Followers

Wednesday, November 20, 2019

பொருட்களை வாங்குபவர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

பதஞ்சலி நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் கிராம மக்களிடம் பொருட்கள் தயாரிக்க பசுவின்  சிறு நீர் விலைக்கு கேட்டுள்ளது. போட்டி போட்டுக் கொண்டு பல கிராமத்தினர் சிறு நீரை சேகரித்து பணம் பார்த்து வருகின்றனர். பசுவின் சிறு நீர் கிடைக்காத போது மனிதனின் சிறு நீரையும் கலந்து காசு பார்ப்பதாக அம்மாநிலத்தவரே செய்தி பதிந்துள்ளார். எனவே பொருட்களை வாங்குபவர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.


1 comment:

Dr.Anburaj said...


இந்தியாவில் பசுவின் மூத்திரம் குடிக்கப்படுகின்றது.

அரேபிய பண்பாட்டில் இசுலாத்தில் ஒட்டகத்தின் மூத்திரம் குடிக்கப்படுகின்றது.

பசுவின் சிறுநீரில் உள்ள ஹார்மோன்கள் உடனே குடித்தால்தான் அதனுக்கான பலன் கிடைக்கலாம். பாட்டில்களில் அடைத்து அது கெட்டுப் போகாமல் இருக்க கூடுதலாக இரசாயனங்கள் கலந்து பயன்படுத்துவதில் விவேகம் இருப்பதாக நான் கருதவில்லை.
மருத்துவ காரணங்களுக்காக தற்காலத்திலும் பசுவின் ஒட்டகத்தின் சிறுநீா் அருந்துவதை என்னால் எற்க இயலாது. காலத்திற்கு ஒவ்வாத பழக்கம்.கைவிடுவது நல்லது.
-------------------------------------------
நான் சிறுவனாக இருக்கும் போது திசையன்விளை பகுதியில் உறவினா் வீட்டிற்கு சென்றால் அங்கு தேரிக்காட்டில் திருட்டுத்தனமாக சாராய ஊறல் போட்டு நிலத்தில் புதைத்து பானையின் வாய் மட்டும் வெளியே தெரியும் வண்ணம் புதைத்து போட்டு இருப்பார்கள்.பானையின் வாயை புற்கள் போட்டு தெரியாமல் மூடி வைத்து இருப்பார்கள். நாங்கள் அவற்றை கண்டால் சிறுநீா் கழிப்பது மலம் கழிப்பது போன்ற சேட்டைகளைச செய்து மகிழ்ந்ததுண்டு.
-------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்ட நல்லூரில் எனது முஸ்லீம் நண்பா் காதா் மீரான் மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்கு வயது 26 இருக்கலாம். அசைவம் சாப்பிடுவேன். ஆனால் முஸ்லீம்கள் வீட்டில் அசைவம் சாப்பிட மாட்டேன்.ஆனால் ஆட்டுக்கறிதான் என்று மீரான் என்னிடம் சொ்ல்லி என்னை அசைவம் சாப்பிட வற்புருத்தினாா். உடன் வந்த நண்பர்களும் அசைவம் சாப்பிடவிரும்பினாா்கள்.நான் சம்மதித்து அசைவம் சாப்பிட்டேன்.

சிறிது சாப்பிட்டபின் ஒருவா் ஒரு எலும்பு துண்டைஎடுத்து இது மாட்டின் இறைச்சி. என்றாா்.நான் இலையை மூடிவிட்டு எழும்பி விட்டேன். நண்பா் அசடு வழிய தன் சகோதரா் இறைச்சியில் கலப்படம் செய்து விட்டாா் என்று சொல்லி வருத்தம் தெரிவித்தாா். அழகிய தோற்றம் கொண்ட மீரா்ன் தற்சமயம் எக்மோரில் ஒரு உயா் வருவாய் விடுதி காப்பாளாராக உள்ளாா். சில வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன்.
-----------------------------------------------------------------------------
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
பதஞ்சலியை குறி வைத்து அதன் புகழை கெடுக்க மத வெறியினால் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உண்மை.
அரேபிய மத தொழில் அதிபர்கள் எல்லாம் புரண யோக்கியர்களா ?

சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு அறுத்த ஆட்டை வடமாநிலங்களில் இருந்து கொண்டு வந்த விற்பனை செய்த முஸ்லீம்கள் குறித்த பதிவுகள சுவனப்பிரியனில் வெளிவந்தது. நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.