Followers

Monday, November 18, 2019

செசன்ய அதிபரும் அவரது தாயாரும் கஃபாவில்!

செசன்ய அதிபரும் அவரது தாயாரும் கஃபாவில்!
செசன்ய அதிபர் ரம்ஜான் கத்ரோவ்வின் தாயாருக்கு தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் கஃபாவின் உள்ளே தொழ வேண்டும் என்ற ஆசை. அதனை தனது மகனிடம் தெரிவிக்க அதிபர் சவுதி மன்னரோடு இது விஷயமாக பேசியுள்ளார். உள்ளே சென்று தொழுது கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. செசன்ய அதிபர் அவரோடு அரசு அதிகாரிகள் 10 பேர், அதிபரின் தாயார் மற்றும் சில பெண்கள் அனைவரையும் கவுரமாக அழைத்துச் சென்று உள்ளே தொழுவதற்கு வசதி செய்து கொடுத்தார் மெக்கா கவர்னர்.
உள்ளே சென்று தொழுதவுடன் தன்னையறியாமல் அழுகிறார் அந்த தாய். தனது பல வருட கனவு நிறைவேறியது கண்டு மகிழ்ச்சி. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று நமது நாட்டில் விவாதம் செய்து கொண்டுள்ளோம். ஆனால் கஃபாவின் உள்ளேயே பல பெண்கள் தொழுவதை இங்கு பார்க்கிறோம்.
அடுத்து கஃபாவுக்கு உள்ளே சிலைகள் இருப்பதாக சில இந்துத்வாவாதிகள் பதிவுகள் எழுதியிருந்தனர். கஃபாவின் உள்ளே எந்த சிலைகளும் இல்லை. அது வெறும் கட்டிடம்தான் என்பதை இக்காணொளியில் நாம் காணலாம்.
-------------------------------------------
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124


1 comment:

vara vijay said...

Rana ahmed had also visited mecca as an atheist and proclaimed she is an atheisit there. Why Allah was nog able to take any action.