

இந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..!
மிகக்கடினமான வேலை என்றும், ஊதியம் மிகவும் குறைவு என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறது என்றும் கண்ணால் கண்ட சாட்சிகளிடமிருந்து தகவல்.
எனவே யாரும் அறியாது அநியாயமாக யாரும் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம். பிறருக்கும் இதைப்பற்றி அறியப் படுத்துங்கள்.
கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடந்துள்ளது. யாரேனும் உங்கள் பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட் போன்ற வற்றை ஒப்படைத்து இருந்தால் திரும்ப கேட்டு வாங்கிவிடுங்கள்.
ஒரு வேளை இந்த கண்ஸல்டண்சி உங்களிடம் தர மறுத்தால், எம்மை ( சுல்தான் சலாகுதீன் & Arul Kumar ) அணுகுங்கள் தகுந்த வழியில் அவர்களிடம் இருந்து அதை இன்ஷா அல்லாஹ் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
நாடு விட்டு நாடு சென்று பிழைப்பது என்பது இங்கு நாம் படும் சிரமம் அங்கு படாமல், இங்கு சம்பாதிப்பதை விட கூடுதலாக சமபாதித்து விட்டு, சில காலங்களில் நம் நாடு வந்து சேர்ந்து விடத்தான்.
அங்கு சென்று அடிமை போல அவதிப்பட போகக்கூடாது சகோதரர்களே. இறைவன் நம் அனைவரையும் அத்தகைய சிரமங்களை விட்டு காப்பாற்றட்டும்..!
Thanks to
சுல்தான் சலாகுதீன்
No comments:
Post a Comment