//So… that we can sell girl child for good Maher.// - Vijay
தவறான வாதம்... பெண்களுக்கு கொடுக்கப்படும் மஹர் தொகை என்பது அவர்களின் பாதுகாப்புக்காக கொடுக்கப்படும் தொகை!
இன்றுள்ள சட்டப்படி சிறைத் தண்டனையையும் தண்டத்தொகை செலுத்துவதையும் ஒரு சேர விதிக்கத்தக்க குற்றமான வரதட்சணை வாங்கும் வழக்கம், வேதகாலத்தில் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய் நடைமுறையாக இருந்துவந்த வழக்கமாகும். ரிக்வேதத்தின் கூற்றுப்படி இது வேத ஆதாரமுள்ள நடைமுறையாகும். (The Rig Veda states that cows and gifts given by the Aryan father of the bride to the daughter accompanied the bride's procession-Rg. Ved X.85. Dowry -dahej.)
பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்குகிற ஆரிய கலாசாரம் இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் எதிரானது.மணமகன்,மணமகளுக்கு மார்க்கச் சட்டப்படித் தந்தாக வேண்டியது "மஹர்"
மஹரை மனமுவந்து கொடுக்க வேண்டும். (அல்குர்ஆன் 4:4),
பொற்குவியலையே மஹராகக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் திரும்ப எடுத்துக்கொள்ளாதீர்கள்... (அல்குர்ஆன் 4.20,21)
''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன் 28:27)
மேற் கண்ட இறை வசனங்கள் திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது.
ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மஹர் கொடுக்காமல் பெண்களை ஏமாற்றுவதும், அற்பமான பொருட்களைக் கொடுத்து அவர்களை வஞ்சிப்பதும் இஸ்லாம் காட்டும் வழிமுறை அல்ல என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.
இது பற்றி இன்னும் விரிவாக பார்போம்.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சணை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.
கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறும் அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் பெண்களுக்குக் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். இதை உணரும் உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.
ஆண்கள், பெண்களுக்கு மணக்கொடை கொடுப்பதுதான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமாகும். ஏனெனில் இல் வாழ்க்கையில் பெண்களே அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் அவர்களே சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.
திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே தனது தாயுடனும், தந்தையுடனும், உறவினருடனும் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத்தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காகச் சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்களே பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண்தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.
எனவே பெண்களுக்கு ஆண்கள்தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ளன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.
வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மணவாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.
இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர்.
ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.
சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.
சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.
மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.
மணவாழ்வு கிடைக்காது என்று கருதி ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.
வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை, பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கும் இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.
4 comments:
Kanna suvi, both mahar and dowry system is wrong however in which dowry system is some what better. If i paid money and bought a wife, for myself. She had became like a property which i posses. vice versa in dowry system wife is going to live in husband house with some financial resource which can give her a sense of belonging and confidence within the new family. What about a girl who live in my family whom i bought for money. So suvi donot give silly reasons. Marriage should happen with consent two human being none of them should be demanded to pay either maher or dowry.
Who will get the maher money, the girl or her father can u explain. Why in india, Bangladesh,Pakistan and srilanka still dowry system is prevailing among you muslims. Why allah is not able to eradicate the dowry system within your community.
தங்களது பதிவு முற்றிலும் அபத்தமானது.முட்டாள்தனமானது.
காட்டறபிகளின் கலாச்சாரம் வேறு எப்படி இருக்கும்.
இந்து பண்பாட்டில் சட்ட எழுத்துக்கள் எப்படியிருந்தாலும் ஆண்குழந்தையை விட பெண்குழந்தை அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.ஆதிகாலத்தில் இருந்தே தகப்பன் சொத்தில் பெண்களுக்கு முழு உரிமை உண்டு. ஆண்களுக்கு சொத்தாக பிரிந்து கொடுக்கப்படுகின்றது.உள்ளுரில் பெண்கள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால் தகப்பன் சொத்தாக கொடுப்பது இன்றும் உள்ள பழக்கம்தான். பெரும் பாலும் வெளியுர் மருமகன்தான் கிடைக்கின்றான் -மாமனாா் வீட்டு மாப்பிள்ளையாக வாழ நிறைய பேர்கள் விருப்புவதில்லை
எனவே மகளுக்கு தகப்பன் சொத்தில் உள்ள பங்கு வரதட்சனையாக வழங்கப்படுகின்றது.
மேலும் பெண்கள் பாகப்பிரிவினை செய்து சொத்துக்களை பெறுவது நியாயமானதல்ல. காரணம் மாமா உறவு.
பெண்ணை பெற்ற குடும்பம் திருமணத்திற்கு பின்
01. பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும். சில குடும்பங்கள் 3 வருடங்கள் கொடுப்பார்கள்.ஆனால் பல குடும்பங்கள் தாய் உயிருடன் இருக்கும் வரை பொங்கல் படி கொடுக்கின்றார்கள்.
02. பிரசவச் செலவு குழந்தைக்கு செயின் வெள்ளி அரைஞான் கயிறு ...... இப்படி பல செலவுகள்.
03.பணக்கஷ்டம் என்றால் தகப்பன் வீட்டில் இருந்து பணம் பொருட்கள் போய் கொண்டேயிருக்கும். தாய் வீட்டிற்கு வரும் போதெல்லாம் தனக்கு தேவையான பொருட்களை ஒரு கட்டு கட்டிவிடுவாள் மகள்.
04.பாசம் மிகுந்த பணம் மிகுந்த குடும்பங்களில் பெண்ணின் சடங்கு ..... ஒரு பெரிய பட்ஜெட்.
05.இதுக்கு மேல் கணவர் சரியில்லை என்றாலோ இறந்து போனாலோ மகளையும் மகளின் குழந்தைகளை காக்கும் பொறுப்பு தாய் தந்தை மற்றும் உடன் பிறந்த ஆண்கள் பொறுப்புதான். எனவேதான் பாகப்பிரிவினை மகளுக்கு செய்வது தவறு.உறவுகள் நிரந்தரமாக முறிந்து விடும்.கறந்து கொண்டேயிருப்பது பெண்களுக்கு லாபகரமானது.
இந்து குடும்பங்கள்- தந்தை தாய் அண்ணன் தம்பிகள் - பெண்களுக்கு அதிகம் செலவிடுகின்றனா்.
தம்பியை திட்டினால் கண்டு கொள்ளாத அண்ணன்
”தங்கையை” திட்டினால் கொதித்து விடுவான். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு முக்கியம் பெறுகினறது. அது பெண்களுக்கு அதிக பாதுகாப்பையும் கௌரவத்தையும் அளிக்கின்றது.
என கணவா் என்னை மட்டும் முழுமையாக நேசிப்பவா் -- என்மனைவி என்னை முழுமையாக நேசிப்பவா் என்ற எண்ணம் இல் வாழ்க்கையின் அஸ்திவாரம். பெண்ணுக்கும் ஆணுக்கும் பெருமை தருவது.
----------------------------------------------------------------------
மஹா் தொகை என்பது எந்தவகையில் சேர்கினறது என்று எனக்கு புரியவில்லை.முஸ்லீம் பெண்ணின், தந்தையின் சொத்துக்களில், மகளுக்கு உள்ள பங்கு மகளுக்கு எப்படி கிடைக்கின்றது ? என்ற தகவல் எனக்கு தெரியாது.அதை சுவனப்பிரியன் விளக்க வேண்டும்.
மஹா் தொகை தலாக் ஆனால் பெண்ணிற்கு கணவன் கொடுத்து விட வேண்டும் அல்லவா ?
அப்படியானால் மஹா் தொகை என்பது தம்பதியாக வாழும் ஒரு குடும்பம் செலவு செய்யக் கூடாத பணம்தானே ? வங்கியில் பெண்ணின் பெயருக்கு நிரந்தர வைப்பாக வைக்க வேண்டிய தொகை ? ஆனால் தற்சமயம் கணவன் அதை குடும்பத்திற்கு-மனைவிக்காக குழந்தைக்காக செலவு செய்கின்றாா். விவாகரத்து ஆனால் மனைவிக்கும் செலவிடப்பட்ட தொகையில் ஒரு சிறு பகுதியை மட்டும்-மஹராக பெற்றதை - பெண் கணவனிடம் - ஆணிடம் கேட்பது முட்டாள்தனமாக இல்லை.அல்பதானமாக உள்ளது.பெண்ணுக்கு கொடுமையானது.
1லட்சம் மஹா் தொகையை பெற்று திருமணம் செய்யும் பெண் அந்த பணத்தை தாய் வீட்டிலா கெர்டுத்து விடுவாளா ?
என் மகளை திருமணம் செய்ய என்னிடம் 8 ஆண்டுகள் அடிமையாக பணியாற்ற வேண்டும் எ்னற சம்பவம் அநாகரீகமானது. மருமகனை அடிமையாக வைக்க நினைப்பவன் நீசன். இபபடிப்பட்ட நீசர்களை நபி என்ற பட்டம் கட்டி அழைப்பது முட்டாள்தனம்?
மஹா் தொகையை தகப்பனா வைத்துக் கொள்வானா ?
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.............
பணத்தின் மீதுதான் பக்தி என்ற பின் பந்தபாசமே எதடா ?
பதைக்கும் நெஞசை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா ?
மனிதனாக வாழ்வதற்கு மனிதனுக்கு தெரியவில்லை....
-----------------------------------------------------------------------------
மானுடத்தை பின்னுக்கு தள்ளி பணத்தை முன் வைக்கும் மனிதர்களிடம்
வரதட்சணையும் பிரச்சனைதான் ? வது தட்சணையும் பிரச்சனைதான் ! மஹரும் பிரச்சனைதான் ! நிக்காவும் பிரச்சனைதான் ! தலாக்கும் பிரச்சனைதான் ! கொடுத்தாலும் பிரச்சனைதான் ! கொடுக்காவிட்டாலும் பிரச்சனைதான் !
இந்த கோமாளிகள் நிறைய அனைத்து சமூகத்திலும் இருக்கின்றார்கள். இவர்களால் எக்காலமும் பிரச்சனைகள் உருவாகிக் கொண்டேயிருக்கும்.
ராஜோ தாம்ச குணங்கள் கொண்டவர்கள் எந்த நிலையிலும் பிரச்சனைக்குரியவர்களாகவே யிருப்பார்கள். இது இவர்களின் தலைவிதி.ஆண்டவன் படைப்பு.
நேற்றும் இன்றும் நாளையும் அதுதான் நிலை. நாய் வாலை நிமிர்த்த முடியாது. இவர்களையும் மாற்ற இயலாது.
-----------------------------------------------------------------------
எனது ஊரில் ஏழை வீட்டில் 6 பெண்கள் .கடைசியில் ஒரு தம்பி.தகப்பனாா் ஒரு திருமணம சொத்து விற்பனை வாங்கும் தரகு தொழில் செய்பவர்.பெரும் வருமானம் ஒன்றும் கிடையாது. 30 வயது தாண்டிய மூத்த பெண்ணை ஒருவருக்கு வீட்டு முற்றத்தில் திருவிளக்கு ஏற்றி முந்நிலையில் திருமணம் செய்து வைத்தாா். ஆனால் இந்த பெண் அந்த வீட்டிற்கு போன வேளை அவருக்கு தொழிலில் பெரும் அபிவிருத்தி. அன்புள்ளம் கொண்ட அந்த மருமகன் தனது கொளுந்திகள் 5 பேருக்கும் நிறைய நகைகள் சீர் வரிசைகள் செய்து சிறப்பாக திருமணம் செய்து வைத்தாா். மாமனாரையும் வயதான நிலையில் காப்பாற்றி கடமை செய்தாா் ?
இந்தஅன்பர் பகவத்கீதை படிக்கவில்லை. பைபிள் படிக்கவில்லை. குரான்பபடிக்கவில்லை.
சிறுவயது முதல் சென்னையில் பந்தல் போட்டு கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். இவரிடம் இவ்வளவு மனிதாபிமானம் வந்தது எப்படி ? 5 கொளுந்தியாளுக்கு தந்தை போல் தனயன் போல் திருமணம் செய்து அதற்கு பின் வரும் அனைத்து காரியங்களையும் செய்த பெருந்தன்மை எப்படி வந்தது ? இவன்தான் அந்தணன்.பிறாமணன். சத்துவகுணம் உள்ளவன்.
அனைவரையும் இப்படி படைக்கவில்லை என்கிறாா் கீதையில் ஸ்ரீகண்ணன்.
Post a Comment