Followers

Sunday, June 05, 2016

'குன் ஃபய குன்' - அறிவியல் விளக்கமும் ரஹ்மானின் இசையும்!



'குன் ஃபய குன்' - அறிவியல் விளக்கமும் ரஹ்மானின் இசையும்!

6:73 - அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது உடனே ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி அதிகாரம் அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; யாவற்றையும் நன்கறிந்தோன்.


2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி இல்லாமையிலிருந்து, தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; உடனே அது ஆகிவிடுகிறது.

كُن فَيَكُونُ குன்பயகூன் என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் 'ஆகு' என்று சொன்னால் உடன் ஆகி விடும். இங்கு தனது வல்லமையை மனிதர்களுக்கு இறைவன் விளக்குகிறான். இன்றைய அறிவியல் இந்த வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று பார்ப்போம்.

சிங்குலாரிட்டி என்பது என்ன?

'வினோதத் தன்மை' (SINGULARITY) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப் படும் அல்லது பயன்படாத நிலையை அடையும் இடமே 'சிங்குலாரிட்டி' (வினோதத் தன்மை) ஆகும். பெரு வெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்த கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெரு வெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே 'பெரு வெடிப்பு வினோதம்' (BIG BANG SINGULARITY) ஆகும்.

-'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்'(A BRIEF HISTORY OF TIME) பக்கம் 9

-அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.

இந்த இடத்தில் அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் கூற்றை சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகின் காலம் தொடங்குவதே பெரு வெடிப்பில் இருந்துதான். பெரு வெடிப்பு என்று நிகழ்ந்ததோ அன்றிலிருந்துதான் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெரு வெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பது தெளிவாகிறது. பெரு வெடிப்புக்கு முன் அதை துல்லியமாக நிகழ்த்திக் காட்டியது யார்? என்ற கேள்வி இங்கு இயல்பாக நமக்குள் எழும்.

முன்பு 'பேரண்டம் என்றும் நிலையானது: மாற்றமில்லாதது: ஆதியோ அந்தமோ இல்லாதது: அது என்றென்றும் நிலைத்திருப்பது: அதற்கு ஒரு படைப்பாளன் தேவையில்லை:' என்றுதான் பல அறிஞர்களும் சொல்லி வந்தனர். 'மாறா நிலைக் கோட்பாடு' என்பதோடு இந்த கருத்து ஏறத்தாழ ஒத்து வரும். நாத்திகத்திற்கும் இந்த கருத்து வலு சேர்க்கும் விதமாக இருந்ததால் பலரும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அறிஞர் அரிஸ்டாட்டிலும் இந்தக் கருத்தை ஆதரித்தார்.

ஆனால் அறிஞர் ஐசக் நியூட்டன்(1672-1727) பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பேரண்டம் இறைவன் என்ற ஒருவனின் துணையில்லாமல் உண்டாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 'பிரின்ஸிப்பியர்' (Matthematical Principles Of Natural Philosophy) என்ற புகழ் பெற்ற நூலில் நியூட்டன் இந்த தகவலைத் தெரிவிக்கிறார். ஆனால் இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு அவரால் விடை காண முடியவில்லை.

இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கால கட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு 'ஒரு முழு முதல் அணு' இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின்போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரம்மாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.

பெரு வெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும கன ஹைட்ரஜன் வாயுவின் மையக் கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக் கரு உருவாகி இருக்கலாம். அவைகளிலிருந்து 'லிதியம்' மற்றும் 'பெரில்லியம்' போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும். என்று அறிஞர் ஹாக்கிங் மேற்கண்ட புத்தகம் பக்கம் 124ல் கூறுகிறார்.

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நடசத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்த பொருட்களுமே இல்லாத ஒரு சூன்ய நிலையிலேயே இருந்துள்ளதாக நாம் அறிகிறோம். பெரு வெடிப்புக்கு முன் மேற் கூறிய பொருட்கள் யாவும் முன்னரே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை எனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் 'பெரு வெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிணாமம் பூஜ்யமாகும். அதன் வெப்பம் எல்லையற்றதுமாகும்' என்கிறார்.

-A Brief History of Time பக்கம் 123

பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை படைத்தது உருவாக்கியது யார்?

'விண்ணகத்தை நாம் வல்லமையைக் கொண்டு படைத்தோம்'
-குர்ஆன் 51:47

ஆம் இன்றைய அறிவியல் பெரு வெடிப்புக்கு முன்னால் திடீரென்று புறப்பட்ட ஒரு ஆற்றலின் மூலமே பெரு வெடிப்பு சாத்தியமானது என்பதை குர்ஆனும் மெய்ப்பிப்பதைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை எண்ணி வியக்கிறோம். ஆற்றலின் வரைவிலக்கணம் கூட தெரியாத அன்றைய அரபுலகில் பிறந்த முகமது நபிக்கு இந்த உண்மைகள் எவ்வாறு தெரிய வந்தது?

-----------------------------------------------------------


குர்ஆனின் இந்த அருமையான வசனங்கள் இவ்வளவு அழகிய அறிவியல் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்க நமது சூஃபி பிரியர்களில் சிலர் இதனை கவிதையாக வடிக்க அதை நம் ஏ.ஆர்.ரஹ்மானும் அருமையான பாடலாக கொடுத்துள்ளார். இசையும் பாடலும் சேரும்பொது அங்கு சிந்தனை அகன்று விடுவதைப் பார்க்கிறோம். 'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.

'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.

எனவே ரஹ்மான் அவர்களே! நீங்கள் சினிமாவுக்கு இசை அமைத்து பல பாராட்டுக்களை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் தனிப்பட்ட விஸயம். ஆனால் இஸ்லாமிய கருத்தை இசை மூலம் கொடுக்க முயற்சிக்கும் இந்த பாணியை விட்டு விடுங்கள். இதற்கு இஸ்லாமியரிடத்திலும் மற்ற மதத்தவரிடத்திலும் எந்த வரவேற்பும் கிடைக்காது. சில கைத்தட்டல்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். மனதை மாற்றி விடும் சக்தி உங்கள் இசைக்கு இல்லை. இஸ்லாத்தை ஏற்ற 90 சதமான பேர் அதன் கருத்துக்களை விளங்கித்தான் வந்தார்களேயொழிய சூஃபித்துவ இசையினால் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.

இறைவன் உங்களுக்கு குர்ஆனின் உண்மையான ஞானத்தை மேலும் அதிகப்படுத்துவானாக!

3 comments:

Dr.Anburaj said...


திரும்ப திரும்ப உறுதியாகச் சொல்கின்றேன்.அறிவியல் தத்துவங்கள் எதும் குரானில் கிடையாது.
தாங்கள் எழுதியிருப்பது அண்டபுளுகு.ஆகாச புளுகு.

Dr.Anburaj said...

பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை
May 24, 2016
- தி.இரா. மீனா

ஒரு யுகக்கவிஞன் என்ற அடையாளத்திற்குள் அடங்கும் பாரதி இறந்தகாலக் காட்சித்தெளிவும், நிகழ்கால முரண்பாடுகளின் சாரமும் அறிந்தவன் என்பதால் எதிர்காலத்தை உணர்ந்தவனாகிறான். மனிதவர்க்கத்தின் வரலாற்றில் இந்த நூற்றாண்டைப்போல வேறு எப்போதும் சமுதாய உணர்வு இவ்வளவு ஆழமும்,அகலமும் பெற்றிருந்ததில்லை. புதுமை, சமுதாய உணர்வு, விரிவு, தீர்க்கமான பார்வை என பாரதியின் பார்வை தனிப்பட்டு அமைந்திருக்கிறது. இயற்கை, சமுதாயம்,மனம் என்று மூன்று பிரிவாக வாழ்க்கையைக் கண்ட பாரதி, தனக்கே உரிய முறையில் அவைகளுக்கு விளக்கம் கண்டு வாழமுயன்றதன் விளைவு – கலை, இலக்கியத் தத்துவங்கள்,,கோட்பாடுகள் அவன்வசம் வளைந்தன. அதனால் உருவம், உள்ளடக்கம் இரண்டும் அவனுக்கெனத் தனியானது.

உயர்ந்த சிந்தனைகள் உலகப் பொதுவானவை. அவற்றில் ஆழ்ந்துபோனவர்களுடைய கருத்தில் அவை நிலையாகத் தங்கி, அவர்களின் படைப்புகளில் அப்படியே சிலசமயங்களில் சிலகருத்துக்கள் சிறிதும் வேறுபாடில்லாமல் வெளிப்படுகின்றன. இதுவே ஆளுமையாகிறது. இவ்வகையில் ஆன்மீகம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்திய பாரதியின் படைப்புகளில் வேதத்தின் ஆளுமை மிக இயல்பாகவே இருக்கிறது. அதனால்தான் “பாரத சக்தி யாகத்தில் மந்திரங்களைத் தமிழில் பாடிய வேதக்கவி பாரதியே,” ”என்று சுத்தானந்த பாரதியின் பாராட்டு அமைகிறது.

வித்” என்பதை வேர்ச்சொல்லாகக்கொண்ட வேதம் என்பதற்கு ’அறிதல்’ என்று பொருளாகும். ’பரம்பொருளைக் குறித்த மெய்ஞ்ஞானம்’ என்று இதனை விளக்கிச் சொல்லமுடியும். அழிவில்லாத வேதம் காதால் கேட்டறியப்படுவது ஒவ்வொரு வேதமும் ஸம்ஹிதை, பிராமனம் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஸம்ஹிதை மந்திரங்களின் தொகுதியாகவும், பிராமணம் மந்திரங்களின் பொருளையும், பயன்படுத்தும் விதத்தையும் விரித்துச் சொல்வதாகும்.

ஆரண்யகங்கள் பொது வழிபாட்டுமுறைகளின் குறியீட்டு விளக்கவுரைகள்மீதான தவம் இயற்றுவதைக் குறிப்பிடுவதாகும். உபநிடதங்கள் வாழ்க்கையின் இறுதிலட்சியத்தைத் தத்துவமாகக் காட்டுபவை. வரம்பில்லாத விரிவுடைய வேதம் மானுடத்தின் பண்பாடு, செம்மை, நல்லொழுக்கம் ஆகிய அனைத்தையும் உன்னதப்படுத்துவதாகும். முறைப்படுத்திக் கடைப்பிடித்தால பிரம்மத்தை உணரமுடியும் என்பது அடிப்படைத் த்த்துவம்.

’இந்த ஆன்மாவே பிரம்மம்’” ’அது நீயாக இருக்கிறாய் ”

’உன் விழிப்பே பிரம்மம்’” ’பிரம்மம் நானே’

இவை வேதத்தின் அடிப்படை நிலைகளாகும். வேதரிஷிகள் காலத்தில் விக்கிரக ஆராதனை, சந்நியாசம் போன்றவைகள் இல்லை. பக்தி மட்டுமே உண்டு. ’இந்திரன் ,அக்னி, வாயு. வருணன் என்ற பெயர்கள் பரமாத்மாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தவிர, சூரியன், கடல் ஒளி, வானம், பனி, வைகறை என இயற்கையைத்தான் வேதம் போற்றியிருக்கிறது

பாரதி பன்மொழிக் கவிஞன். அவனுக்கு ஓரளவு வடமொழித் தொடர்பு இருந்ததெனினும் புதுவையில் அரவிந்தரோடு ஏற்பட்ட நட்பு வேதத்தின்மீது நெருக்கம் கொள்ளக் காரணமாயிருந்தது. வடமொழி இலக்கியத்தில் இருவருக்கும் இருந்த புலமை,அடிக்கடி வேதக் கருத்துகளை விவாதித்த தன்மை,ஆகியவை பாரதியின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை வேதத்தின் மீது ஏற்படுத்தியது.

பாரதி அத்வைத்வத்தில் பெரும் நம்பிக்கைகொண்டவன். அதுதான் அவனது வேதப்பாடல்களின் அடிப்படை.’ தன்னை உணர்வதுதான்’ இந்தத் தத்துவத்தின் உச்சக்கட்டம் என்பதை அவன் பாடல்கள் காட்டுகின்றன.

இயல்பில் வேத இலக்கியம் குறியீடு சார்ந்தது. வேதமொழியில் ’காடு ”என்பது உள்ளத்தையும், வானம் என்பது ”ஞானத்தையும்’,’ ஆர்வம்” என்பது ’சித்தத் துணிவு ”என்பதையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்புகள் உண்டு,.’ அக்னி பகவான்’ கவிதையில் வேதரிஷிகள் தீயின்மீது நெய்யூற்றி அக்னியைப் போற்றுகின்றனர்.

தீ வளர்த்திடுவோம்—பெருந்தீ

வளர்த்திடுவோம்

சித்தத் துணிவினை மானுடக் கேள்வனைத்

தீமை அழிப்பவனை-நன்மை

சேர்த்துக் கொடுப்பவனைப்—பல சீர்களுடையவனை”

போற்றுவதாக பாரதியின் பாடல் அமைகிறது. சில பாடல்கள் வேதத்துடன் நேரடியான தொடர்புகொண்டவையாக உள்ளன. வேள்விப்பாட்டு இதற்குச் சான்றாகும்.

“அச்சம், துயரம் என்ற இரண்டு

அசுரர்கள் வந்து இங்கு எம்மை

சூழ்ந்து நின்றார்“

என்று தேவர்கள் சொல்வதாக அறிமுகம் செய்துவிட்டு அசுரர் செய்யும் துயரங்களைப் பட்டியலிடுகிறான். பின்பு,

“”பாடிநின்று உனைப் புகழ்வோம்—

எங்கள் பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்””

என்று வேள்விப்பாட்டில் வேண்டுகிறான் .துன்பம் தரக்கூடிய அச்சம், கவலை ஆகியவை மனித அழிவுக்குக் காரணம். இந்த உணர்வுகள் மனித உயிருக்குள் புகுந்து அறியாமையை வளர்க்கின்றன. மனிதனை ஞானம் பெறவிடாமல் தடுக்கின்றன. அக்னிக்குஞ்சு என்ற சித்தத் துணிவு ஞானத்தை வளர்க்கிறது என்று குறியீட்டு நிலையில் கவிதை அமைகிறது.

Unknown said...

Now music became halal. Why are you having double stand.