Followers

Wednesday, July 08, 2020

நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரை!

நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரை!
நபிகள் நாயகம் அவர்கள் தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த உரையை நபிகள் நாயகம் அவர்கள் துல் ஹிஜ்ஜா 9 ஹிஜ்ரி 10 (9 மார்ச் 632) அன்று அரபா நாளில் நிகழ்த்தினார்.
பேச்சின் இறுதியில் மக்களை நோக்கி இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.
(ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
என்று கூறியதாகவும் பதியப்பட்டுள்ளது.
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
பணியாளர்களைப் பேணுவீர்!
மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
சொர்க்கம் செல்ல வழி!
மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)


3 comments:

Dr.Anburaj said...

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
யாவருக்கும் ஈமின் அவனிவன் என்றன்மின் - திருமந்திரம்.
தேவையில் இருப்பவன் யாராக இருந்தாலும் உதவி செய்யுங்கள் - ( காபிர்களுக்கு உதவக் கூடாது என்பதுதானே முஹம்மதுவின் போதனை )
மனிதனை மனிதனாக மட்டும் பார்த்தவர்கள் ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய மகான்கள்.
------------------------------------------------------------------------------------
சாதி வெறி மொழி வெறி பண வெறி பெண்வெறி போல் அரேபிய சமய வெறியை உருவாக்கி போதித்து வளா்த்தவா் முஹம்மது.அவரது தவறான போதனையால் உலகில் பெரும் பகுதி இன்றும் மனித இரத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கின்றது.
யேமனில் சவுதி விமானங்கள் குண்டு மழை பொழிகின்றது. -எங்கே போனது மஹம்மது போதித்த சகோதரத்துவம் ???
ஆப்கனில் 27 இந்துக்கள் சுட்டுக் கொலை - எங்கே மனிதத்தன்மை -
---------------------------------------------------------------------------------------
மஹம்மது என்று ஒருவா் பிறந்திருக்காவிட்டால் உலகம் இன்னும் சிறந்த முறையில் சமாதானத்தில் வாழும்.

Dr.Anburaj said...

சிகாகோ உரையில் விவேகானந்தர் என்ன சொன்னார்?
1. எனது அருமை அமெரிக்க‍ சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன் என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது. உலகின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் அன்னையின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

2. இந்த மன்றத்தில் பேசிய சில பேச்சாளர்கள், உலகில் சகிப்புத்தன்மை என்ற கருத்து கீழ்த்திசை நாடுகளிலிருந்து பரவி வருகிறது என்பதை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

3. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை மதித்து ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்கு கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன். உலகளாவிய சகிப்புத்தன்மையை மட்டும் நாங்கள் நம்பவில்லை, அதோடு எல்லா மதங்களும் உண்மை என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.

4. உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், மதத்தலங்கள் அழிக்கப்பட்டு, பின்னர் தென்னிந்தியாவிற்கு தஞ்சம் கோரி வந்த இஸ்ரேல் மரபினர்களுக்கு புகலிடம் கொடுத்த புனித நினைவுகளை கொண்டவர்கள் நாங்கள் என்று பெருமைப்படுகிறேன்.

5. பாரசீக மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துக் கொண்டிருக்கும் மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

6. என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

"எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்

இறுதியிலே கடலில் சென்று

சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்

பின்பற்றும் தன்மை யாலே

துங்கமிகு நெறி பலவாய் நேராயும்

வளைவாயும் தோன்றி னாலும்

அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை

அடைகின்ற ஆறே யன்றோ!"

7. இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தச் சபை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர், சிக்கல்களில் உழல்கின்றனர், ஆனால் இறுதியில் என்னையே அடைகின்றனர்.

8. இனவாதம், மதசார்பு இவற்றால் உருவான கொடூர விளைவுகள், அழகிய இந்த உலகை நெடுங்காலமாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை வன்முறையால் நிரப்பியுள்ளன. உலகம் ரத்த வெள்ளத்தால் சிவந்துவிட்டது. எத்தனை நாகரீகங்கள், எத்தனை நாடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சரியாக சொல்லிவிடமுடியாது.

9. இதுபோன்ற ஆபத்தான அரக்கர்கள் இல்லை என்றால், மனித சமுதாயம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கான காலம் முடிந்துவிட்டது. இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெறிகளுக்கும், வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன். அது வாளால் ஏற்பட்டாலும் சரி, பேனாவினால் ஏற்பட்டாலும் சரி.

Dr.Anburaj said...

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
யாவருக்கும் ஈமின் அவனிவன் என்றன்மின் - திருமந்திரம்.
தேவையில் இருப்பவன் யாராக இருந்தாலும் உதவி செய்யுங்கள் - ( காபிர்களுக்கு உதவக் கூடாது என்பதுதானே முஹம்மதுவின் போதனை )
மனிதனை மனிதனாக மட்டும் பார்த்தவர்கள் ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய மகான்கள்.
------------------------------------------------------------------------------------
சாதி வெறி மொழி வெறி பண வெறி பெண்வெறி போல் அரேபிய சமய வெறியை உருவாக்கி போதித்து வளா்த்தவா் முஹம்மது.அவரது தவறான போதனையால் உலகில் பெரும் பகுதி இன்றும் மனித இரத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கின்றது.
யேமனில் சவுதி விமானங்கள் குண்டு மழை பொழிகின்றது. -எங்கே போனது மஹம்மது போதித்த சகோதரத்துவம் ???
ஆப்கனில் 27 இந்துக்கள் சுட்டுக் கொலை - எங்கே மனிதத்தன்மை -
---------------------------------------------------------------------------------------
மஹம்மது என்று ஒருவா் பிறந்திருக்காவிட்டால் உலகம் இன்னும் சிறந்த முறையில் சமாதானத்தில் வாழும்.