'எங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்லவே அச்சமாக உள்ளது. அந்த அளவு ஆபாச சிலைகள் கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன' - ஒரு பிராமணர்
'உனக்கு சப்போர்ட் பண்ண ராமதாஸ் ஏன் வரணும்? பிரச்னைகளில் மாட்டிக் கொண்டால் வன்முறை, கோர்ட், வழக்கு என்பதற்கு மட்டும் உனக்கு தமிழர்கள் தேவைப்படுகிறார்களா?'
10 comments:
The Future is for the nation which is chaste- Pitrim A.Sorokin -
Eminent Russian sociologist.தனது sane sex order ஏன்ற புத்தகத்தில் இந்த கருத்து வலியுருத்தப்படுகின்றது. இணையத்தில் விபரங்கள் உள்ளது
நாம் இதை எதிர்காலம் கற்புடைய நாட்டிற்கே
எதிர்காலம் கற்புடைய ஊருக்கே
எதிர்காலம் கற்புடைய கிராமத்திற்கே
எதிர்காலம் கற்புடைய தெருவிற்கே
எதிர்காலம் கற்புடைய குடும்பத்திற்கே
எதிர்காலம் கற்புடைய வீட்டிற்கே
எதிா்காலம் கற்புடைய ஆணுக்கே
எதிா்காலம் கற்புடைய பெண்ணுக்கே
என்று எடுத்துக் கொள்ளலாம்.
சோரோகின் மட்டும் அல்ல இந்துமதமும் கற்பு நெறி ஆணுக்கும் பெண்ணக்கும் பொதுவாகத்தான் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு இல்-ஏகபத்தினி விரதம்- சீதை தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன்- என்பது தானே இராமாயாணம்.
வாழ்க்கை ஒரு சகடம். ஏற்றம் இறக்கம் கொண்டது. கலாச்சார உயா்வு கலாச்சார வீழ்ச்சி எல்லாம் மனித சமூக வாழ்க்கையில் எற்படுவது இயல்புதான். இந்துமதத்தின் அடிப்படை பண்பாடு 1.பிரம்மச்சரியம் ( 1.அனு பிரம்மச்சரியம் -திருமணம் ஆகம் வரை கற்பு பாலியில்உறவு கற்பனை விந்து விரையம் ஆகாமல் காத்தல் ஆகியவை 2.மகா பிரம்மச்சரியம் - முஹம்மது மனைவிகளுக்கு மகா பிரம்மச்சரியம் காக்க விதித்தாா். துறவு நெறி. வாழ்க்கை முழுவதும் பாலியில் உறவு துறப்பு )
2.கிரகஸ்தம் - இல்வாழ்க்கை 3.வனப்பிரஸ்தம் இல் வாழ்க்கையின் கடமைகளை நிறைவேறிய பின் படிப்படியாக அதனின்று விடுபடுதல் 4 சந்நியாசம்.-சமய அனுஷ்டானம் மற்றும் பொது வாழ்க்கைக்கு தன்னை அற்பணித்துக் கொள்ளுதல்.
பிரம்மச்சரியம காப்பதில் மக்கள் பின் வாங்கிய காலத்தில் தேவதாசி இயக்கங்கள் விபச்சார விடுதிகள் பாலியில் வல்லுறவு உடன் போக்கு ஆகியவை எற்பட்டு சமூகம் தாழ்வுற்றது. இதை இராமாயாணம் போக்கியது. இராமாயாணம் மக்கள் மனதில்வலிமை பெற்ற காலத்தில் கற்பு நெறி தவறாத ஆண்கள் பெருகினார்கள். பெண்களின் கண்ணியம் இயற்கையாக காக்கப்பட்டது. சமூக முன்னேற்றம் அதிக அளவில் ஏற்பட்டது.
கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் முன் காலத்தில் இருக்க வில்லை. பலமுனை பயன்பாட்டு இடங்களாக இருந்தது. சமயம் ஆடல் பாடல் விஞ்ஞானம் வைத்தியம் விளையாட்டு கல்வி லலித கலைகள் நாட்டுபுறக்கதைகள் கூத்து ..... போன்ற அனைத்து துறைகளின் மையமாக இருந்தது. ஆன்மவியலின் மையமாக மடங்கள் விளங்கின. எனவே தவறான பாலியில் கருத்துக்கள் மலிந்த போது கோவில் சுவர்களில் பாலியில் வக்கிரங்களை காட்டும் சிற்பங்கள் செதுக்கப்பட்டது.இது காலாச்சார சீரழிவை மேலும் மேலும் தீவிரப்படுத்தி சமூகத்தை நாசம் செய்தது. கோவிலில் ஏதோ ஒரு மூலையில்தான் அவைகள் இருக்கின்றன்.சில கோவில்களில் அவைகள் முக்கியமான இடங்களில் இருக்கலாம்.இந்த விபரங்கள் என்னிடம் இல்லை. ஆயினும் அவைகள் கலாச்சார சீரழிவின் அடையாளம் என்பது எனது கருத்து. சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியிடும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற மாத பத்திரிகையிலும் ” அருவருக்கத்தக்க பாலியில் சிற்பங்கள் பண்பாட்டுச் சிரழிவு அடையாளங்கள்.நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.
பாலியில் அறிவு மக்களுக்கு கிடைக்க அவைகள் உள்ளன
என்று கவிஞா் அமரா் கண்ணதாசன் உட்பட பலா் விளக்குவது
பச்சை ஏமாற்று வேலை.
2
கோவில் சிற்பங்களில் முறையான பாலியல் கருத்துக்கள் அறிவு பெறும் வகையில் அமைக்கப்பட்டது நிறைய உள்ளது என்றாலும் அசிங்கமாக விகாரமான அருவருப்பான பாலியில் உறவு காட்சிகள் அதில் நிறைய உள்ளது போல் படங்கள் பார்த்திருக்கின்றேன். அவைகளை பார்த்தால் ஆடிமாத நாய்கள் போல் ஒரு ஜோடி உறவு கொண்டு இருக்கும் - இழுத்துக் கொண்டு இருக்கும் போது அடுத்த நாய் அதன் மீது ஏறி உறவு கொள்ள முயலும்- இதை விட கேவலமான காட்சிகள் சில இடங்களில் உள்ளன.
ஆன்மவியல் போதித்த மகாபிரம்மச்சரியம் காத்த துறவிகள் வாழ்ந்த மடங்களில் ஆஸ்ரமங்களில் ஆதீனங்களில் இத்தகைய காட்சிகள் கிடையாது. ஏன்.
சில கோவில்களில் உள்ள சில சிற்பங்கள் ஆபாசமே.அசிங்கமே.அருவருப்புதான்.
ஆனால் ஒட்டுமொத்த சிற்ப கலை அழகை பார்க்கும் போலு இந்த சிற்பங்கள் கடலில் போட்ட சிறுமணல்தான். இவைகள் ஒன்றும் சதா மக்கள் கண்களில் தோன்றி மக்களுக்கு பாலியில் வேட்கையை தூண்ட வில்லை.
கோவிலுக்கு போகும் பக்தர்களில் 99.9 சதம் மக்களுக்கு இப்படிப்பட்ட சிற்பங்கள் இருப்பது தெரியாது. திருச்செந்தூா் கோவில் ஒரு சிறிய கோபுரத்தில் நிா்வாணமாக உள்ள ஒரு ஆண் மகன் சிற்பம் உள்ளது.உயா்ந்த சுவர்களை ஏறினால்தான் பார்க்க முடியும். நான் பார்த்துள்ளேன். ஆகவே உடனடியாக தீவிரமாக ஒழித்துதான் ஆக வேண்டிய காரியம் அது அல்ல.
கனிமொழி கருணாநிதி அவர்கள் கூட சிற்பங்களை அழிக்க வேண்டும் என்று தொல்திருமாவளவனை முன்மொழிந்துள்ளாா். இந்து மதத்தை மலினப்படுத்த கனிமொழி கருணாநிதி திருமாவளவன் சுவனப்பிரியனுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது.
ஆனால் இன்றைய திரைப்படங்கள் தொலைக்காட்சி வழி வீடுதோறும் 18 மணி நேரத்திற்கு மேல் காட்டப்படுகின்றது.அனைத்து்ம் உடலில் பாலியில் உணா்ச்சியை தூண்டும் காட்சிகள்தாம்.
நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. சில நேரங்களில் தொலைக்காட்சிகளில் சிலபடங்களின் சில காட்சிகளை பார்ப்பதுண்டு.
காதல் பாட்டுகள் பார்த்தால் 63 வயதான எனக்கே என் மனைவியை
உடனே தொட வேண்டும்போல் மனக்கிளா்ச்சியை அவைகள் தூண்டுவதாக
உள்ளது என்பது உண்மை.
இதன் பாதிப்பின் வீச்சு மிக அதிகம்.மிக மிக அதிகம். ஒவ்வொருரு ஆணையும் பெண்ணையும் இது பாதிக்கின்றது.திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் இன்று இதனால் படும் பாடு மிக அதிகம்.பாலியல் வக்கிர புகாார்கள் கொலைகள் சிறுகுழந்தைகள் பாதிப்பு ஆகியவை ஏற்பட காமகிளா்ச்சியை சதா கிளறிவீசும் திரைப்படங்கள்தாம் காரணம்.
கனிமொழி திருமாவளவன் ஆகியோர்கள் முதலில் திரைப்படங்களை முறைப்படுத்த வேண்டும்.கற்பு நெறி உணா்வு ஆணுக்கு வலிமையாக ஏற்படும் வகையில் பொரு்ததமான காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் மட்டும் வெளியிடப்பட வேண்டும்.சட்டங்கள் முறையாக திருத்தி முனைப்புடன் அமல்படுத்த வேண்டும். பொருக்கருத்து உருவாக்கப்பட வேண்டும்.அப்படி விரிவான ஆபாச ஒழிப்பு நச்சு திரைப்படங்களை ஒழிக்கும் போது கோவில்களில் உள்ள ஆபாச சிலைகளையும் நீக்கலாம்.யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாா்கள்.ஆதரிப்பார்கள். பல ஆபாச திரைப்படங்களை தயாரிக்கும் கம்பெனி விநியோகிக்கும் கம்பெனிகளின் உரிமையாளர்கள் யாா் ? திராவிடம் காண துடிக்கும் வீரா்கள் குடும்பம்தான். கனிமொழி முதலில் அதை கவனிக்க வேண்டும். ஆபாசத்தை வளா்த்து பணம் சம்பாதிக்க வேண்டுமா என்று பணக்கார்கள் நினைக்க வேண்டு்ம். ஈரான் நாட்டு திரைப்படங்களில் ஆபாசம் இருக்காது என்று கேள்விபட்டுள்ளேன்.
” பிரம்மச்சரிய ஆஸ்தமம் விழ்ச்சியுற்றதால் இந்தியா அந்நிய தேசத்து படையெடுப்புகளை எதிா் கொள்ள இயலாமல் தோல்வியுள்ளது - சுவாமி விவேகானந்தா்.
மனித வளம் பாலியில் துறையில் அதிகம் செலவானால் பிற துறைகளில் முன்னேற்றம் பெற போதிய மனித வளம் கிடைக்காது. எனவே வீழ்ச்சி நிச்சயம்.தனிநபருக்கும் சமூகத்திற்கும் இந்த கருத்து பொருந்தும்.
போதுமா சுவனப்பிரியன்.
அரேபிய இலக்கியங்களில் ஆபாசம் நிறைய உள்ளது. நான் பதிவிட தயாா்.தாங்கள் முன் அனுமதி அளித்தால் பதிவு செய்கின்றேன்.
Post a Comment