தீவிரவாத தொடர்புடையதாக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படும் நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க தேர்தல் நன்கொடை பெற்ற தகவல் அம்பலமாகியுள்ளது.
1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாஃபியா தலைவன் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்கிற இக்பால் மிர்ச்சி. இவரிடமிருந்து RKW டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது குறித்த புகாரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், RKW டெவலப்பர்ஸ் நிறுவனம் பா.ஜ.க-வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 2014-2015ம் ஆண்டில் பா.ஜ.க-வுக்கு ரூபாய் 10 கோடி நன்கொடை அளித்துள்ளது அந்நிறுவனம்.
அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான ரஞ்சித் பிந்த்ரா, தவறான செயல்களுக்கு ஒப்பந்தங்களை எளிதாக்கியதாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இக்பால் மேமனுக்கும், நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் ஈடுபட்ட ரஞ்சித் பிந்த்ராவை ’ஏஜென்ட்’ எனக் குறிப்பிட்டுள்ளது அமலாக்கத்துறை.
இக்பால் மேமனின் சொத்துகளை வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய ஒரு நிறுவனம் சன்பிளிங்க் ரியல் எஸ்டேட். மெஹுல் அனில் பவிஷி என்பவர் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் இயக்குநராக உள்ளார். அந்த நிறுவனம் பா.ஜ.கவுக்கு ரூபாய் 2 கோடி நன்கொடை அளித்ததும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
RKW டெவலப்பர்கள் நிறுவனத்தின் இயக்குநரான பிளாசிட் ஜேக்கப் நரோன்ஹா, தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். தர்ஷன் நிறுவனம் 2016-17 ம் ஆண்டில் பா.ஜ.கவுக்கு ரூபாய் 7.5 கோடியை நன்கொடையாக வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இப்படி, தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் கோடிகோடியாக பணம் பெற்றுள்ளது பா.ஜ.க
மகாராஷ்டிரா தேர்தலின்போது பிரச்சார பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி நீதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
"மும்பை குண்டுவெடிப்பின் காயங்களை எங்களால் மறக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய அரசாங்கம் நீதி வழங்கவில்லை. பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தனர்” என அவர் முழங்கினார்.
தற்போது, இந்த விவகாரத்தில் பா.ஜ.க சிக்கியுள்ளது. தீவிரவாத தொடர்புடைய நிறுவனங்களிடம் நன்கொடை பெறுவது தேசத்துரோகத்திற்கு ஒப்பானது எனும் நிலையில், பா.ஜ.க இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
2 comments:
உண்மை என்ன என்று விசாரிக்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியும் சரியாக செயல்படவிலலையினில் அதன் மேல் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.
தேர்தல் செலவுகளை கடுமையாக குறைக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஒரு வேட்பாளா் சார்பில் வீட்டிற்கு தனது திட்டங்கள் தொகுதிக்கு தேவையான காரியங்கள் குறித்த - ஒரு சுற்றறிக்கை அளிக்க வேண்டும்.அதற்கு மேல் பிரசாரம் தேவையில்லை. இவர்கள் எல்லாம் போட்டியிடுகின்றார்கள் என்று துண்டு பிரசரம் காட்டிவிடும்.மக்கள் வாக்களித்து ஒருவரை தோ்வு செய்வார்கள். செலவு மிக குறைவாக இருக்கும்.
-------------------------------------------------------------------------
திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினா்கள் முதலில் இத்தகைய சட்டத்தை தனிநபா் மசோதாவாக தாக்கல் செய்யலாமே.
Post a Comment