Followers

Sunday, November 24, 2019

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தெரியுமா உங்களுக்கு?

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தெரியுமா உங்களுக்கு?
தெரியாதவர்களுக்கு நிகழ்காலத்தில்
ஒரு நிகழ்வைச் சொல்கிறேன், தெரிச்சுக்கோங்க..
நீங்கள் சில மாதங்களுக்கு முன்னால் இந்தச் செய்தியை கேள்விபட்டிருப்பீர்களென்று நினைக்கிறேன்.
அதாவது மத்திய அரசுக்கு ஆதரவாக
சிபிஜயை நடத்திய விவகாரத்தில் சிபிஜ இயக்குனர்களாக இருந்த ராகேஸ் அஸ்தானாவுக்கும், அலோக் வர்மாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதும், அதனை தீர்க்க நீதிமன்றம் தலையிட்டு சிபிஜ இயக்குனர்கள் இருவரிடமும் மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரித்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென்று சொல்லியிருந்தது.
இதுதான் மோடி அரசு வெட்டிய கிணறு. ஆனால் இங்கிருந்து மோடி எதிர்பார்க்காத பூதம் ஒன்று கிளம்பியது.
அதாவது மத்திய கண்காணிப்புதுறை நடத்திய விசாரணையின் அறிக்கையை சமீபத்தில் நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கிறது. அதில் இவர்கள் இருவருக்குள் பிரச்சனை எதிலிருந்து ஆரம்பித்தது என்று தெரிந்துகொள்ள கேட்கப்பட்ட கேள்விக்கு அலோக் வர்மா சொல்லியிருக்கிறார், 'மத்திய மோடி அரசின் அழுத்தத்தின் காரணமாக பிகாரின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை ஊழல் வழக்கில் கைது செய்வதிலிருந்தே எனக்கும் ராகேஸ் அஸ்தானவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதென்று'.
மேற்கொண்டு அவர், 'பிகாரில் எதிர்பாராதவிதமாக லல்லு பிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் கூட்டணி வந்து வெற்றியும் பெற்றுவிட்டனர். இந்த கூட்டணியை உடைத்தால்தான் பிகாரில் பிஜேபி வளர முடியும் என்பதற்காக லல்லுபிரசாத் யாதவை ஊழல் வழக்கில் கைது செய்ய வேண்டுமென்று பிகார் மாநில பிஜேபி தலைவர் சுசில் மோடி மத்தியில் இருக்கும் நரேந்திர மோடியிடம் சொல்ல, அதற்கேற்றவாறு சிபிஜக்கு உத்தரவு வந்தது. அதனை நான் ஏற்கவில்லை. ஆனால் ராகேஸ் அஸ்தானா மத்திய அரசு சொன்னதை செய்ய ஆரம்பித்தார் லல்லுவை கைது செய்தனர். பிகாரில் கூட்டணியும் உடைந்தது. நிதிஷ்குமாரிடம் ஏற்கனவே பிஜேபி தரப்பிலிருந்து பேசியபடி பிஜேபி அவருக்கு ஆதரவு கொடுத்து கூட்டணியில் இணைந்தது' என்று சொல்லியிருக்கிறார்.
இதுதான் பூதம்கிளம்பிய கதை.
தனது நலனுக்காக மோடி தலைமையிலான பிஜேபி அரசு எவ்வளவு கீழ்த்தரமான வேலையை, அதுவும் தனித்து இயங்கக்கூடிய ஒரு நிறுவனத்தையே கபளீகரம் செய்து செய்திருக்கிறதென்பது இதன் மூலம் தெரியவந்திருக்கிறது. இதேபோலத்தான் நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கிறதென்று நான்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மக்கள் முன்னிலையில் சொன்னார்கள்.
ஆனாலும் இப்படி கிளம்பிய பல பூதங்களை தனது வில்லத்தனத்தால் பிஜேபி வெளியிலேயே தெரியாத வண்ணம் பார்த்துக்கொள்ளும் என்பதே கடந்தகால வரலாறு.
1.https://thewire.in/…/lalu-prasad-cbi-rakesh-asthana-a…/amp/…
2.https://thewire.in/…/bihar-lalu-prasad-yadav-tejashwi-corru…
4.https://thewire.in/…/sc-directs-cvc-to-give-probe-report-to…
5.https://thewire.in/govern…/cbi-cvc-alok-verma-rakesh-asthana
6.https://thewire.in/…/sushil-modi-sanjay-kumar-motihari-atta…
கொண்டல் சாமி பதிவின் காப்பி பேஸ்ட்


1 comment:

Dr.Anburaj said...

லலலு ஒன்றும் புரண யோக்கியா் அல்ல.அரசு பணத்தை ஆயிரக்கணக்கான கோடியை கொள்ளை ....கொள்ளையாக கொள்ளையடித்தவன்.இவனுக்ககெல்லாம் ஒரு சாதிய சார்பு அரசியல் கட்சி.அதற்கு ஓட்டுபோட ஒரு மந்தைக் கூட்டம்.இதற்கு போ் ஜனநாயகம். ஊழல் ஒழிப்புக்கு பாஜ அரசு மிக நல்ல காரியத்தை செய்துள்ளது. சிபிஐ இயக்குநா்கள் ஒருவர்கொருவா் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டை ஏன் பதிவு செய்யவில்லை.சலம் வைத்து நாறிப்போன புண்ணிற்கு அறுவை சிசிச்சைதான் தேவை. மோடி ஒரு பண்பாளன்.உத்தமன்.ஆனால் நாட்டின் நிலை கருதி மருத்துவராகவும் பணியாற்ற வேண்டியுள்ளது.ஊழல் மிக ஆழமாக வோ்விட்டு வளா்ந்து வருகின்றது. ராஜவ்காந்தி ” அரசு அளிக்கும் ஒரு ரூபாயில் 15 பைசாதான் மக்களுக்குப் போய் சேருகின்றது.மற்ற தொகை ஊழலில் காயந்து போகின்றது” என்றாா். ஏதாவது செய்ய முடிந்ததா ?
லல்லுவை ஒழித்ததன் வழி பீஹாரில் மிக பெரிய ஊழல் சாக்கடை தொட்டி மூடப்பட்டுள்ளது. மறக்க வேண்டாம்.
லல்லுவை ஒழித்ததன் வழி பீஹாரில் மிக பெரிய ஊழல் சாக்கடை தொட்டி மூடப்பட்டுள்ளது.