Followers

Wednesday, November 13, 2019

ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் .....

Ahmed Yahya Ayyaz
ஐஐடி மெட்ராஸில் இஸ்லாமிய வெறுப்பினால் நிறுவன படுகொலை செய்யப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப் தாயார் ஊடகங்களிடம் பேசிய மலையாள பேட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு.
"எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.
முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.
ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. நவீன கால பிள்ளைகளைப் போன்று நண்பர்களோடு ஊர் சுற்றுவது போன்ற எந்த செயலிலும் எனது மகள் பங்கெடுத்தது இல்லை. படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம். எனது மகளுக்கு தெரிந்த விடயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை.
பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

சுதர்சன் பத்மனாபன்தான் எனது மகளை இல்லாமல் ஆக்கியது. முதலமைச்சரை சந்தித்தோம். இனியொரு ஃபாத்திமா சாகமாட்டாள் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் தாங்கள் எடுப்பதாக அவர் உத்தரவாதம் அளித்தார்.
அடுத்த செமஸ்டருக்கு படிப்பதற்கான புத்தகங்களை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்து எனக்கு தகவல் தந்தாள். மூன்றாவது செமஸ்டரில் இருக்கும் இருக்கும் பொருளாதார கணிதம் கொஞ்சம் கடினமானது எனவே நான் இப்பொழுதிருந்தே டியூசன் செல்ல வேண்டுமென திட்டமிடும் ஒரு பெண் பிள்ளை இப்படி சாவதற்கு விருப்பபடுமா..?
சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?
ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர். நாங்கள் உயர் நீதிமன்றமானாலும், உச்சநீதிமன்றமானாலும் சென்று என் மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இல்லையேல் நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை.
இனியொரு ஃபாத்திமாவை நாங்கள் இழக்க தயாரில்லை..
:அஹ்மது யஹ்யா அய்யாஷ்


3 comments:

Dr.Anburaj said...

எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.

பதில் பச்சை பொய். திட்டமிட்டே பேசுகின்றாா்.
மதவெறுப்பு மிகவும் அல்பமாக உள்ளது. கேரளத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் இசுலாமிய தேச பயங்கரவாத இயக்கத்திற்கு இசுலாமிய இளைஞா்கள் சோ்ந்துள்ளாா்கள். இத்தகைய அரேபிய மத வெறிபிடித்த காடையரகள் மத்தியில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பு எப்படியிருக்கும் ????? கேரளத்தில் முஸ்லீம்களால் இந்துக்கள் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.பல இடங்களில் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றாா்கள். இது உண்மை.இந்துக்கள் மத்தியில் முஸ்லீம்கள் இயல்பாக வாழ்ந்து வருகின்றார்கள்.கோஷா பின்பற்ற எந்த தடையும் இல்லை.முகத்தை மறைப்பதுதான் குறித்து விமா்சனம் உண்டு. ஐஐறியில் படிக்கும் ஒரு பெண் கோஷா முறையை பின்பற்ற தயங்குவாள் என்பது பொதுவான உண்மை.தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் முக்காடு அணியாமல் பாத்திமா இருந்திருக்க வேண்டும். பிறர் காரணம் அல்ல அல்ல.
குற்றச்சாட்டுஅவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம். ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இன்டெர்னல் மதிப்பெண்ணை குறித்து பேராசிரியரிடத்தில் எனது மகள் விவாவதம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை.
இதுவும் பச்சை பொய்.
பசுவின் இறைச்சி வைத்திருந்ததாக சில முஸ்லீம்கள் தாக்கப்பட்டதாக சில செய்திகள் பத்திரிகைகளில் வந்தது.
20 கோடி முஸ்லீம்கள் நிம்மதியாக வாழும் ஒரு நாட்டில் சில சம்பவங்கள் என் பிரமாண்டப்படுத்தப்படுகின்றது.
பல்கலைகழகத்தில் படிக்கும் ஒரு முஸ்லீம் மாணவிக்கு பாதுகாப்பற்ற சுழல் உருவாகும் என்பது எப்படி உண்மையாகும்.அரியானாவிலும் பஞ்சாப்பிலும் நடந்த சம்பவங்களின் அடிப்பைடையில் ஐஐறியை மதிப்பிடுவது தவறு. மதவெறி நாட்டில் இருந்தது ஊரில் இருந்தது... என்று பிதற்றி விட்டு இப்போது வாத்தியாாிடம் வாக்குவாதம் செய்தது பிரச்சனை என்பது முட்டாள்தனம். பாத்திமா பிரச்சனைக்கு இந்தியாவில் வாழும் அனைத்து இந்துக்களையும் இவர் குற்றவாளி ஆக்கப் பார்க்கின்றாா்.சரியான உளறல்.

Dr.Anburaj said...

குற்றச்சாட்டு பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு முஸ்லிம் நண்பர்களும் ஐஐடி யில் குறைவானவர்களே. இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

பதில் பேராசிரியா் பத்மனாபன் என்னமாதிரி தொல்லைகள் கொடுத்தாா் என்பதற்கு ஒரு சம்பவமானது தெரிவிக்க வேண்டுமே!

ஏய் துலுக்கச்சி போடி என்றாரா ?
ஏய் மலையாள நாயே பக்கத்தில் வராதே தள்ளி நில் என்றாரா ?

இவரால் பேராசிரியா் மீது ஒரு தெளிவாக குற்றச்சாட்டை வைக்க முடியாமல் என் மகளை கொன்று விட்டாா் என்பது சரியான பிதற்றல். திட்டமிட்டு ஏதோ பிறா் சொல்லிக் கொடுத்ததை ஒப்பிக்கின்றாா். தமிழ்நாடு அனைத்து மாநில மக்களுக்கும் பாதுகாப்பானது.
பாத்திமா தாயாரிடம் எந்த தவலையும் தெரிவிக்கவில்லை.
ஐஐறி போன்ற உயா் தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் மாணவர்களை ஆசிரியா்கள் கண்டு கொள்ளாமல்தான் போவார்கள். திட்டுவது என்பதெல்லாம் கிடையாது. ஒழுங்கீனமான இடங்களில்தான் முதலில் அறிவுரை பின் கண்டனம் அதற்கு பின் ஒழுங்கு நடவடிக்கை என்று படிப்படியாகத்தான் எதிர் நடவடிக்கை இருக்கும்.சென்னை ஐஐறியில் 8000 பேர்கள் படிக்கின்றாா்கள். இவர் மட்டும் தற்கொலையை தோ்வு செய்தது கோழைத்தனமானது.

Dr.Anburaj said...



சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத்தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள். 18வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெங்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவள் தூக்குக் கயிறை நெரிப்பதை எப்படி எதிர்கொண்டாள் என்று தெரியவில்லையே..? அவளா இப்படி செய்து கொண்டாள்..?

இது ஒரு நல்ல மாணவியின் லட்சணம் அல்ல. தாய் தந்தை வளா்ப்பு சரியில்லை.
------------------------------------------------------------------------------------

ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தொல்லைகள் தரப்படுகின்றன. கடந்து வருடம் 5நபர்கள் தொல்லை தாங்காமல் விலகி சென்றுவிட்டனர்.
மாணவர்கள் பாடத்தின் சுமை தான் காரணம். பிறவி அறிவாற்றல் innate intelligence இருப்பவர்களுக்குதான் ஐஐறி சரிபடும். முக்கி தனிபயிற்சி வகுப்புக்குச் சென்று பல வருடங்கள் படித்து தோ்வு பெற்று அங்குள்ள கல்விமுறைகளால் - ஆசிரியா்கள் வாயில் -spoon feeding - ஊட்டமாட்டாா்கள் - மாணவர்கள் சுயமாக தேடிதேடி படிக்க வேண்டும். இந்த முறை காரணமாகத்தான் பலா் பாடத்தின் சுமை காரணமாக வெளியேறுகின்றார்கள். ஆசிரியர்களின் அடாவடித்தனம் அல்ல.
---------------------------------------------------------------------
முட்டாள்தனத்தைமுழுசாக பதிவு செய்துள்ளாா் பாத்திமாவின் தாயாா.