Followers

Friday, July 10, 2020

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய அவசர கால 105வது இரத்ததான முகாம்.

TNTJ ரியாத் மண்டலம் நடத்திய அவசர கால 105வது இரத்ததான முகாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்” சார்பாக இன்று 10.07.2020 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “105வது அவசர இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்  மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் “76 நபர்கள்” ரியாத் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு “66 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னார்வலர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் இரத்த வங்கி வளாகத்தில் ஒன்று கூடுதல் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும் சவூதி அரேபியா சுகாதாரத்துறை (MOH) மற்றும் உலக சுகாதாராத்துறை (WHO) அறிவுறுத்தலின் படி அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக குருதிக் கொடையாளர்களின் பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் இரத்த வங்கி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போதைய காலச் சுழலில் இம் முகாம் மிகப்பெரும் முன்னுதாரணமாகவும், ஏனைய தன்னார்வ கொடையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றிருந்தது.

இம்முகாமில் “சித்தீன், ஒலையா, பத்தாஹ், கதீம் செனையா” ஆகிய கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். உணவு மற்றும் வாகன ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகளுடன் இணைந்து மண்டல நிர்வாகிகள் செய்திருந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனை இயக்குனர்  டாக்டர்.அம்மார் அல் ஜூஹைர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!

கோரோனோ அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் குருதிக் கொடையளித்த சகோதர்களுக்காகவும் களப்பணியாற்றிய அனைத்து சகோதர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
ரியாத் மண்டலம்
10.07.2020





No comments: