Followers

Wednesday, November 13, 2019

உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

குர்ஆன் இறங்குவதற்கு முன்பு அன்றைய அரபிகள் பெண் குழந்தைகள் பிறந்தால் உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதனை கண்டித்து இறங்கிய வசனங்களே இவை. தற்போது பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு கொடுத்து மகிழ்வை பகிர்ந்து கொள்கின்றனர் அதே அரபிகள்.

 குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள் இவை...

தமிழகத்திலும் இந்த வசனங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை இந்த இந்து சகோதரர் மிக அழகாக விளக்குகிறார்.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
அல்குர்ஆன் 17:31
"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
அல்குர்ஆன் 6:151
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை.
அல்குர்ஆன் 6:140
குழந்தைகளைக் கொன்று புதைப்பது கொடிய குற்றம் எனவும், அக்குழந்தை எந்தப் பாவமும் அற்றவள் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.
என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
அல்குர்ஆன் 81:8,9


3 comments:

vara vijay said...

So that we can sell girl child for good Maher.

Dr.Anburaj said...

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்கிறவன் கற்பு நெறி தவறாதவர்கள் வாழும் சமுதாயம்தான் பெண்களை நேசிக்கும் சமூகம்.பெண்களுக்கு பாதுகாப்பான சமூகம். இந்தியா இராமனை பின்பற்றவில்லை என்பது உண்மைதான். பின்பற்ற வைக்க முடியுமா ? முடியும். ஆவன செய்ய நாம் தயங்குகின்றோம்.

Dr.Anburaj said...

பெண்களை இன்று கூட மதத்தை காரணம் காட்டி குமுஸ் பெண்ணாக்கி வைப்பாட்டியாக

செக்ஸ் அடிமையாக வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் அரேபிய கலாச்சாரம்

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை.எஸ்டி இன மக்களின் இளம் பெண்கள் 10000 பேர் இசுலாமிய தேசம் உருவாக்கும் இயக்கத்தவர்களின் முகாம்களில் வேசியாக வைக்கப்பட்டாா் என்ற செய்தி நேற்றுதானே படித்தோம்.

அரேபிய சிந்தனை ஆபத்தானது.