Followers

Monday, November 25, 2019

இந்தியாவின் முதல் மகாத்மா - ஜோதிராவ் பூலே.

இந்தியாவின் முதல் மகாத்மா - ஜோதிராவ் பூலே.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கல்வி தந்தார் என்பதற்காக, உயர் வகுப்பினர் அவரை கொல்ல திட்டமிட்டனர். கத்தியோடும், அரிவாளோடும் அடியாட்கள் பூலேவின் வீட்டை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் பூலே மிக அமைதியான குரலில், "என்னைக் கொல்வதால் உங்களுக்குப் பணம் கிடைக்குமென்றால், நான் சாகத் தயார். இப்போதுகூட உங்களைப்போல் அடித்தட்டு மக்களைக் கொண்டே பார்ப்பன உயர்குடியினர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறக்கவேண்டாம். எனது இனத்தைச் சேர்ந்த உங்கள் கையால் சாவது எனக்குப் பெருமையே, நீங்கள் என்னை கொல்லுங்கள்." என்றார்.
இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பாராத அடியாள் கூட்டம், ஆயுதங்களை கீழே போட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.
பிறகு அவர்கள் மகாத்மா பூலே நடத்திய இரவு பள்ளியில் சேர்ந்து படித்தனர். அடியாள்களில் ஒருவராக வந்த "கும்பார்" என்பவர் பின்னாளில் "வேதச்சாரி" என்ற புத்தகத்தை எழுதும் அளவு கல்வியில் உயர்ந்தார்.
இது பழைய வரலாறு.
ஆனால், நூற்றாண்டு கடந்தும் பார்ப்பனர்கள், தன் சாதி உயர்வை பாதுகாக்க; இன்றும் நம் மக்களை அடியாள் வேலைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்களே என்பது தான் வேதனை..!
பூலேவும், அம்பேத்கரும், பெரியாரும் நம்மை படி என்றார்கள். ஆனால் இன்றும் இந்த தந்திர நரிக் கூட்டம், எனக்கு அடியாளாக இருந்து நான் கை காட்டுபவனை அடி என்கிறதே...!

-மறைக்கப்பட்ட இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன்.


1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவின் முதல் மகாத்மா - ஜோதிராவ் பூலே.சாவித்திரி பூலே

ஆகிய இருவரும் இணைந்து கல்வி பெண்கல்வி தீண்டாமை ஒழிப்ப ஆகிய காரியங்களுக்கு அரும் தொண்டாற்றினார்கள் என்பது நிறைய பேர்கள் அறிவார்கள்.பாட புத்தகங்களில் சரித்திரம் உள்ளது.
மதுரை விமானநிலையத்திற்கு ஜோதிராவ் சாவித்திரிபூலே விமானநிலையம் என்று பெயரிடுமா ? தமிழ்நாடு அரசு.

காந்தியின் பிரகாசத்தால் மறைக்கப்பட்ட பெரும் தியாக வரலாறுகளில் இதுவும் ஒன்று.முதல் முதலாக சாவித்திரி பூலே வரலாறு படிக்கும் போது அதிசயப்பட்டேன். ஒவ்வொரு பள்ளியிலும் இருவரின் படங்கள் வைக்கலாம்.