‘சதி’யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!
ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) என்ற சடங்கால் உயிருடன் எரிக்க முயன்றனர்.
ஆட்சித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர்.
இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர்.
‘உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறி தாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.
விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.
(ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339)
1 comment:
மனிதனை காட்டுமிராண்டியாக ஏன் அல்லா படைத்தாா் ? கலாச்சார பரிணாமம் நடந்து கொண்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் பொல்லாத விமா்சனங்களைச் செய்வது நியாயமானதல்ல.உளரங்கசீப் ஒரு கொடுரமானவன்.இந்தக்களை அழிக்க நினைத்தவன்.காபீர் என்று கடும் சித்தரவதைக்கு அளாக்கியவன்.ஜசியா வரியை விதித்தவன். அரண்மனையில் ஏராளமான இந்து பெண்களை வைப்பாட்டியாக வைத்தவன்.சீ சீ இவன் ஒரு மனிதனா
Post a Comment