Followers

Saturday, November 16, 2019

முஸ்லிம்களே... உங்கள் குழந்தைகளை சட்டம் படிக்க வையுங்கள்!



முஸ்லிம்களே... உங்கள் குழந்தைகளை சட்டம் படிக்க வையுங்கள்!
ஒரு பார்பனரை கைது செய்ய காவல் துறை வருகிறது. அவர் என்ன சொல்கிறார் 'நான் பூஜை பண்ண வேண்டும். காலை கடன்களை நிறைவேற்ற வேண்டும். எனது வேலைக்கு இடையூறு பண்ணினால் கோர்டில் அனைத்தையும் ஒப்பிப்பேன். உங்களுக்குத்தான் பிரச்னை? உங்களுக்கு சட்டம் தெரியுமா?' என்று தெனாவட்டாக கேட்கிறார்.
கீழே நிற்கும் காவல்துறையை சேர்ந்த சூத்திரர்களோ மிகவும் பவ்யமாக 'சாமீ... எங்களை ரொம்பவும் படுத்தாதீங்க. ரொம்ப நேரமாக வெளியிலேயே காத்திருக்கிறோம். கொஞ்சம் தயவு பண்ணுங்க' என்று பாவமாக மிகவும் மெல்லிய குரலில் பயந்து கொண்டு கோரிக்கை வைக்கின்றனர்.
கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி மேலே திமிருடன், கைது செய்ய வேண்டிய காவலர்களோ மிகவும் பாவமாக சன்னமான குரலில் கோரிக்கை வைக்கின்றனர். இதே வேறு சாதியை சேர்ந்தவர்களுக்கு வேறு மதத்தை சேர்ந்தவர்களுக்கு காவல்துறை இது போன்ற சேவகம் செய்யுமா? இந்த அடிமை புத்தி இவர்களுக்கு ரத்தத்திலேயே ஊறி விட்டது. காரணம் கீதையில் பகவானே வர்ணங்களை படைத்திருப்பதாக சொன்னதை உண்மை என்று நம்பியதால் வந்த அடிமைத்தனம் இது.
-----------------------------
இந்து மதத்துக்கு உருவாக்கப்பட்ட சட்ட நூலாகிய மனு தர்மத்திலிருந்து சில ஸ்மிருதிகளை படிப்போம்.
சிறு வயதிலிருந்தே இந்த சட்டங்களை பெரியவர்கள் சொல்லச் சொல்ல கேட்டு பழகியதால் ஒரு பார்பனரை அவர் குற்றமே செய்திருந்தாலும் அவரை அதிகாரம் பண்ண மற்ற சாதியினருக்கு நா எழ மறுக்கிறது. இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்னை.
"பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.
"சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்" அ.8. சு.271.
"பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317.
"யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." அ.11. சு.20.
"சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்." அ.10. சு.96.
"சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." அ.11. சு.13.
"சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு." அ.11. சு.12.
மோடி கொண்டு வரப் போகும் 'ராம ராஜ்யம்' இப்படித்தான் இருக்குமோ?

 நாடார் சமூகத்தில் பிறந்திருந்தாலும் பார்பன அடிமையாகவே மாறி விட்ட அன்பு ராஜையும் தினமும் இங்கு பார்க்கிறோம். மனுஸ்மிருதி உண்மை என்று நம்பியதால் வந்த வினை இது.




1 comment:

Dr.Anburaj said...

மனு நூலை நான் பார்த்ததில்லை.படித்ததில்லை.தீயிட்டு சிலர் கொளுத்துவதைப் பார்த்ததுண்டு. அது குறித்து எந்த வருததமும் எனக்கு யில்லை.இந்து பண்பாடு ஒரு புத்தகத்தை ஒரு நபரைச் சார்ந்தது அல்ல. பிரவாகமாக பரிணாமப்பட்டு ஜொலிக்கும்
ஒரு ஐீவ நதி போன்றது.

முஸ்லீம்கள் தாராயமாக சட்டம் படிக்க வேண்டும்.இதற்கும் மனு தரமத்திற்கும் சம்பந்தம் யில்லை.முட்டாள்தனமாக பதிவுகள் செய்வதில் சுவனப்பிரியனுக்கு ஈடு இணையில்லை.அரேபிய புத்தகங்களை படித்தான் மூளை வேலை செய்யாது.

முதலில் மதரசாக்களை மூடுங்கள். முஸ்லீம்கள் உருப்படுவார்கள்.