Followers

Friday, July 10, 2020

7மாத இந்தியக் குழந்தையின் உயிரைக் காத்த சவூதி மன்னரின் மனித நேயச் செயல்!

7மாத இந்தியக் குழந்தையின் உயிரைக் காத்த
சவூதி மன்னரின் மனித நேயச் செயல்!

-50 லட்சம் மதிப்பிலான மருத்துவத்தை
இலவசமாக வழங்கிய சவூதி அரசு!


குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன் செல்வராஜின்
மனைவி ரோஸ் ஜாஸ்லின் சவூதி நஜ்ரானில் 7மாதத்தில்
குறை பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.

குழந்தையின் இதய வால்வில் பிரச்சினை; உயிருக்குப் போராடிய குழந்தைக்கு 38 லட்சம் மருத்துவ செலவை சவூதி அரசே ஏற்றது;

மேலதிக சிகிச்சைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜித்தா கொண்டு வந்து சுமார் 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை இலவசமாக
வழங்கி அந்த குழந்தையின் உயிர் காத்துள்ளது சவூதி அரசு!

சாதி மதம் பாராமல் உதவிய சவூதி அரசின் இந்த செயல்
மனித நேயத்தை நிலைநாட்டுவதாக அமைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்...

இந்த நிகழ்வை படிக்கும் போது.......
மருத்துவத்திற்கான கட்டணம் ரூ4000 பணம் தராததால்
வயதான முதியவரை மருத்துவமனையில்
கயிற்றால் கட்டி வைத்த இந்தியாவில் நடந்த கொடூரம்தான்
நமக்கு சட்டென நினைவுக்கு வருகின்றது. 



1 comment:

Dr.Anburaj said...

சவுதி மன்னா் இந்த விசயத்தில் எப்படி தலையிட்டாா் என்பது தெரியவில்லை. இருப்பினும் இது மிகுந்த மனித நேயத்துடன் பார்க்கப்பட வேண்டும்.சவுதி மன்னா் காபீர்களுக்கு உதவிட கூடாது என்ற அரேபிய வல்லாதிக்க கருத்தை தள்ளி விட்டாா் போலும். யாவருக்கும் ஈமின் அவன் இவன் என்றன் மின் - என்ற திருமந்திரத்தை படி்த்து இருக்க வேண்டும். அண்மை காலங்களில் அரேபிய நாடுகளில் பகவத்கீதை மற்றும் யோகா பற்றிய விழிப்புணா்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டு வருகின்றது.

சவுதி மன்னா் செய்த உதவியை நன்றியுடன் பாராட்ட வேண்டும்.அவர் நல் வாழ்விற்காக பிராத்த்தனை செய்ய வேண்டும். வாழ்த்த வேண்டும்.

இந்தியாவை ஏன் இடிக்க வேண்டும் ? இந்த அரேபிய அடிமைத்தனம் இந்திய வெறுப்புதானே வேண்டாம் என்பது.

இந்தியாவில் அரசு மருத்துவமனையில் அனைத்தும் இலவசம்தானே.ஏன் பழிக்கின்றீர்கள்.