Followers

Sunday, November 24, 2019

ஆன்மீகத்தில் அறிவை இழக்கும் இந்து குடும்பங்கள்...

சரியான வழிகாட்டுதல் இல்லாததால் ஆன்மீகத்தில் அறிவை இழக்கும் இந்து குடும்பங்கள்...

அந்த மூன்று குழந்தைகளின் தந்தையின் பேட்டியை இன்று சன் டிவியில் கேட்டேன். பெற்ற மனம் படும் பாட்டை கண்டு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பலரின் காலில் விழுந்து அழுது புரண்டது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. அவரின் தாயும் கதறுகிறார். பெற்றோர்களுக்கும் இந்த தவறில் பங்குண்டு. நடிகை ரஞ்சிதாவோடு ஆபாச வீடியோ வந்து உலகமே பார்த்தும் இன்னும் இவனை ஆன்மீக வாதி என்று நம்புகிறார்களே இந்த படித்த மக்கள்?

இனி நக்கீரனில் வந்த கட்டுரையை பார்போம்.

குஜராத்தில உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண் நிர்வாகிகளிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த நித்யானந்தாவின் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தனன் சர்மா புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் 21, 19, 15 வயது மகள்கள் மற்றும் 13 வயது மகன் ஆகியோரை பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் கல்வி பயிலுவதற்காக ஜனார்த்தனன் சர்மா சேர்த்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் ஹிராபூரில் உள்ள நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சவாஜ்னாபீடம் ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் நித்யானந்தாவால் நிர்வகிக்கப்படும் இந்த ஆசிரமத்தில் 50 க்கும் அதிகமான குழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துவந்த நிலையில் ஜனார்த்தனன் சர்மாவின் குற்றச்சாட்டு அனைத்து தரப்பிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் சேர்த்தேன். அதனையடுத்து, அவர்களில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர். இதில், எனது இரண்டு மகள்கள் மீட்கப்பட்டனர்,.ஆனால் இன்னும் ஒரு மகளை நித்யானந்தா தனது பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், சர்மாவின் மற்றொரு மகள் நித்தியானந்தா ஆசிரமம் குறித்து சில தகவல்கள், பிரபல தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். அதில், தன் முகத்தை மறைத்தபடி பேசிய அவர், 'ஆண்டாள்' குறித்த கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவை திட்டச் சொல்லிக் கெட்ட வார்த்தைகள் சொல்லிக் கொடுத்ததே நித்யானந்தா தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகாரை அடுத்து ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், காணாமல்போனதாக சொல்லப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அப்பெண்ணின் புகாரை அடுத்து போலீஸார், நித்யானந்தா ஆசிரமத்தில், ப்ராணப் பிரியா, பிரியா தத்துவா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நக்கீரன் இதழில் வந்த கட்டுரையின் நகல்
22-11-2019





2 comments:

Dr.Anburaj said...


துறவிகள் போல் இருப்பவர்களை கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு அடிக்கடி செல்லும் நான் எந்த துறவியின் காலிலும் இதுவரை

விழுந்து வணங்கியதில்லை. தங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கலாம். துறவிகளில் சில இதை

ஒரு அவசியமாக சம்பிராதயம் என்று எடுத்துச் சொன்ன துண்டு. ஆனாலும் நான் உடன்படவில்லை.இதன் காரணமாகவே நான் சங்கர மடம் ஆதீனங்களுக்கு செல்வதில்லை. அவர்களோடு எந்த தொடா்வையும் வைப்பதில்லை.
நித்தியானநதரை மறக்க வேண்டும் என்பதே எனது முடிவு. பணக்காரா்களுக்கு சட்டம் வளைகிறது. அதுமட்டும் உண்மை.
------------------------------------------------------------------
துறவிகள் மகா (ஆயுள் முழுவதும் ) பிரம்மச்சரிய விரதம் காக்க வேண்டும்.தவறும் துறவிகளுக்கு காவி உடை அணிய ஆயுட்கால தடை 2 வருடம் சிறைவாசம் என்று கிரிமினல் சட்டம் விதிகளில் விதிக்க வேண்டும்.
நல்லவன் என்று மயங்கி சிலா் அவரை கொண்டாடும் சில காட்சிகளை முன்னிலை படுத்துவது சுவனப்பிரியன் செய்யும் வம்பு

Dr.Anburaj said...

துறவி என்ற தலைப்பில் சுவாமி சிதபவானந்தா் இயற்றிய புத்தகம் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் திருப்பராய்த்துறை திருச்சி மாவட்டம் கிடைக்கும். இந்த புத்ககம் படித்தவர்கள் நித்தியானந்தா் போனறவர்களை இன்ம் கொள்வார்கள்.மக்கள் படித்திருந்தால் நித்தியானந்தாவை கல்லால் அடித்து விரட்டியிருப்பார்கள்.