பிஜேபி ல் இணைந்தார் நடிகன் ராதாரவி. - செய்தி
பெரியார் நினைவேந்தல் கூட்டம்,
சென்னைப் பல்கலைக் கழகம்..
M.R. ராதாவின் கவனிக்க வேண்டிய உரை:
"படிக்காத என்னை ஏன் அழைத்தீர்கள்" என்று உரையைத் தொடங்கியவர்,.....
"1920 களில் பெரியார் முதல் வலம் வருகிறார். அப்போது நாடகக்குழுவில் சிறுவனாக வேலை செய்து வந்தேன். காலையில் நாடகக் குழுவினருக்கு காபி தேநீர் வாங்கச் செல்வேன்.
அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன். "டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.
அய்யர் கடையில் 20 அடி தூரத்திலிருந்து "அய்யா சாமி" என்று உரத்தக் குரலில் கத்துவேன். "டேய் வரேன்டா" என்று கூறிவிட்டுப் பாத்திரத்தில் காபியை அய்யர் எடுத்து வருவார். நான் எடுத்துவந்த பாத்திரத்தையும், பணத்தையும் மண் தரையில் வைக்கச் சொல்வார். நீண்ட கைப்பிடியுடன் உள்ள அவரது பாத்திரத்திலிருந்து காபியை ஊற்றுவார்.
1930களில் தமிழ்நாடெங்கும் பெரியார் மீண்டும் வலம் வருகிறார். காபி கடைக்கு மிக அருகில் செல்ல முடிகிறது. "சாமி காபி கொடுங்கள்" என்று கூறியவுடன் "இதோ வரேன்டா!" பாத்திரத்தையும் பணத்தையும் உணவகத்தின் மேஜை மீது வைக்க முடிந்தது. "டேய்" என்ற ஆணவச் சொல் காணாமல் போய்விட்டது.
1940களில் பெரியார் வலம் வருகிறார். உணவகத்தின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு "அய்யரே! காபி கொடு, காசு கொடுக்கிறன்" என்று மிடுக்கோடு பேச முடிந்தது. "இதோ தரேன்! வாங்கிக்கப்பா"
இப்படியாக, படிப்படியாக அனைவருக்கும் மரியாதையும், சம உரிமையும் கிடைக்கிறது.
இதை யார் வாங்கித்தந்தது?
இதை யார் வாங்கித்தந்தது?
அய்யா சாமி: டேய் வரேன்டா: ...
சாமி : வரேன்டா
அய்யரே : வாங்கிக்கப்பா
சாமி : வரேன்டா
அய்யரே : வாங்கிக்கப்பா
மாணவர்களே! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்...
ஒரு முறை இந்தச் சொற்களைச் சொல்லிப்பாருங்கள், இந்த ஒலி சத்தத்தின் வேறுபாடுகளில் தந்தை பெரியாரின் உழைப்பும், சீர்திருத்தமும்பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொண்டிருக்கும்"
என்று குறிப்பிட்டு, அவரின் குரலில், அவருக்கே உரித்தான பாணியில் நடித்துக் காட்டினார்.
மண்டபமே அதிரும்படியான கையொலி சத்தம்.
நடிகவேள் ராதாவின் பகுத்தறிவுப் பணி என்றும் போற்றப்படும்.
1 comment:
இந்த சம்பவம் உண்மையாக இருக்கலாம். வருந்தத்தக்கநிகழ்வுதான்.
ஆனால் தீண்டாமை இடத்திற்கு இடம் மாறுபடுகின்றதே.காயல்பட்டனம் கீழ்கரை போன்ற ஊருகளில் எல்லாம் முஸ்லீம்கள்தானே பார்ப்பனர்கள்.இராமநாதபுரத்திலோ முஸ்லீம்கள் மற்றும் தேவா்கள். சொத்து உள்ளவன் உயா்சாதி.
நாடாா் களை -எனது சாதி மக்களை -மரம்ஏறி பயல்கள் என்றுதான் கூப்பிடுவார்கள். மரம் எறி வந்தால் கூலி 15 ரூபாய் கெர்டு என்று சாயல்குடியில் மனைவியிடம் ஒரு முஸ்லீம் பேசுவதை நான் கேட்டேன்.சொத்துக்கள் அனைத்தும் முஸ்லீம்கள் மற்றும் தேவா் இன மக்களுக்குதான் சொந்தம்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகில் நாலுமாவடி என்ற ஊரில் 10ம்வகுப்பு படிக்கும் நாடாா் சாதி பையன் பனை ஏறும் தன் தந்தையின் முதலாளியை-அவனும் நாடாா்தான்--- சொத்துள்ள நாடாா் -நிலமக்கார நாடாா் - பார்த்து பணம் வாங்கச் செல்கிறான்.
முதலாளியின் மனைவி வாசல் அருகில் நிற்கின்றாள்.பையன் அண்ணாச்சி வீட்டில் இருக்கின்றாரா ? அவரை பார்க்க வந்தேன் என்றான். முதலாளி மனைவிக்கு மிக அருகில்தான் நின்றிருக்கின்றார் .பையன் பேசியதைக் கேட்டவுடன் முதலாளி
” என் அப்பன் உன் அம்மாவை என்று ....த்தான் . என்னை அ்ண்ணாச்சி என்கிறாரே”
என்றான்.பையன் வீட்டிற்கு ஓடி வந்து விட்டான்.அன்று அவன் எடுத்த முடிவு” இனிமேல் பனை தொழில் செய்யக்கூடாது என்பதுதான். பார்ப்பனர்கள் செய்தால் தீண்டாமை.பணக்கார முஸ்லீம்கள் தேவா்கள் நாடாா்கள் கவுண்டார்கள் நாயுடுகள் செய்தா்ல் உன்னதம் .
என்ன வேடிக்கை.
பெரியாா் கிழித்தது இதுதான்.
இந்த நாட்டில் தீண்டாமையை எதிர்த்து சித்தர்கள் ஆயிரம் போ்குரல் கொடுத்துள்ளார்கள்.
பரைச்சி போகம் வேறா பனத்தி போகம் வேறா டா -
பறச்சியைிடமும் பனத்தி -பார்ப்பன பெண்ணிடமும் கிடைக்கும் காம சுகம் ஒன்றுதான்.
கௌதமன் புத்தா் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை தீண்டாமை ஒழிக்கத்தான் செலவு செய்தார்.
புதிய சாதிகள் -பௌத்தம் என்ற பிரிவுதாம் உருவாகியது.அதுவும் கால போக்கில் பல குடும்ங்களாக பிரிந்தது. பிரச்சனைகள் புதிய வடிவை எடுக்கின்றன.
இன்று தீ்ண்டாமை எதிர்த்து உண்மையாக உழைப்பவர்கள் யாரும் பார்ப்பனர்களை சாடுவதில்லை.
வன்னியர்களை எதிர்த்து திருமாவளவன் அரசியல் செய்கின்றாா். காரணம் ?கல்வி பொருளாதாரம் சமூக அக்கறை போன்ற விசயங்கள் வந்தால் தீண்டாமை தானாக அழிந்து விடும். திரைப்படங்கள் சமூக நீதியை அதிக அளவில் மக்களிடம் சோ்த்தது என்பது உண்மை.
----------------------------------------------------------------------
திரு.இராதா ரவி போன்றவர்களுக்கு இந்து மதமும் தெரியாது.இந்துத்துவாவு் தெரியாது. இந்து பண்பாடும் தெரியாது.நடிகைகள் கூட்டம் தெரியம்.அதனோடு தொடா்புடைய வஸ்துக்கள் தெரியும்அதிமுக திமுக என்று இவன் மலருக்கு மலா் தாவிக்கொண்டேயிருப்பான்..இவனை கட்சியில் சோ்ப்பது பெரும் பாவம். இவன் விரைவில் விலகிவிடுவான்.
Post a Comment