Followers

Tuesday, January 13, 2015

ஜெர்மனியில் முஸ்லிம்கள் நடத்திய அமைதி பேரணி!



சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் ஃபிரான்ஸில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் முஸ்லிம்கள் மிகப் பெரும் பேரணி ஒன்றை நேற்று நடத்தியுள்ளனர். ஃப்ரண்ட்ஸ்பர்க் கேட்டிலிருந்து இந்த பேரணி தொடங்கியது. முதலில் புனித குர்ஆன் வசனங்கள் ஓதப்பட்டு பேரணியை தொடங்கினர் முஸ்லிம்கள். இந்த நிகழ்ச்சி ஜெர்மனியில் தொலைக் காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது.

ஜெர்மனியின் பிரசிடெண்ட் காவ்க் இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசியதாவது:

'தீவிரவாதிகள் நம்மை பிரிக்க நினைக்கின்றனர். அனால் அது அவர்களுக்கு எதிராகத்தான் முடிந்துள்ளது. இன்று நம்மை அவர்கள்தான் ஒன்றாக்கியிருக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களைப் பார்த்து நாங்கள் பயந்து ஓடி விடவில்லை. உங்களை ஓரங்கட்டி விட்டு எங்கள் நாட்டையும் எங்கள் மக்களையும் முன்பு போல் திறம்பட முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.' என்றார்.

ஜெர்மன் சான்ஸ்லர் பெண்மணி மார்கெல் தனது பேச்சில் ' இஸ்லாம் மார்க்கம் ஜெர்மனியின் ஒரு அங்கமாக மாறி விட்டது. அதை யாராலும் மாற்ற முடியாது. இந்த நாட்டின் அதிபர் என்ற முறையில் சொல்கிறேன் இங்கு வாழும் அனைத்து இன மொழி மத மக்களும் சிறப்பாக நடத்தப்படுவர். அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்து இங்கு குடியேறி இருந்தாலும் அவர்களும் இந்நாட்டு பிரஜைகளே! நாம் அனைவரும் ஜெர்மனியர் என்ற உறுதியை மேற் கொள்வோம். தீவிரவாதத்தை முறியடிக்க சபதமேற்போம்' என்று உணர்வு பூர்வமான உரையை நிகழ்த்தினார்.

'பெகிடா' என்ற அமைப்பு ஃப்ரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதலை காரணமாக வைத்து இஸ்லாத்துக்கு எதிரான பேரணியை சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. அதில் 25000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு பெகிடாவுக்கு எதிராக அதை விட அதிகமாக 35000 பேர் கலந்து கொண்டு இஸ்லாமியர்களை ஆதரித்து பேரணியாக சென்றர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஃப்ரான்ஸ் தாக்குதலுக்கு முஸ்லிம்கள் காரணமாக இருந்திருக்க மாட்டார்கள் என்று ஜெர்மன் மக்கள் முடிவெடுத்துள்ளதையே இந்த ஆதரவு காட்டுகிறது. ஜெர்மன் சான்ஸ்லர் மார்கெல்லின் இஸ்லாத்துக்கு ஆதரவான பேச்சினால் பெகிடா அமைப்பினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

ஃப்ரான்ஸ் தாக்குதலை வைத்து ஐரோப்பாவிலும் முக்கியமாக ஜெர்மனியிலும் இஸ்லாமியர்களை ஒழித்து விடலாம் என்று திட்டமிட்ட எதிரிகளை இறைவன் மண்ணைக் கவ்வ வைத்துள்ளான். எல்லா புகழும் இறைவனுக்கே!

"அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். இறைவனும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் இறைவன் மிகவும் மேன்மையுடையவன்"

அல்குர்ஆன் 8:30

தகவல் உதவி
டெலிக்ராஃப், சவுதி கெஜட்
12-01-2015

2 comments:

Anonymous said...

//'பெகிடா' என்ற அமைப்பு ஃப்ரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதலை காரணமாக வைத்து இஸ்லாத்துக்கு எதிரான பேரணியை சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. அதில் 25000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு பெகிடாவுக்கு எதிராக அதை விட அதிகமாக 35000 பேர் கலந்து கொண்டு இஸ்லாமியர்களை ஆதரித்து பேரணியாக சென்றர்//
பிரான்ஸ் தாக்குதல் நடக்கும் முன்பே பெகிடா தனது பேரணியை நடத்திவிட்டது இது ஒரு நல்ல ஆரம்பம். எதற்கும் ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வரும். அந்த இருபத்தைந்தாயிரம் பேரும் துலுக்கத்துவத்தின் அபாயத்தை புரிந்து கொண்டவர்கள். எனவே மிக விரைவில் புரியாத அந்த முப்பத்தைந்தாயிரம் முட்டாள்களும் உண்மையை புரிந்து கொள்வார்கள். எதிர்ப்பே இல்லை, எங்கள் மதம் வேகமாக பரவுகிறது என்று துலுக்கர்கள் பீற்றி கொண்டிருந்த இடத்தில எதிர்ப்பு குரல் எழும்ப ஆரம்பித்து இருப்பதே நல்ல விஷயம்.

Anonymous said...

//
'பெகிடா' என்ற அமைப்பு ஃப்ரான்ஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதலை காரணமாக வைத்து இஸ்லாத்துக்கு எதிரான பேரணியை சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. அதில் 25000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு பெகிடாவுக்கு எதிராக அதை விட அதிகமாக 35000 பேர் கலந்து கொண்டு இஸ்லாமியர்களை ஆதரித்து பேரணியாக சென்றர்.//பிரான்ஸ் தாக்குதல் நடக்கும் முன்பே பெகிடா தனது பேரணியை நடத்திவிட்டது இது ஒரு நல்ல ஆரம்பம். எதற்கும் ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வரும். அந்த இருபத்தைந்தாயிரம் பேரும் துலுக்கத்துவத்தின் அபாயத்தை புரிந்து கொண்டவர்கள். எனவே மிக விரைவில் புரியாத அந்த முப்பத்தைந்தாயிரம் முட்டாள்களும் உண்மையை புரிந்து கொள்வார்கள். எதிர்ப்பே இல்லை, எங்கள் மதம் வேகமாக பரவுகிறது என்று துலுக்கர்கள் பீற்றி கொண்டிருந்த இடத்தில எதிர்ப்பு குரல் எழும்ப ஆரம்பித்து இருப்பதே நல்ல விஷயம்.