Followers

Wednesday, November 13, 2019

இன்னொரு ஃபாத்திமா இறந்து விடாமல் பாதுகாப்போம்!

இன்னொரு ஃபாத்திமா இறந்து விடாமல் பாதுகாப்போம்!
தற்போது இந்துத்வா வெறி அடி மட்டம் வரை பரப்பப்பட்டுள்ளது. இதன் ஆபத்தை உணராமல் அப்பாவி இந்துக்கள் பலர் இந்துத்வா சிந்தனைக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐஐடி நிர்வாகத்தில் சுதர்ஸன் பத்மனாபன் போன்ற மனித மிருகங்கள் ஆசிரியர்கள் என்ற பெயரில் உலா வருகின்றனர். இவர்கள் தங்கள் பணிக் காலத்தில் விதைக்கும் வெறுப்பு விதைகளானது பலரது வாழ்க்கையை பாழாக்கி வருகிறது. சுதர்ஸன் பத்மனாபன் என்ற இந்த மிருகத்தின் குடும்பமும் பாதிப்படைந்தவர்களின் சாபத்தால் சீர் குலைவை அடையும் போதுதான் தங்களின் தவறுகளை உணருவார்கள். தற்போது இந்துத்வா ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் பெற்றிருப்பதால் இந்த மிருகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்றே நினைக்கிறேன்.
தற்போதுள்ள நாட்டின் சூழல் அறிந்து நாமும் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வயது வந்த பெண் பிள்ளைகளை தனியாக விடுதியில் தங்கி படிக்க வைக்கும் வழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் பெண் பிள்ளைகளின் படிப்புக்காக தாய் தந்தையர் கல்லூரி இருக்கும் ஊருக்கே வந்து வீடு வாடகை எடுத்து தங்கிக் கொள்ளலாம். தினமும் நமது கண்காணிப்பில் இருப்பதால் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் ஓரளவு கட்டுப் படுத்தப்படும். தங்களின் ஆற்றாமைகளை தங்களின் பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். கெட்ட நண்பர்களின் பழக்கங்களும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
அடுத்து.... ஐஐடி போன்ற நிறுவனங்களில் பாடம் படிக்கும் அளவு நமது பிள்ளைகள் திறன் உள்ளவர்களா? என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மாணவ மாணவிகளின் விருப்பத்தை தூரமாக்கி விட்டு பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை பிள்ளைகளின் மேல் திணிக்காமல் இருக்க வேண்டும். இதனால் திறன் குறைந்த மாணவ மாணவிகள் பாட சுமைகளால் தற்கொலைகளை நாடுவது குறையும்.
மேலும் நமது பிள்ளைகளை இறை பக்தி உடையவர்களாக சிறு வயதிலிருந்தே வளர்க்க வேண்டும். இறை பக்தி ஆழமாக உள்ள ஒரு உள்ளத்தில் தற்கொலையின் நாட்டம் ஒரு இம்மி அளவு கூட வராது. ஐந்து வேளை தொழுது வரும் ஒரு மாணவனின் மன உறுதியை நாம் கண் கூடாக காணலாம். எனவே சிறு வயதிலிருந்தே இறை பக்கதியுடைய குழந்தைகளாக வளரப்பதில் கவனம் செலுத்துவோம்.
மேலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி பயிலும் கல்வி கூடங்களை முடிந்த வரை தவிர்த்து கொள்வோம். இளம் பிராயத்தில் எது நல்லது எது கெட்டது என்பதை உணர முடியாத வயதில் கோ எஜூகேஸன் பல தவறுகள் நிகழ காரணமாகி விடுகிறது. பெண்கள் கல்லூரி இல்லாத ஊர்களில் நமது பெண்களை அஞ்சல் வழிக் கல்வி மூலம் கல்வி கற்பிக்கலாம். தேர்வு சமயங்களில் மட்டும் பெற்றோர்கள் உடன் செல்வது அவ்வளவு சிரமமாக இருக்காது.
பிள்ளைகளின் உயிர் நமக்கு முக்கியம். அதற்கு அடுத்துதான் கல்வி வர வேண்டும். ரோஹித் வெமுலா, அனிதா, ஃபாத்திமா போன்ற உயிர்கள் இனியும் போகாது காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.



2 comments:

Dr.Anburaj said...

தொலைக்காட்சியில் பார்த்து மிகவும் வருந்தினேன்.
மாணவிக்கு எற்பட்ட பாதிப்பு கடுமையானது..மகா அறிவு படைத்த இந்த மாணவியின் இறப்பு நாட்டிற்கு இழப்பு.ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.
-----------------------------------------------------------------
சாவுக்கு துணிந்தவன் எதிரிகளை நிா் மூலமாக்க வேண்டுமே. தவிர தற்கொலை செய்யக் கூடாது.
தாயாரோடு தினம் பேசும் பாத்திமா தற்கொலை செய்திருக்கக் கூடாது.
தாயிடம் ஏன் தனது மன வேதனையை கொட்டவில்லை. தாயிடம் நம்பிக்கையில்லையா ?
பாத்திமா அவசரப்பட்டு விட்டாா். எதிர்தாக்குதல் நடத்தினால் இந்த ஆசிரியா் என்ன செய்து விடுவாா் ?
சரியான பதிலடி கொடுத்து விட்டு சாதித்து இருக்க வேண்டும்.தொந்தரவு அதிகம் இருந்தால் கல்வி நிறுவனத்தை விட்டு வெளிறேறியிருக்க வேண்டும். சாவு முக்கியமா ஃதீரமான வாழ்வு முக்கியமா ? IIT கல்வி முக்கியமா ? பாத்திமா அவசரப்பட்டு விட்டாா்.

-------------------------------------------------------------------------------------

Dr.Anburaj said...

ற்போது இந்துத்வா வெறி அடி மட்டம் வரை பரப்பப்பட்டுள்ளது. இதன் ஆபத்தை உணராமல் அப்பாவி இந்துக்கள் பலர் இந்துத்வா சிந்தனைக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
................................தற்போது இந்துத்வா ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் பெற்றிருப்பதால் இந்த மிருகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்றே நினைக்கிறேன்.
---------------
பொல்லாத வாக்கியங்கள். பிரச்சனைக்கு மதவாத சாயம் தீட்டுவது ஈனத்தனம்.
----------------------------------------------------------------------------
என் வாழ்விலும் இப்படி ஒரு ஆசிரியா் வந்து புகுந்தாா். 10 ம் வகுப்பில் சரித்திரம் போதித்த எலிசபத் மார்கரெட் என்ற ஆசிரியா் ஒரு நாள் பாடம் நடத்தும்போது சம்பந்தமேயின்றி ” எந்த புராணத்தில் இல்லாத பொய்யும் கந்த புராணத்தில் இருக்கும்.அரக்கன் அம்பில் ”தீ” உருவாகும்......பாம்பு உருவாகும் ....என்றும் முருகா் அம்பில் மழை .... மயில் உருவாகும் இப்படி ஆயிரம் கதைகள். அம்பு பாம்பாக மாறுமா ? அம்பு மயிலாக மாறுமா ? என்றாா்.
நான் உடனே எழுந்து கன்னி குழந்தை பெறமுடியும் என்றால் அம்பு பாம்பாக மாற முடியும் . இதில் உங்களுக்கு என்ன கஷ்டம் என்றேன்.டயோசிசன் நடத்தும் பள்ளியில் தமிழாசிரியா் தவிர அனைவரும் கிறிஸ்தவர்களே. எனது கேள்ளி அந்த ஆசிரியருக்கு கடும் வேதனையை ஏற்படுத்தி விட்டது. உடனே போய் அனைத்து ஆண் ஆசிரியா்களிடம் இந்த சம்பவத்தை சொல்வி அமா்களம் செய்து விட்டாா். எனக்கு கணக்கு எடுத்தவா் பால் ஜேசுவா என்பவா் சற்று முரட்டு குணம் படைத்தவன். கணக்கு வகுப்பில் காரணமின்றி என்னை நிறைய அடிக்க ஆரம்பித்தான். கேள்ளி கேடடால் உடனே பதில் மின்னல் வேகத்தில் சொல்ல வேண்டும். விநாடிகள் தாமதம் ஏன்றாலும் அடி அடி என்று அடிக்க ஆரம்பித்தாா். இவனது சேட்டைகளை நான் அனைத்து ஆசிரியா்கள் அறியும் வண்ணம் பகிரங்கமாக கத்தி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தேன்.எனது வீட்டிலும் உறவினா்களிடமும் உடனுக்குடன் அனைத்தையும் தெரிவித்தேன். அவருக்கும் எனக்கும் போட்டி பலமானது.வம்புகள் அதிகமானது. trignometry என்ற பாடத்தைஅன்றுதான் முதல் முதலாக நடத்தினாா். பல சுத்திரங்கள் மனப்பாடமாக படிக்க வேண்டும். அனைத்து மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாா்.என்னிடம் 4 கேள்விகள் கேட்ாா். 3 க்கு பதில் அளித்தேன். மிகக் கடுமையாக என்னை கம்பு கொண்டு தாக்கினாா். கம்பை பிடித்துக் கொண்டு ” இனி ஒரு அடி அடியுமே பார்க்கலாம்” என்றுசொல்லிக்கொண்டு மேஜையை விட்டு வெளியேறி ஆசிரியா் அருகில் வந்னே். கம்பை அவர்கையில்யிருந்து பிடுங்கி விட்டேன். ஆசிரியா் என்னை வகுப்பில் இருந்து வெளியே போ என்று கத்தினாா்.முடியாது உன்னால் முடிந்தால் வெளியே தூக்கிப்போட்டுப் பாா் என்றேன். தலைமை ஆசிரியா் குமாரசாமி என்பவரும் வந்து என்னை வகுப்பை விட்டு வெளியேற உத்தரவிட்டாா் .நான் எனது இடத்தில் உறுதியாக உட்கார்ந்து கொண்டேன். வெளியேற மறுத்து விட்டேன். எனது பையில் கற்கள் இருந்தன. கட்டாயப்படுத்தினாா்கள் என்றால் கல்கொண்டு இருவரையும் நான் தாக்கியிருப்பேன். என்ன நினைத்தார்களோ அப்படியே என்னை விட்டு விட்டு எனது தந்தைக்கு தகவல் கொடு்த்து மறுநாள் காலையில் வரச் சொன்னார்கள். மறுநாள் காலை அலுவலகம் அனல் பறந்தது.என்து தந்தை ஆசிரியரை கேட்ட கேள்விகளில் தலைமை ஆசிரயா் உட்பட அனைவரும் தலை குனிந்து நின்றனா்.என் பையன் இங்குதான் தொடா்ந்து படிப்பான். அவனுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நடப்பதுவேறு என்று முடித்துக் கொண்டாா். கணக்கு ஆசிரியரின் அடாவடித்தனத்தை அனைவரும் கண்டித்தனா்.10 மற்றும் 11ம் வகுப்பிலும் பால்ஜேசுவாதான் எனக்கு கணக்கு ஆசிரியா்.த.ஆ குமாரசாமி 11ம் வகுப்பில் ஆங்கிலம் போதித்தாா். இருவரும் என்னிடம் பேசமாட்டார்கள். பரிட்சை பேப்பா் கூட பக்கத்து பையனிடம்தான் கொடுப்பார்கள். வால் மடக்கி பெட்டிப்பாம்பாக இருந்தார்கள். பாடங்களில் முதல் மாணவனாக இருந்த எனக்கும் இவ்வளவு சோதனை.காரணம் நான் ஒரு பக்தியுள்ள விபரம் தெரிந்து assertive இந்து என்பதுதான். ஆனால் நான் ஒன்றும் பயந்து ஓடவில்லை.பிற மாணவர்கள் பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கு மாறிவிடு என்றார்கள்.ஆனால் நான் இந்த வம்பன்களை எதிர்கொண்டே தீருவது என்று முடிவு செய்து மேற்படி பள்ளியில் தொடா்ந்து படித்தேன். பிறபாடம் போதித்த ஆசிரியா்கள் அனைவரும் என்னிடம் நியாயமாக நடந்து கொண்டார்கள்.