
மரத் துண்டுகளில் குர்ஆனை மனனம் செய்யும் ஆஃப்ரிக்கர்!
ஆப்ரிக்காவில் உள்ள இந்த குழந்தைகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் மரத் துண்டுகளில் குர்ஆன் வசனங்களை எழுதி மனனம் செய்கின்றனர். அதற்கேற்ற சூழலை இந்த குழந்தைகளின் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குர்ஆன் மனனம் செய்தே ஆக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. அதனை சரி செய்ய முதலில் முயற்சிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் காலத்தில் அவரது தோழர்கள் முறை வைத்து இஸ்லாத்தை கற்றார்கள். ஒருவர் வேலைக்கு போவார். மறு நாள் அவர் இஸ்லாத்தை கற்பார். பாடம் பயின்றவர்கள் வேலைக்கு போனவருக்கு ட்யூஷன் எடுப்பார்கள். இதனால்தான் அவர்கள் கவுரமாக வாழ்ந்து மரணித்தார்கள். நபிகள் நாயகமும் தங்களுடைய வருமானத்துக்காக 100 ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை வைத்திருந்தார்கள். எவரிடமும் கையேந்தியதில்லை.
எனவே இதன் மூலம் அறிவது அந்த ஆஃப்ரிக்க மக்களின் நம்பிக்கையை பாராட்டுவோம். அதே நேரம் அந்த சிறுவர்கள் உலக கல்வியையும் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். மாறி வரும் அறிவியல் உலகுக்கு ஏற்ப இஸ்லாமியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது தமிழகத்தில் உள்ள மதரஸாக்களில் நவீன கல்வியையும் புகுத்த வேண்டும். ஏழு வருடம் படித்து வெளியேறும் மாணவன் உலக சவால்களுக்கு ஈடு கொடுக்கக் கூடியவனாக வெளியேற வேண்டும். தற்போதுள்ள மதரஸா கல்வி முறை புரோகிதர்களைத்தான் உருவாக்குகிறது. கணிணி அறிவும் இல்லை: ஆங்கில அறிவும் இல்லை: உலக அறிவும் இல்லை: இப்படித்தான் அனேக மாணவர்கள் பட்டம் கொடுத்து வெளியேற்றப்படுகிறார்கள். முடிவில் அவர்கள் இமாமாகவோ மோதினாகவோ ஃபாத்திஹா ஓதும் முல்லாவாகவோ மாறி விடுகின்றனர். நபிகள் நாயகம் காட்டித்தந்த இஸ்லாம் இதுவல்ல. இதனை நம் சமூகம் என்று உணருகிறதோ அன்று தான் இஸ்லாமியர் உண்மை முஸ்லிம்களாக வாழ முடியும்.
1 comment:
உலகிற்கு பெரும் முட்டாள்களையும் காடையா்களையும் அளித்து வரும் அமைப்புதான் மதரஸாக்கள் என்பதை சுருக்கமாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அரேபிய மத காடையா்கள் - ஜகாதிகளைள உருவாக்கும் பண்ணை மதரஸாக்கள்தாம். பாக்கிஸ்தானில் உள்ள மதரஸாவிலும் இந்தியாவில் உள்ள மதரஸாவிலும் ஒரே பாடத்திட்டம். என்ன கொடுமைபாருங்கள். என்ன முட்டாள்தனம் பாருங்கள். நாடு உருப்படுமா ? அமைதி வருமா ? இந்தியாவை நேசிக்காத கூட்டத்தை உருவாகும் பள்ளிதான் மதரஸா என்பது உண்மை.மதரஸாக்கள் என்று ஒரு பள்ளிகள் இருப்பதே வீண். அவற்றை மூட வேண்டும்.முஸ்லீம்கள் உருப்பட அது மிகவும் முக்கியமானது. காட்டுமிராண்டி காலத்து அரேபிய நாட்டு புத்தகங்களை வேதம் என்று தலையில் போட்டு கொண்டாடி மனப்பாடம் பண்ணி தானும் அழிந்து பிறரையும் அழிப்பது முட்டாள்தனம்.
Post a Comment