துபாய் சார்ஜா நகரில் ஆறு வயது சிறுமி வீட்டில் இருக்கும் மொபைலை எடுத்து விளையாட்டுத்தனமாக 3 பட்டனை அழுத்தி போன் செய்வதுபோல் காதில் வைத்துள்ளார் ஆனால் குழந்தை சுமையா அழுத்திய நம்பர் துபாய் போலீஸ் கண்ட்ரோலுக்கு சென்றுவிட அவர்கள் போனை அட்டெண்ட் செய்து யார் என்று கேட்டால் ஒரு குழந்தையின் குரல் உடனே நிலைமையை புரிந்து அன்போடு உனது பெயர் என்ன என்று கேட்டதும் சுமையா என்று சொல்ல உனக்கு என்ன வேண்டும் என்றதும் எனக்கு இப்பவே பக்ரீத் பெருநாள் கிப்ட் வேண்டும் என சொல்லி இருக்கிறாள் சுமையா. அவர்கள் சிரித்துக் கொண்டே போனை கட் செய்து அந்த மொபைல் நம்பர் உள்ள வீட்டை கண்டுபிடித்து பெருநாள் அன்பளிப்புகளுடன் சென்றுள்ளனர்.
வீட்டுக்கு போலீஸ் வந்ததும் சுமையாவின் பெற்றோர் குழப்பமான மனதோடு போலீசை பார்க்க அவர்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் சுமையாவை பார்க்க வந்துள்ளோம் என்று கூறி கை நிறைய அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
1 comment:
அடிமைப்புத்தி ஆழமாக ....ஆழமாகப் பதிந்து விட்டதன் விளைவு சதா அரேபிய புகழபாடகின்றாா் சு..ன். இந்தியாவிலும் காவல்துறை சிறப்பாக செயல்படுகின்றது. மிக அல்பமான விதி விலக்குகளை கழித்து பார்த்தால் நமது காவல் துறைக்கு சதம் மதிப்பெண் கொடுக்கலாம்.துபாய் ஒரு சிறிய நாடு.இந்தியா பெரிய நாடு. 120 கோடி மக்கள் தொகையை தாண்டி விட்டது.
கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை பற்றி ஏதும் நல்லது இவா்கண்ணில் படாது.காதில் கேட்காது. ஒரு வகை அரேபிய அடிமைகளுக்கு உள்ளது. பிறருக்கு இந்த நோய் வராது.
Post a Comment