசும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கோடி கோடியாய் கொட்டி வருகின்றது.இதை பற்றி ஏதும் சொல்லாத நாய் தவறு பன்றிக் கூட்டங்கள் வாயில் வந்ததை எல்லாம் பதிவு செய்து வருகின்றது.

பேராசிரியா் ஹாஜா கனி என்று ஒரு கிறுக்கன்.பாத்திமா கொலைக்கு பார்ப்பன வருணாச்சரிமம்தான் காரணம் என்று தொலைக்காட்சி விவாதத்தில்் பேசுகின்றான்.
பேராசிரியா் பத்மநாபன் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது.ஏன் இவ்வளவு அவசரம். SMR பல்கலைக்கழகத்தில் 4 பேர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.பார்பன துசேம் என்று யாரும் சொல்ல வில்லை.விசாரணை நடைபெற்றதா ? முடிவு என்ன ? யாருக்காவது தெரியுமா ? செத்தது முஸ்லீம் அல்ல. எனவே உசு்ப்பி விட வாய்ப்பு இல்லை.இந்துக்களை சும்மா உசுப்பி விட முடியாது.கொந்தளிக்க மாட்டாா்கள்.

பாத்திமா லத்தீப் தற்கொலை வைத்து
பாரதிய ஜனதா கட்சி எதிர்பிரசாரம் நடைபெறுகின்றது.

ஊர்வலம் போகின்றவன் அனைவரும் இப்படிப்பட்டவர்கள்தாம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.அது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

ஒரு முஸ்லீம் பெண் தற்கொலை செய்து கொண்டாள்.இது மட்டும் பிரமாண்டப்படுத்தப்படுவது ஏன் ? பாத்திமா அப்பன் எங்கோ போனாலும் 10 கேமிரா பின்னால் போகின்றது ஏன் ? முஸ்லீம்களை உசுப்பி விட வேண்டும் என்பதே இந்த வானர கூட்டங்களின்-இந்து விரோதிகளின் - நோக்கம்.

Dr.Anburaj said...

அநீதி என பட்டதால் படைதிரட்டி யுத்தம் கண்ட வீரத்தாய் ஒட்டகப் போரின் தளபதி அன்னை ஆயிஷா (ரலி.....) அவர்களின் வீரத்தைச் சொல்லி வளருங்கள்.

ஆயிஷா நடத்திய போா் பதவி அதிகார வேட்டை.அது முஹம்மது நபியின் மருமகனுக்கு எதிரானது.முஹம்மதுவின் மகளின் கணவனுக்கானது.அது அஹலதுப்களுக்கு எதிரானது. அது முன் உதாரணமாகாது.

Dr.Anburaj said...

ஒரு இந்திய வீராங்கணையைப் பற்றி படிப்போமே. வீரம் அரேபியாவில் மட்டும்தான் உள்ளதா ? இந்தியாவில் இல்லையா ? இருக்கின்றது.

வருடம் 1555. ஆயிரத்தி ஐநூறுகளில் பல நாடுகளைப் பிடித்து தனது காலனி ஆக்குவதில்
போர்த்துகீசியர் உச்ச கட்டத்தை எய்தி இருந்த காலம் அது.
காளிகட்டில் ஜமோரின்களை அழித்து, பீஜப்பூர் சுல்தானைத் தோற்கடித்து, குஜராத்
சுல்தானிடமிருந்து டாமனைக் கைப்பற்றி, மைலாபூரில் தனது காலனியை ஸ்தாபித்து, பாம்பேயைதமது வசமாக்கி, கோவாவை தமது தலைமையகமாக்கிய போர்த்துகீசியரின் காலம் அது. எதிர்ப்பார்யாருமின்றி, கபாலீஸ்வரர் கோவிலையே இடித்து அங்கு ஒரு சர்ச்சை அவர்கள் நிர்மாணிக்க இருந்தசமயம்.
அடுத்த குறி மங்களூர். அது லாபம் தரும் ஒரு துறைமுகம் ஆயிற்றே!

ஆனால் அவர்களின் துரதிர்ஷ்டம், மங்களூரிலிருந்து 14 கிலோமீட்டர் தெற்கே உள்ளல்
என்ற ஒரு சிறு பகுதியை முப்பதே வயதான வீரப் பெண்மணி அப்பக்கா சௌதா ஆண்டது தான்!அந்த ராணியை அவர்கள் முதலில் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சில படகுகளில்தங்கள் போர்வீரர்களை அனுப்பினர், அதைக் கைப்பற்ற. ஆனால் படகுகளும் வரவில்லை, போர்வீரர்களும்திரும்பி வரவில்லை!

ஒரே அதிர்ச்சி!கோபத்தில் உறைந்த அவர்கள் இந்த முறை பல கப்பல்களை அனுப்பினர். படைக்குத் தலைவன்அட்மிரல் டாம் ஆல்வாரோ டா சில்வெய்ரா.

அட்மிரல் சீக்கிரமே திரும்பி வந்தான் அடிபட்டு, உதைபட்டு, வெறும் கையுடன்!

உடனேயே, இன்னொரு போர்த்துகீசிய கடற்படை அனுப்பப்பட்டது. இந்த முறை சிலரே காயம்பட்டனர்.ஒருவழியாக படை சமாளித்துத் திரும்பி வந்து விட்டது.
உடனே போர்த்துக்கீசியர் மங்களூர் துறைமுகத்தையும் அதைச் சார்ந்த கோட்டையையும்
கைப்பற்ற முனைந்தனர். மங்களூரில் இருந்தால்அருகில் உள்ள சௌதாவை ஒரு கை பார்க்கலாமே என்று நினைத்தனர்.
மங்களூர் கைப்பற்றப்பட்டது. ஒரு பெரும் படையுடன் அனுபவம் வாய்ந்த போர்த்துக்கீசிய
ஜெனரல் உள்ளலுக்கு அனுப்பப்பட்டான்.
அவனுக்கான உத்தரவு ஒரே வரி தான்! உள்ளலைப் பிடி சௌதாவைப் பிடி!
திட்டம் தீர்க்கமானது தான்!
மிகப் பெரும் படையை - ஆயிரக்கணக்கான வீரர்கள் நவீன ஆயுதங்களைக் கொண்டவர்கள்
உள்ள படையை - முப்பதே வயதான ஒரு பெண்மணி தன்னுடன் இருக்கும் சில ஆட்களுடன் எதிர்கொள்ள முடியுமா, என்ன?
போர்த்துக்கீசியர் உள்ளலை அடைந்தனர். பார்த்தால் உள்ளல் வெறிச்சோடிக் கிடந்தது.
அப்பக்காவை எங்கேயும் காணோம். சுற்றித் திரிந்து பார்த்தவர்கள் உல்லாசமாக இருந்து தங்களது அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தனர். வெற்றி என்று முழக்கமிடும் தருணத்தில் சௌதா தேர்ந்தெடுத்த தனது இருநூறே போர்வீரர்களுடன் அந்தப் பெரும்படையைத் தாக்கினார்.ஒரே குழப்பம், கூக்குரல். ஏராளமான போர்த்துக்கீசியர் சண்டை போடாமலேயே உயிரை இழந்தனர்.
ஜெனரல் ஜோஓ பெய்க்ஸோதோ கொல்லப்பட்டான். 70 போர்த்துக்கீசிய வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.மற்றவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

அப்பக்கா சௌதா அதே இரவு மங்களூரை அடைந்து மங்களூர் கோட்டையை முற்றுகை இட்டார். கோட்டைக் காவலை உடைத்தார், உள்ளே புகுந்தார்.
போர்த்துகீசிய தலைவனான அட்மிரல் மஸ்கரன்ஹாஸைக்
கொலை செய்தார். அங்கிருந்த போர்த்துக்கீசியரை விரட்டி அடித்தார்.
இத்தோடு நிற்காமல், அவர் மங்களூருக்கு வடக்கே நூறு
கிலோமீட்டர் தள்ளி இருந்த குந்தபுரா கோட்டையையும் கைப்பற்ற முனைந்தார்.
வேறு வழி இன்றி போர்த்துக்கீசியர், சௌதாவை விட்டு
விலகி இருந்த அவரது கணவருக்கு ஏராளமான பணம் கொடுத்து துரோகம் செய்யத் தூண்டினர்.சௌதா கைது செய்யப்பட்டார். சிறையில் வைக்கப்பட்டார்.
அங்கும் அவர் எதிர்க்க ஆரம்பித்தார். சிறையிலிருந்து தப்பி வெளியேறும் சமயம் அவர் கொல்லப்பட்டார்.

முதல் சுதந்திரப்போர் நடந்த ஆண்டான 1857க்குச் சரியாக
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அடங்கிய ஒரு சேனையுடன்
ஜைன மதத்தைச் சேர்ந்த சௌதா போர்த்துக்கீசியரை இப்படி எதிர்த்தார்.

அவரை மறந்து விடலாமா? அவரைப் பற்றி எங்கேனும் நாம்
சொன்னோமா? அவர் பெயரை எங்கேனும் சூட்டினோமா?

ஒரு தபால்தலையை வெளியிட்டோம், அவ்வளவு தான்! ஒரு படகுக்கு அவர் பெயரைச் சூட்டினோம், அத்துடன்

அடடா, என்ன ஒரு நன்றி உணர்ச்சி, இந்தியர்களாகிய நமக்கு!!!

அமெரிக்காவோ, அல்லது ஐரோப்பாவாகவோ இருந்தால் இப்படி
நடந்திருக்குமா? கொண்டாடி இருப்பார்கள், பாட புத்தகத்தில் இடம் பெற வைத்திருப்பார்கள்.




vara vijay said...

Suvi dont try to cheat. Rasool is not mere a Religious leader he is also unproclamied king of Islamic kingdom. How can u compare leadership with agriculture. Who you are trying to cheat me or yourself. Rasool speech and his all activities are wahi and explanation of Quran. You can't separate rasool, Quran hadith. If you do you are a kaffir.